logo
ADVERTISEMENT
home / Bridal Makeup
மணப்பெண் தோற்றத்தில்  நட்சத்திரத்தை போல் ஜொலித்திட சென்னையின் 8 சிறந்த ஒப்பனை கலைஞர்கள் !

மணப்பெண் தோற்றத்தில் நட்சத்திரத்தை போல் ஜொலித்திட சென்னையின் 8 சிறந்த ஒப்பனை கலைஞர்கள் !

ஒவ்வொரு மணப்பெண்ணும் தனது திருமண நாளன்று ஜொலித்திட ஆசைபடுவாள். உங்களது திருமண நாளும் மிக விரைவில் வர இருக்கிறதா? மேலும் நீங்கள் ஒரு சிறந்த ஒப்பனைக் கலைஞரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானது. உங்களது மணப்பெண் தோற்றத்தை நீங்கள் விரும்பியபடி மிக அற்புதமாக உங்களுக்கு அளிக்க இருக்கிறார்கள் சென்னையை சேர்ந்த சில சிறந்த ஒப்பனை நிபுணர்கள் (bridal makeup artist). அதற்கான அனைத்து விவரங்களையும் நீங்கள் இங்கு காணலாம். 

1. விஜி ( ப்ரோன்சர் மெகோவர் )

பாலிவுட் மேக்கப் மற்றும் பேஷன்னால் ஈர்க்கப்பட்டு தனது சொந்த மேக்கப் ஸ்டூடியோவை  – பிரான்ஸ் மேக்கப் ஸ்டுடியோ (Bronze makeup studio)என்ற பெயரில் தொடங்கியுள்ளார் விஜி. இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணப்பெண் ஒப்பனை அலங்காரங்கள் செய்த அனுபவம் கொண்டவர். மேலும்,தனது தொழிலின் மீது இருக்கும் பேர் ஆர்வத்தால் , இவர் பல்வேறு விருதுகள் மற்றும் அங்கீகாரத்தை வாங்கியுள்ளார்.  இவர் நிச்சயம் உங்கள் திருமண நாளில் உங்களுக்கு ஒரு அழகிய தோற்றத்தை அளிப்பார்.

இவரை தொடர்பு கொள்ள :  +91 98409 17283 மின்னஞ்சல் : bronzermakeover@gmail.com, info@bronzermakeover.com

 

ADVERTISEMENT

2. அனுஷா சுவாமி

அனுஷா பல திறமை உள்ள ஒரு ஒப்பனை கலைஞர் என்பதை அவரது இன்ஸ்டாகிராம்  பக்கங்கள் உங்களுக்கு காட்டும். இவர் ஒரு ஒப்பனைக் கலைஞர் மட்டுமல்லாமல் ஒரு அற்புதமான நடன கலைஞரும் கூட. ஆகையால் உங்கள் திருமணத்தில் தேவைப்படும்  நடன இயக்கத்திற்காக நீங்கள் இவரை புக் செய்து கொள்ளலாம். மேலும் இவரது ஒப்பனை உங்களை நிச்சயம் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்திற்கு மாற்றி விடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ! அதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இவரை தொடர்பு கொள்ள :   8610653406 அல்லது மின்னஞ்சல் – anusha.swamy8@gmail.com

3. சமந்தா ஜெகன்

சமந்தா ஜகன் மற்றுமொரு புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞராவார் . இவர் தனது மாடலிங் பணியை விட்டுவிட்டு ஒப்பனையில் தனது ஆர்வத்தை கண்டறிந்து இதில் தனது பணியைத் தொடங்கினார் . இவரது வேலை தொடர்ந்து இவருக்கு பல அங்கீகாரத்தை அளித்திருக்கிறது. மேலும் இவரது வெற்றிக்கான காரணங்கள் ஒப்பனையில் இவருக்கு இருந்து ஆர்வமே ஆகும். யூனிசெஃஸ் சலோனின்  நிறுவனர் சமந்தா ஒரு ஒப்பனைக் கலைஞர் மட்டுமல்லாமல் ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் அழகு நிபுணரும் கூட.

இவரை தொடர்பு கொள்ள : samanthajagan@gmail.com

ADVERTISEMENT

4. இப்ராஹிம்

‘Makeupibrahim’ எனும் பெயரில் இருக்கும் இவரது இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் இவரது பல்வேறு வகையான ஒப்பனை அலங்காரங்களை உங்களுக்கு காட்டும். பத்து வருஷத்துக்கும் மேல் ஒப்பனை அலங்காரங்களில் அனுபவமுள்ள இப்ராஹிம், சிறந்த மேக்கப் ஆர்டிஸ்ட் எனும் விருதை 2018ம் ஆண்டு வென்றிருக்கிறார் .இவரது வேலை அனைத்தும் இவரது தரத்தை குறிக்கிறது என்றதால்  இவருக்கு சென்னையில் மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்தும் பல வாடிக்கையாளர்கள் உள்ளனர். வெறும் மணப்பெண் ஒப்பனை மட்டுமில்லாமல் மற்ற விளம்பர ஷூட்களிலும் இவர் மிக சிறப்பாக கையாள்வார் என்றது குறிப்பிடத்தக்கது. இவர் உபயோகிக்கும் பிராண்டுகள் பாபி பிரவுன் மற்றும் மேக் (Bobby brown & MAC) என்றதால் உங்கள் மணப்பெண் தோற்றம் மிக பிரகாசமாக இருக்கும் என்று நீங்கள் நம்பலாம்!

இவரை தொடர்பு கொள்ள :   9940053232 அல்லது மின்னஞ்சல்: makeupibrahim@gmail.com

5. ஆக்ரிதி சச்தேவ்

நாட்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸை கொண்ட ஆக்ருதி சச்தேவின் இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் உங்களுக்கு ஒரு மிக திறமையான ஒப்பனைக் கலைஞரை  அறிமுகப்படுத்தும். இவர் தனது ஒப்பனை பயிற்சியை UK வில் முடித்துவிட்டு ப்ரொபஷனல் மேக்கப் ஒர்க்கஷாப்பை பல மாணவர்களுக்காக தொடங்கி,  அனைத்து வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இவர் ஒரு ஒப்பனைக் கலைஞர் மட்டுமில்லாமல் ப்ளாகரும் (blogger) கூட . நீங்கள் எந்த வகையான ஒப்பனையை விரும்பினாலும் சரி உங்கள் முகத்தில் இருக்கும் அழகை  மிக அற்புதமான விதத்தில் வெளிப்படுத்தி அதற்கேற்ற ஒப்பனையை நிச்சயம் அளிக்க இருக்கிறார் ஆக்ருதி.

இவரை தொடர்பு கொள்ள :  917550033425 அல்லது மின்னஞ்சலில் mesmereyesmakeup@gmail.com

ADVERTISEMENT

6. ப்ரக்ரிதி ஆனந்த்

ப்ரக்ரிதி  ஆனந்த் சென்னையை சேர்ந்த ஒரு மிக பிரபலமான ஒப்பனைக் கலைஞராவார். ஒப்பனையில் இவருக்கு இருக்கும் ஆர்வத்தால்,  இவரது அனைத்து வேலையையும் மிக சிறந்த முறையில் நீங்கள் காணலாம். அதுமட்டுமல்லாமல் ஒப்பனையை சார்ந்த பல பாடங்களை தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கு இவர் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ப்ரக்ரிதி  ஒரு மணப்பெண் ஒப்பனைக் கலைஞர் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களுக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பணியாற்றி வருகிறார். இவரது போர்ட்ஃபோலியோ உங்களுக்கு பிடித்திருந்தால் இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்.

இவரை தொடர்பு கொள்ள  : 9884843210 அல்லது மின்னஞ்சல் – missprakatwork@gmail.com

7. நித்யஸ்ரீ

Source

ADVERTISEMENT

நித்யஸ்ரீ ஐயர்/ ஐயங்கார் மணப்பெண்களுக்கான சிறந்த ஒப்பனைக் கலைஞர் ஆவார். இவர் உங்களது திருமண நாளன்று அந்த அற்புதமான தோற்றத்தை மிக எளிதில் முன் வைப்பார் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். இவர் உபயோகிக்கும் ஒப்பனை பொருட்கள் மேக் , இங்கிலாட் ,பாபி பிரவுன்  மற்றும் சேனல் ஆகும். ஒப்பனை உடன் இவர் சிகை அலங்காரங்கள் , பட்டு புடவை – மடிசார் அணிவதிலும் திறமையானவர். மேலும், திருமண நாளுக்கு தேவையான அனைத்து நகைகளையும் நீங்கள் இங்கே வாங்கிக் கொள்ளலாம். இத்தகைய திறமையுள்ள மேக்கப் நிபுணர், உங்கள் மணப்பெண் தோற்றத்திற்கான கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.

இவரை தொடர்பு கொள்ள :9940035119/9840824400 அல்லது

மின்னஞ்சல்: makeupnithyasri@gmail.com, http://www.makeupnithyasri.in/

8. சுரேஷ் மேனன்

சுரேஷ் மேனன் சென்னையின் பிரபலமான ஒப்பனைக் கலைஞர்களில் ஒருவர். இவர் தனது பேஷன் டிசைனிங் பட்டத்தை முடித்துவிட்டு மணப்பெண் ஒப்பனை வல்லுநராக பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவரது அற்புதமான வேலைகளை நீங்கள் இவரது  இன்ஸ்டாக்ராம் அக்கௌன்ட்டில் பார்க்கலாம்.மணப்பெண் அலங்காரம் மட்டுமில்லாமல் இவர் பல்வேறு மாடல்களுடன் , விளம்பர படங்கள், போட்டோ ஷூட்களிலும் பணியாற்றி வருகிறார் இவர் ஒரு ஒப்பனைக் கலைஞர் மட்டுமில்லாமல் சிகை அலங்காரங்கள், ஆடை வடிவமைப்புகளிலும் அனுபவம் உள்ளவர். உங்கள் திருமண நாளன்று , பொருத்தமுள்ள ஒப்பனை மற்றும் ஆடையுடன் அந்த அற்புதமான தோற்றத்தை பெற இவரை அணுகுங்கள் .

ADVERTISEMENT

இவரை தொடர்பு கொள்ள : 078240 22674
https://www.facebook.com/pg/makeupbysureshmenon

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT

 

மேலும் படிக்க – சிவப்பை மறந்துவிடுங்க ! இந்த மாறுபட்ட திருமண புடவை நிறங்களில் உங்கள் தனித்துவத்தை காண்பியுங்கள்
14 Jun 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT