பட்டு புடவையும், நகை நட்டும் என்று பட்டியால் இடும் போது, அங்கு நிச்சயம் வங்கி இருக்கும். இதனை தவிர்த்து விட்டு, மணபெண்ணுக்கு அலங்காரம் என்பதை நினைத்தே பார்க்க முடியாது.
வங்கி அணிவதால், மணப்பெண்ணுக்கு மேலும் அழகு சேருகின்றது. மேலும் அது அணிந்திருக்கும் திருமண பட்டு புடவைக்கு மேலும் மெருகூட்டுகின்றது. இந்த வங்கி பல வகைகளிலும், உலோகங்களிலும் கிடைகின்றன. அவற்றை சரியாக தேர்வு செய்வதில் தான் உங்கள் சாமர்த்தியம் அடங்கி உள்ளது. அனைத்து வங்கியும், அனைத்து விதமான திருமண பட்டு புடவைகளுக்கு பொருந்தும் என்று கூற முடியாது, என்றாலும், ஒரு சரியான தேர்வு நீங்கள் எதிர் பார்த்ததை நிச்சயம் பூர்த்தி செய்யும்.
உங்கள் திருமணத்திற்கு அலகாரம் செய்ய ஒரு நல்ல வங்கியை (wedding vanki designs)தேர்வு செய்ய உங்களுக்கு சில சுவாரசியமான யோசனைகள் வேண்டுமா? இங்கே உங்களுக்காக இந்த பயனுள்ள தொகுப்பு. தொடர்ந்து படியுங்கள்!
வங்கியை ஏன் அணிய வேண்டும்? (Why Wear A Vanki)
திருமண அலங்காரம் என்று வந்து விட்டாலே, நிச்சயம், மணப்பெண்ணுக்கு வங்கி அணிவது வழக்கம். ஆனால் இந்த வங்கியை அணிய சில காரணங்கள் இருக்கத்தான் வேண்டும். அப்படி என்ன காரணம் என்று இங்கே பார்க்கலாம்:
- வங்கி பாரம்பரியமாக அணியப்படும் ஒரு நகை ஆபனம்
- இது தங்கம், வெள்ளி, செம்பு, போன்ற உலோகங்களால் செய்யப்படுவதால், இந்த உலோகத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பெற முடியும்
- வங்கியின் அமைப்பு கைகளுக்கு எந்த அழுத்தத்தையோ அல்லது சங்கடத்தையோ தராமல் வடிவமைக்கப்பட்டுள்ளது
- வங்கி மணப்பெண்ணின் அழகை மேலும் அதிகப்படுத்த உதவும்
- வங்கி தமிழ்நாட்டு கலாசாரத்தை சார்ந்த ஒரு அணிகலன். இதனை முற்காலத்தில் அனைத்து பெண்களும் பொதுவாக செம்பு காப்பு அல்லது பாசி மணி கயிறு போன்ற வகைகளில் அணிந்து இருப்பார்கள்
வங்கியை மணப்பெண்ணுக்கு தேர்வு செய்ய குறிப்புகள் (Tips To Choose Vanki For Bride)
வங்கிகள் பல வகைகளில் உள்ளன. அவற்றில் சரியான ஒன்றை நீங்கள் தேர்வு செய்வது முக்கியம். இதனால் உங்கள் பயன்படுத்தும் நோக்கம் நிறைவேருவதோடு, மணப்பெண்ணின் அழகையும் அதிகரிக்க உதவும். நீங்கள் சரியான வங்கியை தேர்வு செய்ய இங்கே சில குறிப்புகள்;
- முதலில் உலோகத்தை தேர்வு செய்யுங்கள். தங்கம், செம்பு, பித்தளை மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களால் ஆன வங்கிகள் எளிதாக கிடைக்கும். எனினும், ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்கள் உள்ளன
- வங்கியின் விலை. நீங்கள் வங்கிக்காக ஒதுக்கி உள்ள செலவு பட்டியலை கவனியுங்கள். தங்கம் மற்றும் வைரம் போன்ற விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட வங்கிகள், அதிக விலை உயர்ந்ததாக இருக்கும். எனினும், பித்தளை, மற்றும் செம்பு போன்ற உலோகத்தால் ஆன வங்கிகள் சற்று குறைவான விலைகளில் கிடைக்கும். அதனால், உங்கள் செலவு செய்யும் திறனுக்கு ஏற்றவாறு தேர்வு செய்வது நல்லது
- உங்கள் பயன்பாடு. நீங்கள் ஒரு முறைதான் அணியப் போகின்றீர்கள், மேலும் அது எளிமையாகவும் இருந்தால் போதும் என்றால், நீங்கள், விலை குறைவான பித்தளை மற்றும் செம்பினால் ஆன வங்கிகளை தேர்வு செய்யலாம்
- வங்கியின் வடிவமைப்பு. நீங்கள் தேர்வு செய்யும் வங்கி மிகவும் ஆடம்பர வடிவத்தில் இருக்க வேண்டுமா, அல்லது எளிமையாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானம் செய்யுங்கள்
- உங்கள் பட்டு புடவைக்கு ஏற்றவாறு வங்கியை எளிமையாகவோ, ஆடம்பரமாகவோ தேர்வு செய்வது நல்லது
- முத்து மற்றும் பிற பாசி மணிகளால் செய்யப்பட்ட வங்கிகளும் கிடைகின்றன. முழுவதும் முத்துக்களால் செய்யப்பட்ட வங்கிகள் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். எனினும், ஒரு நாள் தேவைக்காக நீங்கள் வாங்க எண்ணினால், அதனோடு விலை குறைவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் பாசி மணிகளால் செய்யப்பட்ட வங்கிகளை தேர்வு செய்யலாம்
- வங்கியின் நிறம். இது உங்கள் திருமண புடவைக்கு ஏற்றவாறு இருப்பது மேலும் அழகை அதிகரிக்கும். வங்கிகள், வெள்ளை, பச்சை, சிவப்பு மற்றும் தங்கம் போன்ற நிறங்களில், அவற்றை உருவாக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஏற்றவாறு கிடைக்கும். இதனால் நீங்கள் எளிதாக உங்கள் பட்டு புடவைக்கு ஏற்றவாறு ஒரு நிறத்தை தேர்வு செய்யலாம்
- ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அணியும் வங்கி உங்கள் அழகை அதிகரிக்கும் வகையிலும், உங்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க – சிவப்பை மறந்துவிடுங்க ! இந்த மாறுபட்ட திருமண புடவை நிறங்களில் உங்கள் தனித்துவத்தை காண்பிங்கள்
வங்கியின் வகைகள் (Types Of Vanki)
வங்கிகள் பல வகைகளில் கிடைக்கும். இத்தனை வகைகளில், எதனை தேர்வு செய்வது என்ற குழப்பம் நிச்சயம் பெண்களுக்கு எழும். இது இயல்பே. எனினும், உங்களுக்கு வெகு சில வகை வங்கிகளே தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்களுக்கு பிடித்தார் போல ஒரு அழகான வங்கியை தேர்வு செய்ய, இங்கே நீங்கள் அறிந்து கொள்ள வங்கிகளின் வகைகள். இந்த தொகுப்பு உங்கள் வேலையை எளிதாக்கும் என்று நம்புகின்றோம்.
