பல ஆண்டு காலமாக நாம் அடர் அல்லது மாநிறம்(skin) கொண்ட பெண்கள் ஒப்பனை செய்து கொள்வது சாத்தியம் இல்லை என்றும் மேலும் அது எதிர் பார்த்த அழகை அவர்களுக்குத் தராது என்ற எண்ணத்தோடு இருந்து விட்டோம். எனினும் அது உண்மை இல்லை. சொல்லப்போனால் அடர் தோல் நிறம்(skin) கொண்ட பெண்கள் மற்றவர்களை விட நிறமி நிறங்களை எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சில பெண்களை குறிப்பிட வேண்டும் என்றால், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா மற்றும் பிபாஷா பாசு ஆகியவர்களை கூறலாம். நம் நாட்டு பெண்களை விட யாருக்கும் சிவந்த உதடுகள், மற்றும் அழகான கண்கள் இருக்க முடியாது. தீபிகாவின் ஒப்பனை திறமையை பற்றி கூற நம்மிடம் வார்த்தைகளே இல்லை.
சிவந்த தோல் நிறம்(skin) கொண்ட பெண்களை பற்றி தனியாக கூற ஏதும் இல்லை. அனைத்து தோல் நிறங்களும் அழகுதான். இந்த சமுதாயத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக் கொள்வதை விட நீங்கள் உங்கள் பலத்தை உணர்ந்து அதன் படி உங்களிடமிருக்கும் இயற்க்கை அழகை மேலும் மேன்மை படுத்திக் கொள்ள முயற்ச்சிப்பது அவசியம். எனவே, உங்கள் இயல்பான நிறத்தை தழுவி உங்களுக்கு உதவும் நோக்கத்தோடு நல்ல தோற்றம் பெரும் வகையில், கருமையான தோல் கொண்ட பெண்களுக்கு இங்கே சில சிறந்த ஒப்பனை குறிப்புகள் கொடுத்துள்ளோம்.
Also Read: எளிய ஒப்பனை குறிப்புகள் (Simple Makeup Tips)
கருமையான அல்லது மாநிறம்(skin) கொண்ட பெண்களுக்கான அத்தியாவசிய ஒப்பனை குறிப்புகள்
சிறந்த ஒப்பனை செய்வதற்கான குறிப்புகள்:
1. சிடிஎம் ஒரு விதியாக. அடர் நிறம்(skin) கொண்டவர்கள் சுத்திகரிப்பு-டோனிங்-ஈரப்பிரதி நடைமுறையை பின் பற்ற வேண்டும். இது அவர்களுக்கு சுத்தமான சருமத்தையும் மேலும் ஒப்பனை செய்வதற்கு எதுவாகவும் இருக்க உதவும். உங்கள் தோல் ஈரப்பதமாக இருப்பதால் இயற்கையான பொலிவு கிடைப்பதோடு நீங்கள் அடர் நிற முகத்தில் எளிதாக விரும்பிய ஒப்பனையை செய்யலாம்.
2. சன் ஸ்க்ரீன் பயன் படுத்தவும். அடர் நிறம் கொண்டவர்கள் சன் ஸ்க்ரீன் பயன் படுத்த தேவை இல்லை என்று ஒரு தவறான கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் உங்கள் தோல் நிறம்(skin) பார்க்காமல் அனைவரும் சன் ஸ்க்ரீன் பயன் படுத்துவது அவசியம். இது நிச்சயமாக உங்கள் சருமம் மேலும் கருகாமலும் கதிர் வீச்சில் இருந்து பாதுகாப்பாகவும் இருக்க உதவும்.
3. உங்கள் கருத்திர்க்கேற்ற படி வேலை செய்யுங்கள். நீங்கள் எந்த நிற அல்லது வகை சருமம் கொண்டவர் என்பது ஒரு பொருட்டு இல்லை. எனினும் உங்களது சருமத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்வதுதான் அவசியம். இது நீங்கள் சரியான ஒப்பனை பொருட்களை தேர்ந்தெடுக்க உதவும். குறிப்பாக அடர் நிறம் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும். பல வகையிலான தோல் நிறம் உள்ளது, குறிப்பாக சூடான (மஞ்சள் அல்லது தங்கக் நிறம்), குளிர் (இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது நீல நிறம்) மற்றும் நடுநிலை (இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலை).
நீங்கள் எப்படி உங்கள் நிறத்தை அறிந்து கொள்ளலாம் என்பதற்கு சில குறிப்புகள்:
அ. வெள்ளை Vs கிரீம் சோதனை: இரண்டு துண்டு துணி எடுத்துக் கொள்ளவும். ஒன்று வெள்ளை மற்றொன்று கிரீம். பிறகு எது உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று பாருங்கள். ஒப்பனை இல்லாமல். அது வெள்ளையாக இருந்தால், உங்களுக்கு சூடான சருமம் உள்ளது என்று அர்த்தம், அல்லது கிரீம் ஏற்றதாக இருந்தால் குளிர் சருமம் என்று அர்த்தம். இரண்டுமே உங்கள் தோல் தொனியில் இருந்தால், நீங்கள் நடுநிலை, வெளிப்படையாக, உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆ. நரம்பு சோதனை: சூரிய ஒளியில் உங்கள் நரம்புகளை பாருங்கள். அது பச்சையாக இருந்தால், நீங்கள் சூடானவர் அல்லது நீல நிறத்தில் இருந்தால் நீங்கள் குளிர்மையானவர். எனினும் சமநிலை கொண்ட சருமம் உடையவர்கள் இரண்டு நிறத்திலும் நரம்புகளை காண நேரிடலாம்.
இ. நகைகள் சோதனை: உங்களுக்கு எது நன்றாக உள்ளது, தங்க நகைகளா அல்லது வெள்ளி நகைகளா? தங்கமாக இருந்தால் நீங்கள் சூடானவர், வெளியாக இருந்தால் நீங்கள் வெள்ளரிக்காயை போன்று குளிமையானவர்.
அடர் சருமத்திற்கு தேவையான சரியான அடிப்படை ஒப்பனை: ஒப்பனை செய்வதற்கு முனபாக அடிப்படை ஒப்பனை செய்வது முக்கியம். உங்களுக்கு சரியான அடிப்படை ஒப்பனை கிடைத்து விட்டால், உங்கள் வேலையில் பாதிக்கு மேல் முடிந்து விட்டது என்று அர்த்தம். ஏனென்றால் இது ஒரு சவால் மிகுந்த வேலையாக உங்களுக்கு இருக்கும்.
1. உங்கள் அடிப்படை ஒப்பனை பொருளை சரியாக தேர்ந்தெடுங்கள்: அடர் சருமம் இருப்பவர்கள் பல வகை நிற அடிப்படை ஒப்பனைப் பொருட்கள் இருப்பதை கண்டு எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் அடைவார்கள். எனினும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முன் நீங்கள் தரமாக இருக்கும் என்று நம்பக்கூடிய ஒரு பொருளை எடுத்து சோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது. மேலும் நீங்கள் அதிக விலை உயர்ந்த பொருளை தேர்ந்தெடுக்க எண்ணினால் சற்று அது நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு மதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. சரியான தேர்வு நல்ல மாற்றத்தை கொடுக்கும். நீங்கள் உங்கள் கழுத்திலோ அல்லது கையிலோ இந்த அடிப்படை ஒப்பனை பொருளை (பவுண்டேசன்) சோதித்து பார்ப்பதற்கு பதிலாக உங்கள் தாடையில் பூசி சோதித்து பார்க்கலாம். வெளிர் நிறம் கொண்ட ஒப்பனை உங்கள் சருமத்தில் சீரற்ற தோற்றத்தையும் ஆங்கங்கே திட்டுகளையும் ஏற்படுத்தக் கூடும். மேலும் அவ்வகை அடிப்படை ஒப்பனை (பவுண்டேசன்) உங்கள் தோல் நிறத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் நீங்கள் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். எனினும் நீங்கள் எதிர் பார்த்த பலன் பெற ஒரு பவுண்டேசன் மிக்சர் வாங்கிக் கொள்ளலாம்.
3. உங்கள் சருமத்தின் தன்மை முக்கியம்: உங்கள் சருமம் அதிக எண்ணை பிசுக்கு கொண்டதாக இருந்தால் நீங்கள் நீர் சார்ந்த பவுண்டேசனை தேர்ந்தெடுக்கலாம். எனினும் உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் நீங்கள் கிரீம் சார்ந்த பொருளை பயன் படுத்த வேண்டும்.
4. நன்கு பூசவும்: உங்கள் பவுண்டேசனை உங்கள் முகத்திற்கு மட்டும் அல்லாமல் கழுத்திற்கும் சேர்த்து நன்கு சருமத்தொடு கலக்கும் வண்ணம் பூச வேண்டும். ஒப்பனை கலைஞர்கள் நல்ல பலன் பெற முதலில் ஒரு நிறம் கொண்ட பவுண்டேசனை மிதமாக முகத்தின் உள் பகுதிகளில் பூசி பின் உங்கள் சரும நிறத்திற்கு ஏற்றார்போல வெளி புறத்திற்கு பூசுவார்கள். இது உங்கள் முக நல்ல பொலிவோடு தெரிய உதவும். இதற்க்கு பிறகு நீங்கள் பெரிதாக எந்த சீர் செய்யும் முயர்ச்சியும் செய்யத் தேவை இல்லை.
5. விஷத்தன்மை உள்ளதா என்று சோதிக்கவும்: அனேக பவுண்டேசன்கள் உங்கள் சருமத்தை பாதிக்கக் கூடும். இது குறிப்பாக அதில் உள்ள ரசாயன பொருட்களின் தாக்கமே. இது அந்த ஒப்பனை பொருளில் உள்ள விஷத்தன்மையையும் குறிக்கும். அதனால் நீங்கள் சரியான கலவை மற்றும் செய்முறையில் உள்ள பொருளை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். மேலும் நீங்கள் உங்கள் சரும நிறத்தை விட மிதமான நிறம் கொண்ட பவுண்டேசனை வாங்குவது நல்லது.
6. நிறத்தை சரிசெய்தல் கடினமானதாக தோன்றலாம்: அடர் நிற சருமம் கொண்ட பெண்களுக்கு தங்களது நிறத்தை சரி செய்வது ஒரு சவால் நிறைந்த விடயமாக தோன்றலாம். நீங்கள் அனேக யுட்யுப் விழியங்களை பார்த்திருந்தால் அதில் சிவந்த நிற பெண்கள் ஐந்து நிறங்களை அதிகமாக பயன் படுத்துவதை அறிந்திருப்பீர்கள். குறிப்பாக பச்சை முதல் லாவெண்டர் வரை, அவர்களது சருமான நிறத்தையும் தாண்டி அவர்கள் தேர்வு செய்யக் கூடும். எனினும் அடர் நிறம் கொண்ட பெண்கள் இந்த வகையில் அதிர்ஷ்ட்டசாலிகள் என்றே கூறலாம். ஏனென்றால் நீங்கள் நிறங்களை சீர் படுத்த அதிகம் போராட வேண்டியது இருக்காது. முகத்தில் இருக்கும் நிறத்திற்கு காரணமான பாதிப்புகள் முதல் சீரற்ற நிறம் மற்றும் கரும் புள்ளிகள் வரை இது சீற்படுத்தக் கூடும்.
7. முக பூச்சு பயன் படுத்துவது அவசியம்: ஒரு தரமான முக பூச்சு பயன் படுத்துவது மிக அவசியம். அது ஒரு நல்ல பொலிவையும் உங்களுக்குத் தரும், எனினும் உங்கள் சருமாம் எண்ணை மிகுந்ததாக இருந்தாலும் நீங்கள் அதை பயன்படுத்துவது அவசியம். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற ஒரு நிறம் கொண்ட முக பூச்சை நீங்கள் பயன் படுத்துவது நல்லது. எனினும் நீங்கள் கசியும் முக பூச்சு பயன் படுத்த எண்ணினால் அதை சிறிதளவு மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
8. ப்ரோன்ஜர் (வெண்கலம் போன்ற நிறம்): எந்த அடர் நிற பெண்ணுக்குத்தான் இதை பயன்படுத்த பிடிக்காது. இது ஒரு அழகிய பொலிவை உங்கள் முகத்திற்குத் தரும். ஒரு நல்ல தோற்றத்திற்கு நீங்கள் நடுநிலை ப்ரோன்ஜரை தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் சருமத்திற்கு நல்ல பொலிவைத் தருவதோடு உங்கள் நெற்றி, கன்னம், மற்றும் தாடை ஆகிய இடங்களில் தடவும் போது சீரான தோற்றத்தை உங்களுக்குத் தரும்.
9. சிறிது சோதனை(அல்லது நிறைய): சிவந்த நிறம் கொண்டவர்கள் போல் இல்லாமல் அடர் நிறம் கொண்டவர்கள், குறிப்பாக பெரி, பிங்க், சிவப்பு அல்லது பவளப்பாறை போன்ற பளபளப்பான நிறங்கள் உடைய பெண்கள் அடர்ந்த நிற ஒப்பனை பொருளை தேர்ந்தெடுப்பது நல்லது. இவை உங்களுக்கு இயற்கையான தோற்றத்தை தரும். அதனால் பல பொருட்கள் இருப்பதை கண்டு நீங்கள் குழப்பம் அடைய வேண்டும், மாறாக நீங்கள் சிறிது சோதனை செய்து பார்த்து உங்களுக்கு ஏற்றத்தை தேர்ந்தெடுக்கலாம்.
10. ஹைலைட்டர்: மற்ற ஒப்பனை பொருட்களை போல இதை சரியாக தேர்ந்தெடுப்பதும் அவசியம். உங்கள் முகத்தில் ஒரு சிறிய பகுதியில் நீங்கள் இதை சோதித்து பார்த்துக் கொள்ளலாம், கையிலோ விரலிலோ அல்ல அடர்ந்த சரும நிறம் கொண்டவர்கள் தங்க நிற சாயல் கொண்ட ஹைலைட்டர் பயன் படுத்த முயற்ச்சிக்கலாம். அது வெள்ளி மற்றும் வெளிர் சிவப்பை விட ஏற்றதாக இருக்கும். மேலும் நீங்கள் நல்ல தோற்றத்தை பெறவும் அது உதவும். இதை நீங்கள் பயன் படுத்தும் போது உங்கள் முகத்தில் அதிக பொலிவு தோன்றுவதை நீங்கள் கவனிக்கலாம்.
அடர் நிற பெண்களுக்கு சரியான கண் ஒப்பனை செய்யும் குறிப்புகள்
1. சற்று மங்கிய நிறமும் இங்கு முக்கியம்! நீங்கள் தேர்ந்தெடுக்கும் பவுண்டேசனை போல மங்கிய நிறமும் நீங்கள் சரியான கண்ணிர்க்கான ஒப்பனையை தேர்ந்தெடுப்பதில் உள்ளது. உங்கள் சருமம சூடானதா, குளிர்ந்ததால் அல்லது நடுநிலை கொண்டதா என்பதை நீங்கள் புரிந்த பிரக அதற்க்கு ஏற்றவாறு உங்கள் கண்ணிர்க்கான ஒப்பனையையும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். எனினும் விதி என்னவெனில், அடர் நிறத்திற்கு வெள்ளி அல்லாமல் பலபப்பான தங்கம் சார்ந்த ஒப்பனை ஏற்றதாக இருக்கும். எனினும் ஒன்றை நினைவில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், வெள்ளை, அல்லது வேறு எந்த வெளிர் நிறமாக இருந்தாலும் அது அடர் நிற சருமத்திற்கு ஏற்றதாக இருக்காது.
2. எப்போதும் ஒரு அடிப்படை ஒப்பனை மற்றும் கண்சீளர் பயன் படுத்துவது நல்லது. பொதுவாக அடர் நிறம் கொண்ட பெண்கள் தங்கள் சருமத்தில் அதிகம் எண்ணைத் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் நீங்கள் அடிப்படை ஒப்பனை பயன் படுத்தி உங்கள் கண் இமைகளை மிருதுவாக்க முயற்ச்சிப்பது நல்ல நிறத்தை தரும். மேலும் அது நீண்ட நேர பலனைத் தரும். மேலும் நீங்கள் கண்ணிர்க்கான ஒப்பனை செய்வதற்கு முன், மிதமான ஒப்பனை அல்லது கன்சீளர் பயன் படுத்துவது நல்லது. இது ஏனென்றால் நிறங்கள், எவ்வளவு வெளிர் நிறமாக இருந்தாலும் அது அடர் நிற சருமத்திற்கு எடுப்பாக தெரியாது. மேலும் கிரீம் சார்ந்த பொருள், குறிப்பாக கண் பென்சில், பூச்சு அல்லது க்ரீம் சார்ந்த ஒப்பனை நிறத்தை அதிகப் படுத்தி தனியாக தெரிய வைக்கும்.
3. சோதித்து பார்க்க பயப்பட வேண்டாம். புகை படிவம் கொண்ட கண்கள் அடர் நிற சருமம் உள்ளவர்களுக்கு மிக அழகாக இருக்கும். இது அநேகமாக அதிகப் பெண்களின் விருப்பமாகவும் இருக்கும் அதனால் நீங்கள் கண்களுக்கு ஒப்பனை செய்யும் போது ஒரு வெளிர் நிற ஒப்பனையும் ஒரு அடர் நிற ஒப்பனையும் தேர்ந்தெடுப்பது நல்லது. எனினும் அவை ஒரே நிறத்தை சார்ந்து இருக்க வேண்டும். பின் அவற்றை கலந்து நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் அடர் நிறம் சருமம் அடர் நிறங்களோடு நன்கு ஒத்துப் போகும். அதனால் நீங்கள் நிறங்களை தேர்ந்தெடுக்கும் போது ஐயம் கொள்ளத் தேவை இல்லை. பிளம்ஸ், வெண்கல, செப்பு, பழுப்பு, பச்சை அல்லது தங்கம் ஆகிய நிறங்கள் உங்கள் சரும நிறத்திற்கும் கண்ணின் நிறத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
4. புருவ சக்தி. மெல்லிய புருவங்கள் அதிகம் பிரபலமான காலம் போய் தற்போது பெண்கள் அடர்ந்த புருவங்களை அதிகம் விரும்புகிறார்கள். அதுவும் அடர் நிற சருமம கொண்ட பெண்களுக்கு அது மிக அழகாக உள்ளது. அது உங்கள் சரும நிறத்திற்கு தக்கதாக இருக்கும். நீங்கள் புருவத்திற்க்கு கீழ் வெள்ளை நிழல் பூச்சு கொடுத்து பின் அதை அடர்த்தியாக காட்ட ஒப்பனை செய்து கொள்ளலாம்.
5. ஐலைனர் மற்றும் மஸ்கார உங்கள் தோற்றத்தை மாற்ற முடியும்: பிபாஷா பாசுவின் பூனை கண் தோற்றம் கவரும் விதமாகவும் நன்றாகவும் இருக்கிறது. உங்களுக்கு அடர் நிற சருமம் உள்ளது என்றால், கருப்பு அல்லது காப்பி நிற ஐலைனர் மற்றும் மஸ்கார உங்கள் கண்களை பொலிவோடு காட்ட உதவும். மேலும் நீங்கள் சில கூடுதல் ஒப்பனைகளையும் செய்யலாம். நீங்கள் உங்களுடைய ஐலைனரை தேர்ந்தெடுக்கும் முன் அதனை சோதித்தும் பார்க்கலாம். எனினும் உங்கள் ஐஷாடோவை அடிப்படை நிறத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
சரியான உதட்டு ஒப்பனை செய்ய சில குறிப்புகள்
1. ஈரப்பதமாக்குதல்
இது அடர் நிற சருமம் கொண்ட பெண்களுக்கு மட்டும் இல்லை, அனைவருக்கும் தான். எப்போதும் உங்கள் உதடுகளை ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உதடுகள் வறண்டும் வெடிப்புகள் கொண்டும் இருந்தால் எந்த உதட்டு சாயமும் அல்லது ஒப்பனைகளும் நீங்கள் எதிர் பார்க்கும் பலனைத் தராது.
2. சரியான மேட்டே தேர்ந்தெடுக்கவும்
பெண்கள் அதிர்ஷ்ட்டம் செய்தவர்கள். மேட்டேவை தவிர்க்கும் அநேகமானவர்கள் அழகாக இருந்தாலும், நீங்கள் பளபளக்கும் உதட்டு சாய நிறத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. எனினும் உறைந்த நிறங்கள் நீங்கள் எதிர் பார்க்கும் பலனைத் தராமல் போகலாம். அதனால் அதை தவிர்ப்பது நல்லது.
3. உங்கள் உதடுகளுக்கு பவுண்டேசன் கொடுங்கள்
கண்களுக்கு கொடுப்பது போல நீங்கள் அடர்ந்த நிற சருமம் கொண்டவராக இருந்தால் உங்கள் உதடுகளுக்கும் அத்தகைய ஒப்பனையை கொடுக்க வேண்டும். சிறிது பவுண்டேசன் தருவதால் உங்கள் உதடுகள் துல்லியமான வடிவமும் அளவும் பெரும்.
4. எப்போதும் சிவப்பு
அடர் நிற சருமம் கொண்ட பெண்களுக்கு சிவப்பு உதட்டு சாயம் ஏற்றதாக இருக்கும். இது ஏனென்றால் உங்கள் சருமத்திற்கு மேலும் நிறம் கூடுவது போலவும் அழகு சேர்ப்பது போலவும் இது இருக்கும். ஆரஞ்சு-சிவப்பு அல்லது செங்கல் சிவப்பு, எதுவாக இருந்தாலும் உங்களுக்கு நல்ல அழகைத் தரும்.
5. வண்ணம் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்
நிறங்களை தேர்ந்தெடுப்பதில் கூச்சம் அடையாதீர்கள். நிறமற்ற என்பதில் இருந்து அடர்ந்த நிறங்கள் வரை, பெரும்பாலான நிறங்கள் உங்கள் ஒப்பனையை அழகாக ஆக்குவும். மேலும் அது ஒரு நல்ல நிறைவை பெற உதவும். சாக்லேட், அடர் சிவப்பு, மௌன், பெர்ரி, ஆரானே-சிவப்பு அல்லது ஒயின் போன்றவை. பவளப்பான நிறமற்ற, மற்றும் மோச்ச நிறம் மேலும் அழகான மற்றும் நிறைவான ஒப்பனை செய்ய ஏற்றதாக இருக்கும்.
எளிமையான மற்றும் தெளிவான பளபளப்பான உதட்டு பூச்சு உங்கள் அழகை மேலும் அதிகரிக்க செய்யும். மேலும், ஒரு வெளிர், மேட் இளம் சிவப்பு அல்லது வெளிர் பழுப்பு நிறங்கள் தெளிவாக தெரிவதை நீங்கள் காணலாம்.
தவிர்க்க வேண்டிய தவறுகள்
1. தவறான வெளிச்சத்தில் ஒப்பனை செய்வது. நீங்கள் ஒப்பனை செய்யும் அறையில் சரியான வெளிச்சம் இல்லை என்றால் நீங்கள் எதிர் பார்த்த பலனை பெற முடியாமல் போகலாம். இதனால் நீங்கள் தவறான நிறத்தை தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்படலாம். அல்லது சரியான ஒப்பனை செய்ய முடியாமல் போகலாம். முடிந்த வரை இயற்கையான வெளிச்சத்தில் ஒப்பனை செய்ய முயற்சி செய்வது நல்லது.
2. வாங்கும் முன் சோதித்து பார்ப்பது. நீங்கள் பவுன்டேசன் மற்றும் கன்சீளர் போன்ற ஒப்பனை பொருட்களை வாங்கும் முன் சோதித்து பார்த்துக் கொள்வது மிக அவசியம். சரியான நிறம், சரியான கலவை, துல்லியமான ஒப்பனை போன்றவை பெறுவது முக்கியம். மேலும் உங்கள் கைகளில் அல்லது விரலில் சோதித்து பார்ப்பதை விட உங்கள் முகத்தில் ஒரு பகுதியில் சோதித்துப் பார்ப்பது நல்லது. குறிப்பாக உங்கள் தாடையில் சோதித்து பார்க்கலாம்.
3. வெளிர் நிற பவுண்டேசன். வெளிர் நிற பவுண்டேசன் பயன் படுத்தி உங்கள் சருமத்தை மேலும் வெளிர் நிறமாகக முயற்சி செய்யாதீர்கள். எத்தனை படிவம் நீங்கள் போட்டாலும், இயற்கையான சரும நிறம் பெறுவது முக்கியம். உங்கள் சருமம் சாயம் படிந்து தோன்றக் கூடாது. எனினும் நீங்கள் தங்க நிறம் சார்ந்த பவுண்டேசன் தேர்ந்தெடுத்து உங்கள் சரும நிறத்தை மேலும் பொலிவு பெற செய்யலாம்.
4. பொருந்தாத ஐஷடோ மற்றும் உதட்டு சாயம். அடர் நிற பெண்கள் உங்கள் புருவம், கண்கள் மற்றும் உதடுகளுக்கு நீங்கள் ஒப்பனை செய்ய எண்ணினால், உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் உள்ளது. எனினும் நினைவில் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள், மிக வெளிர் நிற ஒப்பனைகள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்காது. அதனால் உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற ஒன்றை நீங்கள் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. சரியாக பவுண்டேசனை பூசாமல் விடுவது. உங்கள் முகம் மற்றும் கழுத்தில் இருக்கும் நிறம் ஒன்று போல இருக்க வேண்டும். அதனாலேயே நீங்கள் எப்போதும் கழுத்திற்கும் பவுண்டேசன் போட வேண்டும் என்று கூறுகிறோம். உங்கள் முகம் ஒரு நிறத்திலும் கழுத்து வேறு நிறத்திலும் இருப்பது நன்றாக இருக்காது. அதனால் உங்களுக்கு ஒரு சிறப்பு குறிப்பு கொடுக்க வேண்டும் என்றால், உங்கள் காதுகளுக்கும் சேர்த்து பவுண்டேசனை போடுவது மேலும் நல்ல தோற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். இல்லை என்றால் தனியாக உங்கள் ஒப்பனையை விட்டு வெளியேத் தெரியும்.
6. கண்களுக்கு கீழே இருக்கும் இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. வெளிர் நிற கண்சீலரை உங்கள் கண்களுக்கு கீழ் கரும் வளையம் மறைய பயன் படுத்துவது நல்ல பலனைத் தரும். உங்கள் குறிக்கோள் அத்தகைய கருவளையத்தை மறைக்க எண்ணினால் நீங்கள் சரியான பூச்சை உங்கள் முகம் அனைத்திற்கும் கொடுக்க வேண்டும். எனினும், ஒரு நல்ல நிறம் திருத்தும் ஒப்பனைப் பொருளை நீங்கள் பயன் படுத்தி சீராக்கலாம் செய்யலாம். உங்களது குறிக்கோள் நீங்கள் செய்திருக்கும் ஒப்பனை தனித்தனியாக தெரியக் கூடாது.
7. அதிகம் பேகிங் பவுடரை பயன் படுத்துவது வெளிர் நிற சருமம் போன்று அல்லாமல், இத்தகைய பேகிங் பவுடரை பயன் படுத்துவது உங்கள் முகத்தில் சீரற்ற தோற்றத்தை தரக் கூடும். ஆங்காங்கே வெள்ளை திட்டுகள் தோன்றக் கூடும். இதை அடர் நிறம் கொண்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் அதிகம் இத்தகைய பவுடர்களை பயன் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
8. தவறாக உங்கள் புருவங்களை நிரப்புவது அடர் நிற சருமம் உள்ள பெண்கள் கருமையான முடிகளையும் அநேகமாக கொண்டிருப்பார்கள். குறிப்பாக கருப்பு அல்லது காப்பி நிறம் அதிகம் இருக்கும். அதனால் அவர்கள் தங்களது முடியின் நிறத்திற்கு ஏற்றவாறு புருவங்களுக்கும் நிறம் கொடுக்க எண்ணுவார்கள். இது உங்கள் புருவங்களை அதிகம் அடர்ந்ததாக காட்ட நேரிடும். மேலும் நீங்கள் கோபத்தோடு இருக்கும் தோற்றத்தையும் உங்கள் முகத்தில் காட்டும். அதனால் நீங்கள் வெளிர் நிறத்தை அதிகம் தேர்ந்தெடுப்பது அவசியம். இது உங்கள் புருவங்களுக்கு இயற்கையான வடிவத்தையும் பெற உதவும். மேலும் உங்கள் முக அழகையும் தோற்றத்தையும் மேன்மை படுத்தி காட்டும்.
