logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
காதலர் தினம் கொண்டாடப்படுவதற்கான வரலாற்று காரணம் தெரியுமா?

காதலர் தினம் கொண்டாடப்படுவதற்கான வரலாற்று காரணம் தெரியுமா?

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம்(valentines day) தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை(valentines day) வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

லூப்பர்காலியா என்ற திருவிழாவை ரோமானியர்கள் கொண்டாடி வந்தனர். பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த நாளையே காதலர் தினமாக கொண்டாடுவதாக சிலர் கூறுகின்றனர். இருப்பினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின(valentines day) கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்தபோது, தனது படைவீரர்களுக்கு முட்டாள் தனமாக உத்தரவு பிறப்பிப்பானாம். இந்த அரசனின் நடவடிக்கையால் படையில் சேர பலர் தயங்கினர். திடீரென ஒருநாள் அவன் அமைச்சர்களை அழைத்தான். ‘ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று உடனே ஒரு அறிவிப்பு செய்யுங்கள். ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள்’’ என்றானாம்.

இதை கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இது இரண்டும் இல்லாவிட்டால் படையில் சேர்வார்கள் என்று அவன் நினைத்துள்ளான். பாதிரியார் வாலண்டைன் அரசனின் இந்த அறிவிப்பை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். காதலிக்கு அனுப்பிய முதல் வாழ்த்து: இதையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது.  வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி அட்டை ஒன்றில் காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார் வாலண்டைன். இந்த வரலாறு உண்மையாக இருக்குமானால், முதல் காதலர் வாழ்த்து இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள் 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி.  வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானிய சர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது ‘பாகான்‘ விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

காதலர் தினக்(valentines day) கொண்டாட்டத்திற்கு உலகம் தயாராகியிருக்கிறது. நிஜக் காதலர்களின் கொண்டாட்டத்திற்கான நாள் இது!

இந்த வருடத்திற்கான காதலர் தின(valentines day) கொண்டாட்ட வாரம் தொடங்கி விட்டது. பிப்ரவரி 7-ம் தேதியான இன்று ‘ரோஸ் டே’வுடன் தொடங்கியிருக்கும் இது, அடுத்ததாக ‘ப்ரபோஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, என விதவிதமான காதல் வெளிப்படுத்தல் நாட்களைக் கடந்து இறுதியாக பிப்ரவரி 14-ல் வேலண்டைன்ஸ் டே-வை கொண்டாட காத்திருக்கிறார்கள் உலகக் காதலர்கள்.

சாக்லெட், டெடி பியர், ரோஸ் இவற்றையெல்லாம் வாங்கிவிடலாம். ஆனால் உங்கள் அன்புக்குரியோரின் கவனத்தைப் பெற அன்றைய தினம் ஒரு கவிதை அல்லது ரொமாண்டிக்கான ஓர் குறுஞ்செய்தி அத்தியாவசிய தேவையல்லவா?

உங்கள் அன்புக்குரியவரை ரொமாண்டிக் மழையில் நனையவிட தயாராகிவிட்டீர்களா! இன்றைய தினத்தில் எந்த வித சண்டையையும் வைத்துக்கொள்ளாதீர்கள். விவாதம் வந்தால் கூட நீங்களாகவே முன் வந்து விட்டுக்கொடுத்து உங்கள் அன்புக்குரியவரின் அன்பையும் அனைப்பையும் பெற்றுக்கொள்ள தவரவிட்டு விடாதீர்கள். பிறகென்ன கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள். காதலர் தின வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Also read dreesses to wear this valentines day

12 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT