இந்த ராசியில் உங்கள் காதலர் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான்!

இந்த ராசியில் உங்கள் காதலர் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான்!

காதலில் என்ன ராசி (astrology) என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் நமது பிறப்பின் நேரம் அதில் அமைந்த விதி அந்த நட்சத்திர ராசிபடிதான் நம் அடிப்படை குணங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் நிர்ணயிக்கப்படுகிறது என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் நிச்சயம் இதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.


நமக்கான வாழ்க்கை அதில் நம்மோடு பயணிக்கப்போகிறவர்கள் நம் உறவுகள் நம் வலிகள் நம் ப்ரியங்கள் எல்லாமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவை. நமக்கு தான் தெரியாதே தவிர இதனை நமது பூர்வ ஜென்ம புண்ணிய பாவங்கள் அடிப்படையில் விதி வடிவமைக்கிறது.


ஒரு தனி மனிதனின் வாழ்க்கையின் அடிப்படை காதலில் ஆரம்பிக்கிறது. காதல் அதன்பின்பான திருமணம் குழந்தைகள் என உலகின் ஒட்டுமொத்த நடவடிக்கைக்கும் காதல்தான் அடிப்படையாக இருக்கிறது


பல்வேறு வகையான காதல்கள் இருப்பதால் இதுதான் சரியான காதல் என்று யாராலும் சொல்ல முடிவதில்லை. ஆனாலும் எல்லா காதலுக்கும் ஒரு ஆரம்பப்புள்ளி என்பது ப்ரியத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.  எல்லா ராசிக்காரர்களும் ப்ரியத்தோடுதான் காதலிப்பார்கள். ஆனால் கீழே குறிப்பிடப்படுகின்ற ஐந்து ராசிக்காரர்களோடு அவர்களால் போட்டி போடா முடியாது. அந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் இவர்கள் காதல் இருக்கும்.கடகம்
இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். தாங்கள் பெறுவதை பலமடங்கு திருப்பித் தர வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களை நேசிக்கும் ஆள்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். ஏனென்றால் அத்தனை அன்பையும் கொட்டிக் கொட்டி காதல் செய்வார்கள். இவர்களிடம் கருணையும் வாய்மையும் அற்புதமாக இருக்கும். அளவுக்கதிகமாக காதலிக்கும் இவர்களின் துணையும் இதே குணத்தில் இருந்தால்தான் இவர்கள் வாழ்க்கை  சிறக்கும். மிக மெல்லிய மனம் கொண்ட இவர்கள் இதே போன்ற ஒருவரை நேசிப்பது நல்லது.துலாம்
இந்த ராசியை சேர்ந்தவர்கள் மிக நேர்மையானவர்கள். சமநிலை உடையவர்கள். எதனையும் பொறுமையோடு கையாள்வார்கள், ஏமாற்றப்பட்டால் மட்டுமே இவர்கள் சமநிலை தவறுவார்கள். எப்போதும் துறுதுறுப்பாக இருப்பார்கள். எளிதில் மனம் இரங்குவார்கள். தான் காதலிக்கும் நபரை கொண்டாடுவார்கள் . மதிப்பார்கள். பத்திரமாக பார்ப்பார்கள். இந்த ராசிக்காரரைக் காதலிப்பவர்கள் நிச்சயம் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள்தான்.


தனுசு


 தனுசு ராசிக்காரர்கள் அறிவாளிகள். அடுத்தவர்களை புரிந்து அதற்கு ஏற்றாற்போல நடந்து கொள்வார்கள். வாக்குவாதங்கள் ஏற்படும்போது அடுத்தவருக்கான நேரத்தை வீட்டுக் கொடுப்பார்கள். தங்கள் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய இவர்கள் துணிவார்கள். இதுவே இவர்களுக்கு எதிராக முடியும். ஆகவே என்ன செய்ய முடியுமோ அதனை மட்டுமே காதலுக்காக செய்ய வேண்டியது இவர்களுக்கு நன்மையைத் தரும்.மகரம்இந்த ராசியை சேர்ந்தவர்கள் எளிதில் காதல் வயப்பட மாட்டார்கள். ஆனால் அவர்களை காதலிக்க ஆரம்பித்தால் அவர்களின் காதல் துணைதான் அதிர்ஷ்டசாலி. சட்டென முடிந்து விடும் காதலில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆயுள்பரியந்தம் வரை நேசிக்க நினைப்பார்கள். தங்கள் காதல் துணையை கண்ணுக்குள் பொத்தி வைத்துப் பாதுகாப்பார்கள். இவர்கள் எந்த நிர்பந்தமும் விதிக்க மாட்டார்கள். நீங்கள் சுதந்திரமாகவே காதல் செய்யலாம். தான் நேசிப்பது போலவே தன்னையும் நேசிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.மீனம்இந்த ராசிக்காரர்கள் மிக இளகிய மனம் கொண்டவர்கள். அறிவானவர்கள். மற்றவர்கள் நினைப்பதை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். வாக்குவாதங்களில் ஈடுபட மாட்டார்கள். சண்டை வந்தால் பொறுமையாக தனது தருணம் வரும்வரை காத்திருப்பார்கள். என்ன பேசலாம் என்ன பேசக்  கூடாது என்பதனை உணர்ந்தவர்கள்.இவர்களும் சுயநலமில்லாமல் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்படி செய்தால் உங்களுக்கு எல்லாமே இரட்டை சந்தோஷமாகவே தருவார்கள்.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.


 


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்