இந்தக் காதல் மாதத்தில் யாருக்கெல்லாம் காதல் வசப்படும்? பார்க்கலாமா !

இந்தக் காதல் மாதத்தில் யாருக்கெல்லாம் காதல் வசப்படும்? பார்க்கலாமா !

இது காதலின் மாதம். காதலைக் கொண்டாடும் ஆட்களுக்கு எல்லா நாளும் காதலர் தினம்தான். ஆனாலும் காதலில் இருப்பவர்களும் காதலுக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் 14ஆம் தேதி தான் காதலர் தினம். காதலர் தினம் என்பது காதலின் திருவிழாவாக உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. வாழ்த்து அட்டைகள் பரிசு பொருட்கள் உடைகள் எல்லாமே காதலின் சிவப்பு நிறத்தில் அல்லது இதயத்தின் வடிவத்தில் பெரும்பாலும் விற்பனையாகும்.


இன்றைய தினத்தில் காதலை நேசிக்கும் அனைவரும் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். நமக்கான காதல் பரிசு என்னவாக இருக்கும் என்பதற்காக ஆவலோடு காத்திருப்பார்கள். ஒரு சில சிங்கிள்களுக்கு காதலே பரிசாக வரும் நாளும் இதுதான். (lovers day astrology)


அப்படிப்பட்ட காதல் மாதத்தில் யாருக்கு காதல் வசப்படும் யாரெல்லாம் காத்திருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.


மேஷம்


உங்கள் ராசிக்கு நீங்கள் எல்லாவிதமான விஷயங்களையும் சுலபமாகக் கையாளுவீர்கள். கெஞ்சியோ மிரட்டியோ உங்கள் வேலைகளை நீங்கள் வாங்கிக் கொள்வீர்கள். இந்த வருடம் முழுவதும் நீங்கள் தெய்வ நம்பிக்கையோடு இருப்பது நல்லது. மற்றவரை ஆளுமை செய்வதால் உற்சாகம் உங்களுக்கு கூடப் பிறந்தது. ஆனாலும் நீங்கள் இன்னமும் முன்னேற வேண்டும். இந்த காதல் மாதம் உங்களுக்காகவே காத்திருக்கிறது. உங்களைத் தேடி காதல் வரப்போகிறது.ரிஷபம்


சோகத்தை கடந்தால்தான் சந்தோஷம் என்பதில் உறுதியாக இருப்பீர்கள் உங்கள் தைரியம்தான் உங்கள் வழித்துணை என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். பல வேகமான ஈடுகொடுப்பீர்கள். அதில் வெற்றியும் புகழும் அடைவீர்கள். எதிரான இரண்டு விஷயங்களுக்கு உங்களை நிர்பந்தப்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் வயது ஏற ஏற பலமடங்கு பெருகும். ஒரு ஆழமான காதல் கொஞ்சம் சிக்கல்களோடு உங்களை சந்திக்கும்.மிதுனம்


கடந்து வந்த காலம் வலிகள் இவற்றை நினைத்து உங்கள் நிகழ்காலத்தை இறந்த காலம் ஆக்கி விடாதீர்கள். உங்கள் உள்மனதில் குரலை கேட்க ஆரம்பியுங்கள். உங்கள் அறியாமையை இந்த வருடம் மாற்றியமைக்கும். சில எதிர்பாராத திருப்பங்கள் உங்களுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். அனுபவங்கள்தான் ஆசான். பெருமழைக்கு ஒரு புயல் தேவை என்பது போல. சில சிக்கலுக்கு பின் உங்களுக்கு அழகான காதல் அமையும்.கடகம்


எல்லாவற்றையும் சிந்தித்து யோசித்து அதன்படி செயல்படுவீர்கள், நிதானம் மிக்கவர்கள். வாக்குவன்மை மிக்கவர்கள். யாரையும் உங்கள் வார்த்தைகளால் வசப்படுத்துவீர்கள். இந்தவருடம் உங்களுக்கு சந்தோஷம் காத்திருக்கிறது. ஒரு அழகான இதயம் உங்களோடு இணைந்து துடிக்க தயாராக இருக்கிறது.சிம்மம்


உங்கள் கம்பீரம் மேலும் அதிகரிக்கும். உங்களுக்கான வருடம்தான் இந்த வருடம்தான். பெரியோர் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். இந்த காதலர் தினம் பல வித்யாசமான விஷயங்கள் உங்களுக்கு தரும். உங்களுக்கு ஒத்தடம் தரும் உறவொன்று உங்களைத் தேடி வருகிறது. பதட்டப்படுத்திய சூழ்நிலைகளுக்கு மருந்தாக உங்களுக்கான அமைதியை அந்த உறவு உங்களுக்குத் தரும்.கன்னி


உங்கள் மனது காயப்படும் விஷயங்கள் நடந்தாலும் அதன் காரணங்களை கண்டறியுங்கள். உங்களுக்கான உறவு தூரத்தில் இருக்கிறது. கண்டுபிடியுங்கள். உங்கள் இறந்த காலத்தை இறக்க விடுங்கள். வருங்காலம் உங்களுக்காக பிறக்கும். காதல் விஷயத்தில் நீங்கள் அதனை துரத்திப் பிடிக்காதீர்கள். உங்களிடம் இருந்த பிரிந்த உறவை நீட்டிக்க முயற்சி செய்யுங்கள்.துலாம்


காதல் உங்கள் நாடிகளில் நிரம்பியிருக்கும். உங்களின் கடந்தகால வலிகளை உங்களது இறை தேடல் குணப்படுத்தும். இந்த வருடம் உங்களை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நிம்மதி நிகழும். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். இந்த காதலர் தினம் உங்களுக்கு எதிர்பாராத பரிசு தரப்போகிறது.


 விருச்சிகம்


உங்களுக்குத் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நீங்கள் காதலித்த தீர வேண்டும் என்கிற நிலை இந்த வருடம் ஏற்படும். உங்கள் தன்னம்பிக்கை உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் காதலை ஒட்டி நீங்கள் பல சவால்கள் சந்திக்க வேண்டி வரலாம். தயாராகுங்கள். போருக்கு தயாராவது போல பயிற்சி முக்கியம்!தனுசு


இந்த காதலர் தினத்தில் உங்களுக்கு பல முக்கிய மாற்றங்கள் நிகழும். புதியதாக நண்பர்கள் அமைவார்கள். உங்களிடம் நியாயம் இல்லாமல் பலர் நடந்து கொள்வதாக நினைப்பீர்கள். தனிமையை நீங்கள் தவிர்ப்பது நல்லது. முழுக்க விருப்பமற்ற நிகழ்வுகள் நடந்தாலும் ஒரு அன்பு உங்களுக்கு காத்திருக்கும். உங்களுக்குத் தோள் கொடுக்கும்.மகரம்


உங்களுக்கு நடந்த மோசமான விஷயங்கள் சேரக்கூடாத உறவுகள் போன்றவைகளால் உங்களை தனிமையில் விட்டு விடுவார்கள். இருப்பினும் இந்த வருடம் உங்களுக்கு சந்தோஷம் தரக் காத்திருக்கிறது. இருட்டான பக்கங்கள் உங்கள் வாழ்வில் இனியும் இருக்காது. உங்கள் உறவினை மீட்டெடுப்பீர்கள் . புது உறவினை வரவேற்பீர்கள்.கும்பம்


நீங்கள் எல்லோர் கவனத்தையும் ஈர்ப்பதில் வல்லவர். உங்கள் குணம் உங்களுக்கு புகழைத் தேடித் தரும். பயணங்களை நேசிப்பீர்கள். உங்களுக்கு பிடித்தவரோடு பயணம் செய்வது உங்களுக்கு புத்துணர்வு தரும். உங்கள் உறவில் பல பாகுபாடுகள் இருந்தாலும் உங்களுக்குள் பொங்கும் காதல் எல்லாவற்றையும் சரி செய்யும்.மீனம்


உங்களுக்கான பரிசுத்தமான அன்பு உங்களைத் தேடி வரும். உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு நடங்கள். உங்களின் பழைய கால வலிகள் மற்றும் வேதனைகளை ஆற்றும்படி உங்களுக்குப் புதிய உறவொன்றை இந்த மாதம் ஏற்படுத்திக் கொடுக்கும். நீங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் போகாத பக்கம் ஒன்றை நோக்கி இப்போது நீங்கள் பயணிப்பீர்கள். அது உங்களுக்கு நல்லது தான். 


---


 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.