உங்களை நீங்களே நேசிப்பது முக்கியம்
நாம் அதிகம் அடர் நிற மக்கள் நிரந்த நாட்டில் வாழ்ந்தாலும், மக்கள் அதிகம் சிவந்த மற்றும் வெளிர் நிறங்களை கண்டு கவலைப்படுகிறார்கள். இதனாலேயே அதிகப்படியான சிவப்பு நிறத்தை அதிகப் படுத்தக் கூடும் கிரீம்கள் சந்தையில் விற்கப் படுகிறது. அது மட்டுமே அழகை அதிகப் படுத்தக் கூடும் என்ற விருப்பமும் உருவாக்கப் படுகிறது. நீங்கள் அடர் நிற சருமம் கொண்டவராக இருந்தால் இத்தகைய தவறான கருத்தை உங்கள் மனதில் இருந்து வெளியேற்றுங்கள். தற்போது இத்தகைய விடயங்கள் மாறத் தொடங்கி உள்ளது. மக்கள் அனைத்து நிறங்களையும் நேசிக்கவும் வரவேற்கவும் தொடங்கி விட்டனர். அதனால் நீங்கள் அழகாகவும் நல்ல தோற்றத்தோடும் இருக்குறீர்களா என்பதை அவர்கள் பெரிது படுத்துவதில்லை. அவர்கள் அனைத்தையும் வரவேற்கிறார்கள். நான் இந்த சமுதாயத்தை பற்றி பேசவில்லை, உங்களை பற்றிதான். நீங்கள் உங்களை நேசிக்கத் தொடங்கினால் உங்கள் வாழ்க்கை எளிதாகவும் அழகாகவும் தானாக மாறிவிடும். மேலும் அது உங்களுக்கு தன்னம்பிக்கையையும் தரும். அதனால் உங்கள் சருமத்தின் நிறத்தை கண்டு அது உங்கள் பலவீனம் என்று நினைக்காதீர்கள். உங்கள் சருமத்தின் நிறம் ஒரு தவறு இல்லை. அது நீங்கள் யார் என்பதின் ஒரு பகுதி மட்டுமே. அதனால் உங்கள் உண்மை அழகையும் தோற்றத்தையும் மறைக்க ஒப்பனைகளை செய்து கொள்வதை விட உங்களது இயற்கையான அழகை மேம்படுத்த நீங்கள் முயற்சி செய்யலாம். அவ்வாறு நீங்கள் என்னவும் பார்க்கவும் தொடங்கினால், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கான விதிகளை நீங்களே உருவாக்குவீர்கள்.
உங்கள் சரும நிறத்தை மேம்படுத்து பல சிகிச்சை முறைகள் உள்ளது. குறிப்பாக தோல் – வெளுக்கும், லேசர் சிகிச்சை, ஊசி, இரசாயன உரித்தல் போன்றவை உங்கள் தன்னம்பிக்கை போன்று உங்களுக்கு பலன் கொடுக்குமா என்பது சந்தேகமே. மேலும் நீங்கள் சிவந்த நிறத்தை பெற இவை அனைத்தும் செலவு மிகுந்த சிகிச்சை முறையுமாகும். இது பாதுகாப்பற்றதுமாகும். மேலும் நீங்கள் எதிர் பார்க்கும் பலனை தருவதற்கு அது உத்திரவாதமும் தராது. எனினும் நீங்கள் உங்களை அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் எதுவும் உங்கள் கனவையும் குறிக்கோளையும் அடைவதில் இருந்து உங்களை தடுக்க முடியாது. எனினும் நாங்கள் நீங்கள் நல்ல சரும தோற்றத்தை பெற முயற்சி செய்யக் கூடாது என்று சொல்லவில்லை, எனினும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும். உங்களை நீங்களே எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் நேசிக்கத் தொடங்கினால், அனைத்தும் உங்கள் வசப்படும். அதன் பின் உங்களுக்கு சிவப்பு நிறம் தரும் க்ரீமோ சிகிச்சையோ தேவை இல்லை. உங்கள் கனவை நோக்கி நம்பிக்கையோடு நீங்கள் பயனிப்பீர்கள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo