உன்னாலே எனக்குள் உருவான உலகம் , பூகம்பம் இன்றி சிதறுதடா..

உன்னாலே எனக்குள் உருவான உலகம் , பூகம்பம் இன்றி சிதறுதடா..

நேசிப்பதை நிறுத்துங்கள்(Stop Loving Someone)


''உன்னாலே எனக்குள் உருவான உலகம் பூகம்பம் இன்றி சிதறுதடா'' என தமிழில் வெளியான படமொன்றில் ஹீரோயின், ஹீரோவின் பிரிவை எண்ணி பாடுவார்.


காதல்(Love) எவ்வளவுக்கு எவ்வளவு இனிமையானதோ, அந்தளவுக்கு கசப்பானது காதலன்/காதலியை விட்டுப் பிரிவது தான் பிரேக்கப் (Breakup). தவறான நபருடன் காதலில் இருப்பது, தவிர்க்க முடியாத காரணங்கள், ஒரு தலையாக காதலிப்பது போன்ற காரணங்களால் உங்கள் காதலன்/காதலியை விட்டுப் பிரிவது போன்ற சூழ்நிலை வரும்போது நீங்கள் மிகவும் மோசமான ஒரு மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது? அதுபோன்ற தருணங்களில் எப்படி நடந்து கொள்வது போன்றவற்றை இங்கே பார்ப்போம்.இந்த மாதிரி தருணங்களில் உங்களைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் அவர் உங்களைக் காதலிக்கவில்லை அல்லது அவருக்கு உங்கள் நினைவே
இல்லை என்று தொடர்ந்து அவர் குறித்த குறைகளை சொல்லிக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு அவர் குறித்த நினைவுகள் குறையலாம்.
அதுபோன்ற நினைவுகளை மறப்பது கடினமானது தான் ஆனால் அதிலிருந்து வெளியில் வர நீங்கள் முயற்சிக்க வேண்டும்.நன்றாக அழுங்கள்(Cry)


உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் அவற்றை சுதந்திரமாக விட்டுவிடுவது நல்லது. அழுவதன்(Cry) மூலம் நமது உடலில் இருந்து டாக்ஸின் என்னும் நச்சுப்பொருள் வெளியாகி, மன அழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.எப்போது உங்கள் உடலில் இருந்து கண்ணீர் வெளியாகிறதோ அப்போது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்கள் மற்றும் அதுதொடர்பான கெமிக்கல்களை உடலில் தக்க வைக்கிறது. அழுவதால் உங்களது மன அழுத்தம்(Depression) பெருமளவு குறையும் என்பதால் அழுகையைக் கட்டுப்படுத்தாதீர்கள்.அழுகையை அடக்குவது நம்மை வலிமையானவராக மாற்றும் என பெரும்பாலான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது
உண்மையில்லை. உங்கள் கண்ணீரைத் தடுப்பதும், அடக்கி வைப்பதும் அடக்குமுறையின் ஒரு வடிவம் தான். அழ வேண்டிய நேரத்தில் அழுகாமல்
கண்ணீரை அடக்கி வைப்பது மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என சைக்காலஜிஸ்ட்டுகள் நம்புகின்றனர். எனவே அடுத்தமுறை யாராவது
அழுகாதே(Dont Cry) வலிமையாக இரு என்று உங்களுக்கு அறிவுரை கூறினால், அவர்களிடம் சொல்லுங்கள் அழுவது எனது மனநிலையை மேம்படுத்தி, என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் என்று.


தெரபி:காதலிக்கும்போது(Love) உங்கள் ஒட்டுமொத்த உலகம் அவராக இருந்திருப்பார். அந்த மனிதர் குறித்து நினைப்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது, அல்லது உங்களது தினசரி செயல்களை அவரது நினைவு இல்லாமல் உங்களால் செய்ய முடியாத போது தெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். உங்கள் உணர்ச்சிகளை ஏற்றுக் கொள்வதற்கும் அந்த சூழ்நிலையை சிறப்பாகக் கையாள்வதற்கும், குறிப்பாக உங்கள் ஒட்டுமொத்த நிலையையும் சமாளிப்பதற்கு தெரபி ஒரு சிறந்த வழியாகும்.ஒரு நல்ல சிகிச்சையானது(தெரபி) உங்கள் உணர்ச்சியைப் புரிந்து கொள்ள உதவுவதோடு, அந்த நபர் பற்றிய சிந்தனைகளில் இருந்து நீங்கள் வெளிவருவதற்கும் உங்கள் உதவி செய்யும்.


சிகிச்சையின்போது நீங்கள் மனச்சோர்வு அடைந்தால் சிகிச்சையின் முதல் படியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த காலகட்டத்தில் சோகம்,
அக்கறையின்மை, பொது விஷயங்களைப் புறக்கணித்தல், தூங்குவதில் மாற்றம், ஊசலாடும் மனநிலை, செயல்களில் ஆர்வமின்மை ஆகியவை
ஏற்பட்டால் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம்.அப்போது நீங்கள் உதவி கேட்பது உங்களுக்கு நன்மையாகவும், அதிலிருந்து வெளிவருவதற்கும் உதவும். அவர் இல்லாத வாழ்வு ஒரு பூகம்பம் போல இருக்கும், உங்கள் உலகம் இனி இருண்டுவிடும் என எண்ணாதீர்கள். பிரேக்கப்பிற்கு பின் உங்கள் உலகம் பூகம்பம் வந்த பூமி போல இருக்கும் என எண்ணாதீர்கள்.  


நினைவில் கொள்ளுங்கள்:அந்த நபருடனான உங்கள் உறவு(love) முடிவுக்கு வந்தபின் பிரேக்கப் (Breakup) அதில் உள்ள நல்ல தருணங்களை மட்டுமே நம்மால் நினைத்துப் பார்க்கloving முடியும். ஆனால் கடந்த காலத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்து அவற்றை ரசித்துக் கொண்டிராமல், உண்மைகளை எதிர்கொள்ளுங்கள். கடந்த காலத்தை நினைத்து தற்போதைய நிலையை நீங்கள் மோசமாக உணரலாம். ஆனால் அது ஒரு போதைப்பொருள் போன்றது என்பதை உணருங்கள்.நீங்கள் ஒரு காரணத்திற்காக அந்த நபரை பிரிந்து(பிரேக்கப்) விட்டீர்கள். அந்த நபர் இனி உங்கள் வாழ்வில் இல்லை என்பதையும், இனி அவர் உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கப்போவது இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


நண்பர்களுடன் இருங்கள்:(Friends)இதுபோன்ற தருணங்களில் உங்கள் லக்ஸுரி வாழ்க்கையை விட்டுவிட்டு முதலில் வெளியில் வாருங்கள். லட்சக்கணக்கான டேட்டிங் ஆப்கள்
இருக்கின்றன. ஆனால் அவற்றை உடனடியாக உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து நீங்கள் உங்களை அதில் உறுப்பினராகப் பதிவு செய்ய
வேண்டியது இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமை இரவுகளில் நண்பர்கள் (Frineds) சந்திப்பது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். உடனடியாக ஒரு பையனை சந்தித்து நீங்கள் அவனுடன் டேட்டிங் செல்ல வேண்டியது இல்லை. எனினும் ஒரு பையனுடன் கடலை(Flirt) போடுவது உங்களுக்கு சிரிப்பை வரவழைப்பதுடன், உங்கள் உடல்நலத்திற்கும் நல்லது.


சில நேரம் உங்கள் நண்பர்கள் உடன் (Friends) இரவு உணவிற்காக நீங்கள் வெளியில் செல்லும்போது அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள் என நீங்கள்
நினைக்கலாம். ஆனால் அவர்கள் உங்களுக்கு சிறந்ததையே வழங்க விரும்புவர். உங்களை விரும்பும் நபர்களை சுற்றி இருப்பது, உங்களது பழைய காதலன்/காதலியை மறக்க ஒரு சிறந்த வழியாகும்.