1. பாரம்பரிய கோவில் வங்கி (Traditional Temple Vanki)
இந்த வங்கி வகை மிகவும் பிரபலமானது. இதனை பல ஆண்டு காலமாக பெண்கள் விரும்பி தேர்வு செய்து அணிந்து வருகின்றனர். இது பார்பதற்கு அழகாகவும் இருக்கும். இது திருமணம் போன்ற சிறப்பான பாரம்பரிய விழாக்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
2. நக்ஷி வங்கி (Vanki Of Nakshi)
இந்த வங்கி பாரம்பரியத்தை பறைசாற்றும் வாகையில் வடிவமைக்கப்பட்டுல்லவை. இது கோவில் ஆபரனகள் வகைகளை சேரும். மிகவும் அழகான வடிவமைப்பை கொண்டவை. இவை பொதுவாக தங்கத்தால் ஆனவையாக இருக்கும். இதில் லட்சுமி தேவியின் உருவம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
3. ஆரம் பட்டி (Radius Menu)
இந்த வகை வங்கிகள் பல நிற கற்களால் செய்யப்பட்டிருக்கும். இதனால் இதனை உங்கள் திருமண புடவையின் நிறத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம். இது மிக அழகாகவும், பாரம்பரியம் மிகுந்த பழமையை உணர்த்தும் வகையிலும் இருக்கும். மேலும் இந்த வகியின் வடிவமைப்பு மற்றும் இதில் இருக்கும் கற்களுக்கு ஏற்றவாறே, காதணிகளையும் தேர்வு செய்யலாம். இது மணப்பெண்ணுக்கு மேலும் அழகை சேர்க்கும் வகையில் இருக்கும்.
4. கயிறு / நூல் வங்கி (Rope/ Thread Vanki)
இந்த வகை வங்கி கயிறுடன் வரும். இது வங்கிகளை கைகளில் கட்ட உதவியாக இருக்கும். இது ஒரு பழமையான முறையிலான வங்கி வகையாகும். எனினும், இந்த வகை வங்கிகளும் அழகாத்தான் இருக்கும்.
5. சங்கிலி வடிவ வங்கி (Chain Shaped Vanki)
இந்த வகை வங்கிகளில் கயிறுக்கு பதிலாக சிறிய சங்கிலி கொக்கியுடன் இருக்கும். இது கைகளில் வங்கிகளை கட்ட எளிதாக இருக்கும். மேலும் இந்த சங்கிலிகளும் தங்கத்தாலோ, அல்லது ஒரே உலோகத்தாலோ செய்யப்பட்டுள்ளதால், பார்பதற்கும் அழகாக மற்றும் ஆடம்பரமாகவும் இருக்கும்.
6. “V” வடிவிலான மயில் வங்கி (V Peacock Vanki)
இந்த வங்கிகள் “V” வடிவத்தில் இருப்பதோடு, இதில் மயில் வடிவமும் அமைக்கப்பட்டிருக்கும். இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும்.
7. வளையல் வடிவலான வங்கி (Vanki Shaped Vanki)
இந்த வங்கிகள் வளையல் போன்ற வடிவத்தில் இருக்கும். இவை அணிவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். மேலும் உங்கள் கை வளையலுக்கு ஏற்ற வடிவத்திலேயே இவற்றையும் தேர்வு செய்யலாம். இது ஒரு எளிமையான வடிவமும் கூட.
8. பட்டையான வங்கிகள் (Chartered Vanki)
இந்த வகை வங்கிகள் பட்டையாகவும், அல்லது இரண்டு மெல்லிய பட்டைகள் சேர்ந்து சற்று அடர்த்தியாகவும் வரும். இதில் கற்கள் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இதனை இரு பக்கங்களிலும் அணியலாம்.
9. பட்டையான ஆரா வங்கி (Aara Vanki)
இந்த வகை வங்கிகள் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். பாரம்பரிய வடிவங்களில் இவை வடிவமைக்கப்படுகின்றன. மேலும் இன்றைய நவீன உலகிற்கு ஏற்ற வடிவங்களிலும் இந்த வகை வங்கிகள் கிடைகின்றன. இவற்றில் கற்களும் பாதிக்கப்பட்டு வரும்.
10. குந்தன் ஆரா வங்கி (Kundan Ara Vanki)
இந்த வகை வங்கிகள் கிரீடம் போன்ற வடிவில் உருவாக்கப்படுகின்றது. இவை மிகவும் பாரம்பரிய வடிவில், கற்கள் பாதிக்கப்பட்டும் உருவாக்கப்படுகின்றது. இந்த வகை வங்கிகள் சிவப்பு, பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் அழகாக வடிவமைக்கப்படுகின்றது.
11. குந்தனுடன் இருக்கும் கோவில் வடிவ வங்கி (Temple Shaped Vanki With Kundan)
இந்த வங்கிகள் மிகவும் பாரம்பரியமான மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் வைரம், மரகதம் போன்ற விலையுர்ந்த கற்கள் பாதிக்கப்பட்டு உருவாக்கப்படும். இவை மிகவும் விலை உயர்ந்த வங்கிகளாகும்.
12. மயில் வங்கி (Peacock Vanki)
இந்த வகை வங்கிகளில் பல வடிவிலான மயில்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மயில் வங்கி மிக பழமையான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்தாலும், இன்றளவும், இந்த நவீன காலத்திலும் பெண்கள் இந்த வடிவத்தை விரும்புகின்றனர்.
13. தங்க சுருள் கொண்ட மயில் வங்கி (Peacock Vanki With Gold Coin)
இந்த வகை வங்கிகளில் மணிகள் மற்றும் குந்தன் வடிவிலான அமைப்புகளும் இருக்கும். இதில் சுருள்கள் மேலும் கீழுமாக மயில் வடிவத்தை சுற்றி வரும். இவை மிகவும் அழகாக இருக்கும். மேலும் கண்ணை கவரும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கும்.
14. பாரம்பரிய அதிக குந்தன் உள்ள வங்கி (Vanki In Traditional High Garden)
இந்த வகை வங்கிகளில் சங்கிலி இருக்காது. எனினும், அவை பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவை மரகதம், மாணிக்கம் போன்ற கற்களைக் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றது. தங்கத்தோடு சேர்ந்த விலை உயர்ந்த கற்கள், இந்த வங்கிகளுக்கு மேலும் மதிப்பையும், அழகையும் கூட்டுகின்றது.
15. பண்டைய நக்ஷி வங்கி (Ancient Nakshi Vanki)
இந்த வகை வங்கிகள் அதிகம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றில் பச்சை கிளியின் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும் மாங்காய், மற்றும் மயிலும் உருவமும் இதில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவை நவீன தோற்றத்தை கொண்டவையாக இருக்கும். இது ஒரு தனித்துவம் வாய்ந்த வங்கி வகை என்று கூறலாம்
16. குழந்தைகளுக்கான கைகளால் வடிவமைக்கப்பட்ட வங்கி (Handmade Vanki For Children)
இந்த வகை வங்கிகள் தங்கத்தால் செய்யப்படுகின்றது. இவற்றில் சிறு சிறு வேலைபாடுகள் அதிகம் இருக்கும். இவை பெரும்பாலும் சிறுமிகளுக்கு அணியப்படுகின்றது.
17. “V” வடிவிலான வங்கி (V Vanki)
இவை மிகவும் பிரபலமான வகை வங்கிகளாலும். இவை அனைத்து உலோகங்களிலும், கற்களை பயன்படுத்தியும் வடிவமைக்கப்படுகின்றது. இந்த வகை வங்கிகள் அனைவரது கைகளுக்கும் ஏற்றதாக இருக்கும். மேலும் இவற்றை எளிதாக அவரவர் கைகளுக்கு ஏற்றவாறு பெரிதாகவும், சிறியதாகவும் மாற்றி பயன்படுத்தலாம். இவை அணியவும் எளிதாக இருக்கும். இவற்றை அணிய பிறரின் உதவி தேவைப்படாது.
உலோகம் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட வங்கிகள் (Metal And Stones Types Vanki)
வங்கிகள் பல வகை உலோகங்களால் செய்யப்படுகின்றது. இவை ஒருவரின் தேவை மற்றும் வாங்கும் திறனுக்கு ஏற்றவாறு எளிதாக கிடைக்கும் வகையிலும் இருகின்றது. வங்கி செய்ய பயன்படுத்தப்படும் உலோகங்களை பற்றி இங்கே பார்க்கலாம்:
1. தங்கம் (Gold)
பண்டைய காலம் முதல் இன்று வரை வங்கிகள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்படுகின்றது. எனினும், இவை சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். தங்கத்தால் செய்யப்படும் வங்கிகள் நல்ல மதிப்பு மிகுந்ததாகவும், பல அழகான வடிவங்களில் செய்ய எதுவானதாகவும் இருக்கும்.
2. வெள்ளி (Silver)
வெள்ளியால் செய்யப்படும் வங்கிகள் அவ்வளவு பிரபலம் இல்லையென்றாலும், தங்கத்திற்கு அடுத்தபடியான பெண்களின் தேர்வாக இருப்பது இந்த வெள்ளி வங்கிகளே. இவை தங்கத்தை விட சற்று விலை குறைந்ததாக இருந்தாலும், இவற்றிலும் பல வடிவங்களை செய்யலாம்.
3. பிளாட்டினம் (Platinum)
இந்த உலோகம் அவ்வளவு பிரபலமாக பயன்படுத்தபடுவதில்லை என்றாலும், ஒரு சிலர் பிளாட்டினம் வங்கிகளை விரும்பி வாங்குகின்றனர். இவை, தங்கத்திற்கு நிகரான அல்லது சற்று குறைவான விலையில் கிடைகின்றது
4. பித்தளை (Brass)
தங்கத்திற்கு அடுத்தபடியாக, பெண்கள் ஒரு நாள் தேவைக்காக அல்லது பண்டிகை நாட்களில், அல்லது விழாக்களில் கலந்து கொள்ள இயல்பாக அணிந்து கொள்ள இந்த வகை வங்கிகளை தேர்வு செய்கின்றனர். இவை பார்ப்பதற்கு தங்கம் போல காட்சி தந்தாலும், மிக அழகான வடிவங்களில் எளிதாக கிடைக்கக் கூடியதாக இருகின்றது. மேலும் இவை மிக மலிவான விலையிலும் கிடைகின்றது. இதனால் பலர் இதனை வாங்க முடிகின்றது.
5. செம்பு (Copper)
இந்த உலோகம் காப்பு அல்லது வளையல் போன்ற வடிவில் இருக்கும் வங்கிகளை உருவாக்க பயன் படுத்தப்படுகின்றது. இவை பித்தளை வங்கிகளை விட சற்று விலை அதிகமானது.
6. ஐம்பொன் (Quintet)
இது மற்றுமொரு பிரபலமான தேர்வாக உள்ளது. இதில் தங்கம், ஈயம், செம்பு, வெள்ளி மற்றும் பித்தளை போன்ற ஐந்து உலோகங்கலும் சேர்ந்து இருக்கும். இந்த ஐம்பொன் வங்கிகளும் அதிக அளவு விரும்பி வாங்கப்படுகின்றது.
7. வைர வங்கி (The Diamond Vanki)
இந்த வகை வங்கிகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இதில் வைரம் பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த வங்கிகளை உருவாக்க தங்கம் பயன்படுத்தப்படுகின்றது.
8. மாணிக்கம் (Gem)
இது வைரத்திற்கு அடுத்தபடியாக விற்கப்படும் விலையுர்ந்த கற்களாலான வங்கியாகும். எனினும், இவை அதிக பிரபலம் இல்லை.
9. முத்து (Pearl)
முத்துக்களால் வடிவமைக்கப்பட்ட வங்கிகள் மிகவும் பிரபலமானவை. இவற்றை பெண்கள் விரும்பி வாங்கவும் செய்கின்றனர். பிற கற்களால் செய்யப்படும் வங்கிகளை விட இந்த முத்து வங்கிகளுக்கு ஒரு தனித்துவம் உள்ளது.
10. பிற கற்களாலான வங்கி (Vanki Of Other Stones)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கற்கள் மட்டுமல்லாது புஷ்பராகம், செவ்வந்தி, பவளம், அமுதைகள் இந்திரநீலம், ரத்தினம், நீல மாணிக்கம், மரகதம், போன்ற கற்களும் வங்கி தயாரிக்கப்ப் பயன்படுத்தப்படுகின்றது.
வங்கிகளின் வடிவங்கள் (Vanki Designs)
பல வகை வங்கிகள் இருப்பதோடு, வங்கிகள் பல வடிவங்களிலும் கிடைகின்றன. இந்த வடிவங்கள் கண்ணைக்கவரும் வகையில் மட்டுமல்லாது, மிக அழகாகவும், எளிதாக வாங்கும் விலைகளிலும் இருகின்றனர். பல வங்கிகளின் வடிவங்களை பற்றி இங்கே பார்க்கலாம்:
1. அஹாம் வெள்ளி மற்றும் முத்துக்கலாலான வங்கி (Aham Silver And Mutual Vanki)
இந்த வகை வங்கி மிகவும் கண்ணைக்கவரும் வகையில், அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் முத்துக்கள் பதிக்கப்படிருப்பதால் பார்க்க அழகான தோற்றம் தரும், மேலும் இதனை எந்த கைகளின் அளவிற்கு ஏற்ப்பவும் சரி செய்து கொள்ளலாம். இவை பொதுவாக “V” வடிவில் இருக்கும். தென்னிந்திய பகுதியில் இவை மிகவும் பிரபலமான ஒரு தேர்வாக பெண்களுக்கு மத்தியில் இந்த வடிவ வங்கிகள் இருக்கும்.
2. அபராஜிதா வெள்ளி வங்கி (Aparajita Silver Vanki)
இந்த வடிவிலான வங்கிகள் திருமணத்திற்கு ஏற்ற ஒரு தேர்வாக இருக்கும். இவற்றில் லட்சுமி வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும் இதனை கைகளால் வடிவமைப்பார்கள். இது வெள்ளியால் செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வங்கியாகும்.
3. தாரா வெள்ளி வங்கி (Tara Silver Vanki)
இந்த வடிவ வங்கிகள் வெள்ளியாலான தங்க முலாம் பூசப்பட்ட வங்கிகளாகும். திருமணத்திற்கு ஏற்ற தேர்வாக இந்த வங்கி வடிவம் இருக்கும். இது நல்ல ஆடம்பர தோற்றத்தை தரும். மேலும் இதில் கொக்கி இருக்கும். இதனால் கைகளின் அளவிற்கு ஏற்றவாறு சரி செய்து அணிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
4. ஜன்ய வெள்ளி நக்காசி வங்கி (Janya Silver Nakashi Vanki)
இந்த வடிவிலான வங்கி ஆரம் போல காட்சியளிக்கும். இவை ஒரு பாரம்பரியமான வடிவமாகும். கைகளால் வடிவமைக்கப்பட்ட இந்த வங்கி வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டதாக இருக்கும். இதில் கற்களும் பொறிக்கப்பட்டு, ஒரு அழகான பாரம்பரிய தோற்றத்துடன் இருக்கும். இது ஒரு தனித்துவமான வடிவமாகும்.
5. மயூரக (மயில்) வெள்ளி வங்கி (Mayuraka (Peacock) Silver Vanki)
இந்த வகை வங்கிகள் மிக அழகான மயில் வடிவம் கொண்டவை. இது வெள்ளியால் செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வங்கியாகும். இதில் கற்களும் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும் மிக அழகாக அலங்கரித்து ஒரு ஆடம்பர தோற்றத்தை தரும். இது வெவ்வேறு அளவில் கிடைக்கும்.
6. நித்ய வெள்ளி வங்கி (Nithya Silver Vanki)
இந்த வங்கி மிகவும் அழகான வடிவம் உடையது, இது பொதுவாக “V” வடிவில் வடிவமைக்கப்படுகிறது. எனினும், இதனை வடிவமைக்கப்பட்டும் தொழில்நுட்பம் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது தங்க முலாம் பூசப்பட்ட வெளி வங்கியாகும். இது திருமணத்திற்கு ஏற்ற அணிகலனாகும்.
7. ப்ரக்ய வெள்ளி வங்கி (Pragya Silver Vanki)
இது கோவில் நகைகளை போல இருக்கும். மணப்பெண்ணுக்கு ஏற்ற ஒரு நல்ல தேர்வாக இந்த வகியின் வடிவம் இருக்கும். இதை லட்சுமி வங்கி என்றும் அழைப்பார்கள். இந்த வங்கியை கைகளின் அளவிற்கு ஏற்றவாறு சரி செய்து எளிதாக அணிந்து கொள்ளலாம். இது தங்க முலாம் பூசப்பட்டு வரும். இது பாரம்பரிய தோற்றத்தை உடையது.
8. பிரக்ரிதி வெள்ளி லட்சுமி வங்கி (Prakrithi Silver Lakshmi Vanki)
இது கோவில் நகைகள் வகைகளை சேர்ந்தது. இதில் பாரம்பரியமான லட்சுமி வடிவம் அமைக்கப்பட்டு, கற்களால் அளகரித்து உருவாக்கப்பட்டிருக்கும். இது பொதுவாக “V” வடிவத்தில் வரும். மிக அழகான ஒரு வங்கியாக இது இருக்கும். கைகளின் அளவிற்கு ஏற்றவாறு இதனை சரி செய்து அணிந்து கொள்ளலாம்.
9. புஷ்பலட்சுமி வெள்ளி வங்கி (Pushpalakshmi Silver Vanki)
இந்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி வங்கி, லட்சுமி வடிவம் கொண்டது. இது கோவில் நகை வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கற்களும் பொறிக்கப்படும். இந்த வகை வங்கிகள் மிகவும் பிரபலமானவை. தாமரையில் லட்சுமி அமர்ந்திருப்பது போல தோற்றத்தோடு இந்த வகை வங்கிகள் உருவாக்கப்படுகின்றது.
10. கோவில் நகை வகையை சேர்ந்த நகாஸ் வளையல் வங்கி (Nakas Bangle Vanki Of Temple Jewelery)
இந்த வகை வங்கி பண்டைய நகை வகைகளை சேர்ந்ததாகும். இது தங்கத்தில் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியில் செய்யப்படும். இந்த வகை வங்கிகள் கைகளால் வடிவமைக்கப்படுகின்றது. மேலும் இது வளையலை போன்ற தோற்றம் தருபவை. இது திருமணம் மட்டுமல்லாது, அனைத்து விழாக்களுக்கும் அணிய ஏற்றதாக இருக்கும்.
11. பஜூ பந்த் அமெரிக்க வைர வங்கி (Baju Band American Diamond Vanki)
இந்த வங்கி நவீன வடிவமைப்பை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இதில் அமெரிக்க வைரம் பொறிக்கப்பட்டிருக்கும். இதில் சங்கிலியும் இருக்கும். இதனால் இதனை அணிய எளிதாக இருக்கும். இது சிவந்த தங்க நிறத்தில் இருக்கும். அனைத்து பெண்களுக்கும் ஏற்ற வங்கி வடிவமாக இது இருக்கும்.
12. பாசிமணி சங்கிலியாலான அமெரிக்க வைர வங்கி (US Diamond Vanki, A Chain Of Moss)
இந்த் வங்கி வடிவம் மற்ற வங்கிகளில் இருந்து சற்று மாறுபட்ட ஒன்றாக இருக்கும். இதனை கைகளின் சுற்றளவுக்கு ஏற்றார் போல சரி செய்துக் கொள்ளலாம். பார்க்க கண்ணைக்கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும்.
13. திருமண கோவில் லட்சுமி வங்கி (Wedding Temple Lakshmi Vanki)
இந்த வகை வங்கிகள் மிகவும் பாரம்பரியமான ஒரு வகையாகும். இது தென்னிந்தியாவில் அதிகம் பிரபலமான் ஒரு வடிவம் என்று கூறலாம். இது திருமணத்திற்கு ஏற்ற வங்கி வடிவம். இதனை செம்பு மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களை பயன்படுத்தி உருவாக்குவார்கள். மேலும் இதில் லட்சுமி வடிவம் அமைக்கப்பட்டிருக்கும்.
14. சிவந்த சங்கிலிவகை திருமண வங்கி (Red Chain Wedding Vanki)
இந்த வங்கி சங்கிலிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் இதனை எளிதாக அணிந்து கொள்ளலாம். மேலும் இதனை எந்த அளவிலான கைகளிலும் அணியலாம். இது சிவந்த தங்க நிறத்தில் இருக்கும். இதனை அனைத்து விழாக்களுக்கும் அணியலாம்.
15. கோவில் வகை நாகாஸ் வளையல் வங்கி (Temple Type Nagas Bangle Vanki)
இந்த வகை வங்கி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான் ஒன்றாகும். இது செம்பு மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்படும். இது வளையல் போன்ற வடிவில் இருக்கும். இது அனைத்து கைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.
16. பஜூபந்த் தென்னிந்திய வங்கி (Bajuband South Indian Vanki)
இந்த வகை வங்கிகள் தென்னிந்திய பாரம்பரிய வடிவங்களில் பெரும்பாலும் உருவாக்கபடுகின்றது. இவை திருமணம் மற்றும் சிறப்பு விழாக்களுக்கு அணிய ஏற்றதாக இருக்கும். இந்த வடிவிலான வங்கிகள் தங்கம், மற்றும் வெள்ளி போன்ற உலோகத்தால் செய்யப்படும். இவை பார்க்க மிகவும் அழகாகவும் இருக்கும்.
கேள்வி பதில்கள் (FAQ)
1. திருமண பெண்ணிற்கு வங்கி வாங்க எந்த உலோகத்தை தேர்வு செய்யலாம்?
பொதுவாக வங்கிகள் தங்கம் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட வேலியால் செய்யப்பட்டவையாக இருக்கும். விலை உயர்ந்த நகைகளை வாங்க விரும்பினால், இத்தகைய தங்கம் அல்லது வெள்ளி வங்கிகளை தேர்வு செய்யலாம். அல்லது, விலை குறைவான, எனினும், பார்க்க தங்கம் போல அழகாகவும் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் ஐம்பொன் வங்கிகளை தேர்வு செய்யலாம். அல்லது மேலும் விலை குறைவான வங்கிகள் வேண்டும் என்றால், பித்தளை வங்கிகளை தேர்வு செய்யலாம்.
2. பாசி மணிகளாலான வங்கிகளை திருமணத்திற்கு தேர்வு செய்யலாமா?
நிச்சயம் தேர்வு செய்யலாம். நீங்கள் ஆடம்பரம் இல்லாமல், எளிமையாகவும், அழகாகவும், அதிகம் செலவு செய்யாமலும் ஒரு நல்ல வங்கியை தேர்வு செய்ய வேண்டும் என்றால், இந்த பாசிகலாலான வங்கிகளை தேர்வு செய்யலாம்.
3. திருமணத்திற்கு தேர்வு செய்யும் வங்கிகள் ஆடம்பரமானதாக இருக்க வேண்டுமா?
நிச்சயம் இல்லை. ஒரு எளிய வடிவமும் உங்களுக்கு அழகை தரும் வகையில் இருக்கும். எனினும், உங்கள் தேர்வு உங்கள் முகூர்த்த பட்டு சேலைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். அது அழகை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் கயிர் அல்லது சங்கிலி வங்கிகள், “V” வடிவிலான எளிமையான வடிவம் கொண்ட வங்கிகள் அல்லது சாதாரண கற்கள் மற்றும் பாசி மணிகள் பொறிக்கப்பட்ட வங்கிகளை தேர்வு செய்யலாம்.
மேலும் படிக்க – உங்களுக்கான சிறந்த மணப்பெண் அலங்கார பார்லரை நீங்களே தேர்ந்தெடுங்கள்
பட ஆதாரம் – Pinterest
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!