ஆம்! காதலர் தினத்தின் மீது எனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை என்றாலும் அந்த ஒரு திகைப்பூட்டும் தோற்றம் உங்கள் நாளை நிச்சயம் அலாதி ஆக்க உதவும்! நீங்கள் சிங்கிள் அல்லது கமிடெட் ஆக இருந்தாலும் சரி… நாங்கள் உங்களுக்கு அடுத்து அடுத்து ட்ரெண்டில் இருக்கும் கண் ஒப்பனைகளை கொண்டுவந்துகொண்டே இருக்கிறோம். இந்நிலையில்…இந்த வி – டே வில் உங்களை நீங்களே பாம்பெர் செய்து கொள்ள எங்களிடம் இருக்கிறது அந்த அற்புதமான கண் ஒப்பனை (eye makeup). இந்த ஆண்டின் நிறம் பிங்க் என்றதால், நாங்கள் உங்களுக்கு சோனாக்ஷி சின்ஹாவின் கண் ஒப்பனையை எவ்வாறு அடையலாம் என்று கூற உள்ளோம்.
பொதுவாகவே அவரின் இன்ஸ்டாகிராம் பேஜில் பல வகை கண் ஒப்பனையை போஸ்ட் செய்பவர் லிங்கா பட கதாநாயகி சோனாக்ஷி! அவரின் கண்களை அவர் மிக அழகான தோற்றத்தில் காட்டும் திறமை அவருக்கு உண்டு. மேலும், புதிய ட்ரெண்ட், புதிய வடிவங்கள் அதற்கேற்ற்ற நிறங்கள் என பல தோற்றங்களை அவர் தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருப்பவர். பிங்க் என்று கூறும் பொது… இவரின் இந்த தோற்றம் எங்களை மிகவும் ஈர்த்தது. காரணம்… பிங்க் நிறம் உங்களை புதுப்பாணியான, நவீன பெண்ணாக , நேர்த்தியான, நவநாகரீக பெண்ணாகவும் , மேலும் இந்நிறம் பெண்ணியம் மற்றும் ரொமான்டிக் தோற்றத்தையும் அளிக்கும் நிறம் (color) ஆகும்!
Also Read: கண் ஒப்பனை மற்றும் ஐ பிரௌ டிப்ஸ் (Tips For Eye Makeup)
இவருடைய இந்த தோற்றத்தை பெற –
- முதலில் உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஒரு பாவுண்டேஷன் தேவை. அதை உங்கள் விரல்களால் புள்ளிகள் வைத்து, முழு கவரேஜ் வரும் அளவிற்கு ஒரு பாவுண்டேஷன் பிரஷ்ஷில் ப்ளேன்ட் செய்த்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் கண் பகுதிகளில் இதை நன்கு பூசிக்கொள்ளுங்கள். தேவை பட்டால் ஒரு கன்சீலர் பயன்படுத்தி உங்களின் கரு வளையங்களை கரெக்ட் செய்யுங்கள்.
- இதன் பிறகு, ஒரு பேபி பிங்க் நிற ஐ -ஷாடோவை எடுத்து உங்கள் கண்களின் மேல் பகுதிகளில் பிரஷ்ஷால் பூசுங்கள் (உள்ளிருந்து வெளியில்). அடுத்து , கீழ் பகுதியில், அதே போல் ஒரு மெல்லிய கோடு வரையவும் ( அதே பிங்க் நிறத்தில்) .
- இதற்கு மேல், உங்கள் விருப்பம் போல் ஒரு ஐ – லைனரை பயன்படுத்தி, கண்களின் மேலும் கீழும் கொடு வரையுங்கள். (இதில் நீங்கள் கேட் – ஐஸ் , ட்ராமாட்டிக் ஐஸ் அல்லது ஒரு சாதாரண தோற்றத்தை குடுக்கலாம்)
- மேலும் ஒரு ஜொலிக்கும் தோற்றத்திற்கு, கண் ஓரங்களில், ஹயிலைட்டரை (highlighter) பயன்படுத்தலாம்.
- இப்போதெல்லாம், மோனோக்ரோம் லுக் (ஒரே வண்ணமுடைய தோற்றம்) ட்ரெண்டில் இருப்பதால், நீங்களும் சோனாக்ஷியை போல அதே பிங்க் நிறத்தில், உங்கள் உதடுகளுக்கு ஒரு லிப்ஸ்டிக்கை பூசுங்கள்.
- இதில் நீங்கள் விருப்பப்பட்டால் , உங்கள் தாடை வரிகளில் மிதமான பிங்க் ப்ளஷ்ஷை பயன்படுத்தலாம்.
இதுபோல், மேலும் பல பிங்க் நிறங்கள் கொண்ட கண் ஒப்பனையையும் நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். முதற்சி செய்து மகிழ்ச்சி அடையுங்கள்.
1)பிங்க் நிறத்தில் ஒரு மினுமினுக்கும் தோற்றத்திற்கு , மேல் சொன்ன வழிகளை பின்பற்றி, அதன் மேல் ஒரு சில்வர் நிற க்ளிட்டர் பௌடரை தடவுங்கள்.
Also Read: ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? (How To Apply Eye Shadow)
2) மேலும் ஒரு டார்க் பிங்க் தேவைப்பட்டால்…
3) இது பிங்க் + சிவப்பு கலவை ஆகும். இதுவும் இந்த காதலர் தினத்திற்கு ஏற்ற ஒரு நிறம்!
4) வெறும் ஐ-லைனர் போல் ஒரு கொடு மட்டும் போதும் என்று நினைத்தால், அதுவும் பிங்க் நிறத்தில்….
5) இது பிங்க் + ஊதா கலவை ஆகும். இதில் நீங்கள் ஓரங்களில், ஒரு பிரஷ்ஷால் கருப்பு அல்லது ஏதேனும் ஒரு இருண்ட நிறத்தில் (வெளியில் இருந்து உள்பகுதி) பூசிக்கொள்ளலாம் .
6)இது பிங்க் ஷேடில் வரும் ஒரு அழகிய கோரல் லுக்! கோடைகாலத்தில் இது நிச்சயம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் தோற்றத்தை அளிக்கும்.
எங்கள் டிப் 1 – உங்கள் கண் ஒப்பனை மேலும் க்ளோஸி ஆக தெரிய, நிறங்களை அடித்த பின்(க்ளிட்டர்க்கு முன்…), உங்கள் விரல்களில் வாசலினை (vaseline) எடுத்து மிதமாக ஒத்தி எடுங்கள்.
டிப் 2 – ஒரு நல்ல அடர்த்தியான கருப்பு புருவம் மேலும் இந்த தோற்றத்தை மிக பிரகாசமாகவும் அழகாகவும் காட்ட உதவும்.
உங்கள் அன்பார்ந்தவரை (அது நீங்களாக இருந்தாலும் 😉 ) இம்ப்ரெஸ் செய்ய தயாரா?!
பட ஆதாரம் – instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.