பிற நபர்களை எதிர்கொள்ளுங்கள்:ஒரு காதல்(Love) பிரேக்கப் (Breakup) பின் உங்களை நேசிக்கும் ஒருவருடன் பேசுவது உங்கள் மனதுக்கு இதமாக இருக்கும். உங்களை நன்றாகப் புரிந்து கொள்ளக்கூடிய, உங்களை நேசிக்கக்கூடிய ஒருவருடன் பேசுவது நிலைமையை நீங்கள் புரிந்து கொள்வதற்கு உதவும். என்ன நடந்தது? என்பதை உணர்ந்து முதலில் அதற்கு பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் சமரசம் செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக உண்மையை எதிர்கொள்வது நன்று. அந்த நபர் உங்களை மீண்டும் காதலிக்க மாட்டார், இது கடினமான ஒன்றாக இருந்தாலும் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்வது உங்கள் வாழ்விற்கு நன்மையாக அமையும்.


பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள்:உறவில் ஏற்பட்ட தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எந்த அலங்காரமும் இல்லாமல் நிலவரம் என்ன
என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே நேரம் அவர்களின் முடிவு மற்றும் அவர்களின் தேர்வினை மதியுங்கள். சில சமயங்களில் நீங்கள்
தவறாகவும்,தெளிவில்லாமலும் இருந்திருக்கலாம் என்பதை உணருங்கள். எல்லா சூழ்நிலையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதையும்
சிலருடன் நாம் எப்போதும் ஒன்றாக இருக்க முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். கடந்த காலம் என்பது கடந்த காலமாகவே இருக்கட்டும்.


அலட்சியம் செய்யாதீர்கள்:இதுபோன்ற நேரங்களில் உங்கள் நண்பர்கள் (Friends) ஆலோசனையை கேளுங்கள். சமூக வலைதளங்களில் இருந்து அவனை பிளாக்(Block) செய். அவனது புகைப்படங்களை டெலிட் செய்துவிடு என உங்களது நெருங்கிய தோழி உங்களுக்கு ஆலோசனை சொல்லும்போது அதனை அலட்சியம் செய்ய வேண்டாம். இதுபோன்ற செயல்கள் உங்கள் முன்னாள் காதலனை அல்லது குறிப்பிட்ட அந்த நபரை நீங்கள் மறப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.


உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் மறக்க நினைக்கும் நபரின் மொபைல்(Mobile) எண்ணை டெலிட் செய்துவிடுங்கள். நம்பரை டெலிட் செய்து விட்டால் அவரிடம் மீண்டும் நீங்கள் பேசவேண்டும் என்று நினைவுகள் வரும்போது, மொபைல்(Mobile)நம்பர் நம்மிடம் இல்லை என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும். மொபைல்(Mobile) நம்பரை மட்டும் டெலிட் செய்துவிட்டு வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என பிற சமூக வலைதளங்களில் நீங்கள் சேமித்து வைத்திருந்தால் அது உங்கள் நிம்மதியை குலைக்கக் கூடும் என்பதை உணருங்கள்.


பிரேக்கப் சாங்ஸ்-படங்கள்:(Breakup Songs)


உங்கள் நிலையை நினைத்து வருந்துங்கள்.ஆனால் சூழ்நிலையை ஆய்வு செய்யாதீர்கள். பிரேக்கப் பாடல்களை(Breakup Songs) கேட்பது, பிரேக்கப் படங்களை பாருங்கள். ஆனால் அதில் வரும் காட்சிகளை நினைத்து உங்களை நீங்கள் வருத்திக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்(உங்கள் முன்னாள் காதலன்) உங்கள் வாழ்வின் ஒரு பகுதி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.மகிழ்ச்சியாக இருப்பதே வாழ்வின் குறிக்கோள் என நினைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள் என எல்லாவற்றையும் ஒரு ஆணிடம் சொல்ல வேண்டும் என்ற நிலை தற்போது
உங்களுக்கு இல்லை என்பதை உணருங்கள். நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்வில் வர ஆரம்பிக்கும். அப்போது புதியதாகவும், ஆரோக்கியமாகவும்
வேலையை செய்யத் தொடங்குங்கள். உங்கள் கடந்த கால வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு புதிய
வாழ்க்கை/வாய்ப்பு உங்கள் வாழ்க்கையில் மீண்டும் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என நம்புங்கள். நம்பிக்கை அதுதானே எல்லாம்...