மகளின் திருமண கொண்டாட்டம் ! ரஜினி ஆடிய நடனம் ! களை கட்டிய லீலா பேலஸ்!

மகளின் திருமண கொண்டாட்டம் ! ரஜினி ஆடிய நடனம் ! களை கட்டிய லீலா பேலஸ்!

தமிழ்நாட்டின் என்றும் மாறாத சூப்பர் ஸ்டார் ஒரே ஒருவராகத்தான் இருக்க முடியும். அது நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் ரசிகர்கள் உண்டு. சில ஜப்பான் ரசிகர்கள் இவரது படத்தை வெளியாகும்போதே பார்ப்பதற்காக இந்தியாவுக்கு வருவதும் நடப்பதுண்டு.


இவரது இளைய மகள் சௌந்தர்யாவின் இரண்டாவது திருமணம் கடந்த பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதி பாரம்பர்ய முறைப்படி நடைபெற்றது. இவர் கோவையை சேர்ந்த தொழிலதிபர் விசாகன் வணங்காமுடியை மணக்கிறார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். சௌந்தர்யாவிற்கு வேத் எனும் மகன் இருக்கிறார்.


சௌந்தர்யா சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறார். விசாகன் மருத்துவ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவரின் திருமணத்திற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் நடிகர்களை ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேரில் வந்திருந்தார்.


மதிமுக கட்சி தலைவர் வைகோ வந்திருந்தார்.மற்றும் முக்கிய சினிமா தயாரிப்பாளர்கள் பலர் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து மணமக்களை ஆசிர்வதித்தனர்.


இதில் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்த் முத்து திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.எப்போதும் அமைதியாக கைகட்டி அமரிந்திருக்கும் ரஜினியை மட்டுமே பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த நடனம் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.


திருமண நிகழ்ச்சியில் வெளியான சில புகைப்படங்கள்


மணமகள் சௌந்தர்யா பிங்க் நிற புடவையிலும் மணமகன் விசாகன் வெளிர்பச்சை நிற பட்டு வேட்டியும் அணிந்து இருந்தனர்.தனது அம்மாவின் திருமண மெஹந்தியை மகன் வேத் ஆச்சர்யமுடன் பார்க்கும் காட்சி.


rajini6
சௌந்தர்யா, மகன் வேதுடன் விசாகன் வணங்காமுடி.


rajini2


ரஜினியின் மூத்த மருமகன் தனுஷ் திருமணத்தில் கலந்து கொண்டபோது


rajini3


நடிகரும் தோழருமான கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் மணமக்கள்


 


திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கழகத்தார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்


 இந்த திருமணம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னதாக மணமகள் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தன் வாழ்வில் இருந்த முக்கியமான மூன்று ஆண்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். முதலில் தனது தந்தை ரஜினிகாந்த் இரண்டாவது தன் செல்ல மகன் வேத் மூன்றாவது தான் திருமணம் செய்ய போகும் விசாகன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சில முக்கிய புகைப்படங்கள் 

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர் 


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.