படுக்கையில் 'பெண்கள்' இவற்றை தான் 'ஆண்களிடம்' இருந்து எதிர்பார்க்கிறார்கள்?

படுக்கையில் 'பெண்கள்' இவற்றை தான் 'ஆண்களிடம்' இருந்து எதிர்பார்க்கிறார்கள்?

பாலியல் தொடர்பாக வெளிப்படையாகப் பேசாமல் அதனை மறைத்து,மறைத்து வைப்பதால் தான் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. இதனால் வீடு,சமூகம் என எங்கும் செக்ஸ் ஒரு பெருங்குற்றம், அது ஒரு மனிதத்தன்மையற்ற செயல், அது ஒரு தீண்டாமை என்பது போல பார்க்கப்படுகிறது.படங்கள், நண்பர்கள் வழியாக ஆண்களுக்கு செக்ஸ் குறித்து ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர். அதே நேரம் பெண்களுக்கு(Women) அது தொடர்பான விஷயங்கள் எளிதில் கிடைப்பதில்லை. இதனால் திருமணம் குறித்த பேச்சு எழும்போதே பெண்களுக்கு ஒருவித அச்ச உணர்வு தோன்ற ஆரம்பித்து விடுகிறது. சிறுவயதில் இருந்து ஒரு பாதுகாப்பு உணர்வுடனே வளர்ந்து விட்டு திடீரென இன்னொரு வீட்டுக்கு சென்று வசிக்கும் சூழ்நிலை வரும்போது பெண்கள்(Women) மனரீதியாக மிகவும் அச்சம் கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்.


பெண்களைப் பொறுத்தவரையில் தனது படுக்கையில்(Bed) திடீரென ஒரு ஆண் தூங்குவது, அவனுடன் படுக்கையைப்(Bed) பகிர்ந்து கொள்வது, புதிய
சூழ்நிலை, புதிய மனிதர்கள் என அனைத்துமே அச்சமூட்டக் கூடியவையாக தான் இருக்கின்றன. இதனால் பெரும்பாலான ஆண்களுக்கு இவள் நம்மை
பிடித்து தான் திருமணம் செய்து கொண்டாளா? இல்லை வீட்டினரின் வற்புறுத்தல்கள் காரணமா? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. இதன் விளைவாக தாம்பத்தியம் தடுமாற ஆரம்பித்து விடுகிறது.இதுபோன்ற சிக்கல்களை எப்படிக் களைவது? பெண்கள்(Women) படுக்கையில்(Bed) ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? போன்ற விஷயங்களை இங்கே பார்ப்போம்.


வேகத்தை விட விவேகம் நன்றுசெக்ஸைப் பொறுத்தவரை வேகத்தை விட விவேகமே நல்லது என்பதை உணருங்கள். முதலிரவில் கண்டிப்பாக செக்ஸ்(Sex) வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அன்றைய தினம் இருவரும் களைப்பாக இருப்பீர்கள் அதனால் இருவரும் நன்றாக தூங்கி எழுந்திருங்கள். தூக்கம் வரவில்லை என்றால் இருவருக்கும் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருங்கள்.இருவருக்கும் ஆர்வம் இருந்தால் தாராளமாக நீங்கள் செக்ஸ்(Sex) வைத்துக்கொள்ளலாம்.


மனதளவில்உடலால் நெருங்குவதை விட விட மனதளவில் இருவரும் நெருங்கி அதன்பின் உறவு வைத்துக்கொண்டால், அது இருவருக்குமே உண்மையான
சொர்க்கமாக இருக்கும். அப்படி நெருங்கும்போது செக்ஸ்(Sex) குறித்து இருவரும் உரையாடுங்கள், சகஜமாக பேசி உறவு வைத்துக்கொள்வது உங்கள் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்.


வற்புறுத்த வேண்டாம்ஒருவருக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் வற்புறுத்தக் கூடாது. இது செக்ஸ்க்கும் பொருந்தும் உங்கள் மனைவிக்கு ஒரு விஷயம்
பிடிக்கவில்லை என்றால் அவரை வற்புறுத்த வேண்டாம். அதேபோல உங்களுக்கு மூடு இருந்து உங்கள் மனைவி உங்களுக்கு ஒத்துழைக்கவில்லை எனில் மோசமாகத் திட்டுவது அவரிடம் பாராமுகம் காட்டுவது போன்றவற்றை செய்திட வேண்டாம். இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


ஆபாச படங்கள்


 


ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதுபோல எதுவும் நம்மால் முடியவில்லை என்றோ, இல்லை அதுபோன்று ஈடுபட வேண்டும் என்றோ
நினைக்காதீர்கள். அது நன்கு திட்டமிட்டு எடுக்கப்படும் ஒரு படம், அதுவும் எடிட் செய்யப்பட்ட ஒரு படம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவர்களைப் போல அதிக நேரம் நம்மால் முடியவில்லை, அவர்களைப் போல நமக்கு ஆண் உறுப்பு நீளமாக இல்லை என கவலை கொள்ள
வேண்டாம். செக்ஸ்(Sex) பொறுத்தவரை நீள,அகலத்தை விட அந்த நேரம் நீங்கள் எப்படி கனிவாக(Love) நடந்து கொள்கிறீர்கள் என்பதே முக்கியம்.
அதனால் மகிழ்ச்சியுடன் உறவில் ஈடுபடுங்கள்.


முத்தத்தால் மூழ்கடியுங்கள்உங்கள் துணையின் உச்சி தொடங்கி உள்ளங்கால் வரை முத்தத்தால் மூழ்கடியுங்கள். பாத நரம்பு, கழுத்து,காது ஆகிய இடங்களில் பெண்களின்
உணர்வுகளைத் தூண்டும் நரம்புகள் அதிகமாக இருக்கின்றன. அதேபோல மேற்கத்தியவர்களை போல உதட்டுடன் உதடு ஆழ்ந்து முத்தமிட்டுக்
கொள்வதும் உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி தறிகெட்டு ஓடச்செய்யும்.(உதட்டுடன் உதடு ஆழ்ந்து முத்தமிடுவது ஒரு மினி செக்ஸ்
போலத்தான்)முத்தம் கொடுப்பது மட்டுமின்றி ஆங்காங்கே கடிப்பது, நாக்கால் நக்குவது போன்ற செயல்களும் உங்கள் உணர்ச்சியை பீறிடச்செய்யும்.


முன்விளையாட்டுஎடுத்தவுடன் செக்ஸ்(Sex) என்பதை விட முன்விளையாட்டுகளில் ஈடுபடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாகும். இதனால் சற்று நேரம்
முன்விளையாட்டுகளில் ஈடுபட்டு விட்டு பின்னர் உறவுக்குள் செல்லுங்கள். இது இருவருக்குமே நிறைவை அளிக்கும்.


குழந்தைகளை போல கொஞ்சுங்கள்குழந்தைகளை மட்டும் தான் கொஞ்ச வேண்டும் என்பதில்லை.நெருக்கமான நேரத்தில் உங்கள் துணையையும் கொஞ்சலாம். டார்லிங்,ஹனி,
புஜ்ஜு,அம்மு,செல்லக்குட்டி என உங்களுக்கு அந்த தருணத்தில் என்ன தோன்றுகிறதோ அதைச்சொல்லி கொஞ்சுங்கள். இது மகிழ்ச்சியுடன்
மனநிறைவையும் சேர்த்து அளிக்கும்.


மொபைல் பார்ப்பதுதுணையுடன் செக்ஸில் ஈடுபட்டு விட்டு உடனடியாக மொபலைத்தேடுவது, வேலையில் ஈடுபடுவது, சிகரெட் பிடிப்பது போன்ற செயல்களில்
ஒருபோதும் ஈடுபடாதீர்கள். இது வெறும் உடல் தேவைக்காக மட்டும் நீங்கள் உங்கள் துணையை நாடுவது போல தோன்றும். உறவுக்கு பின்னரான
அணைப்பு, முத்தம் ஆகியவற்றை தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். எனவே உறவுக்கு பின்னர் நீங்கள் சிறிது நேரம் அவருடன்
செலவளித்தால் அடுத்த முறை அவரே உங்களை வெற்றிலை-பாக்கு வைத்து வரவேற்பார். இதேபோல செக்ஸுக்கு பின்னர் உடனடியாகத் தூங்குவதும் உங்கள் துணையை மனதளவில் காயப்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


ஆடம்பர வாழ்க்கையை விட கணவனின் அருகாமையையும், அன்பையுமே(Love) பெண்கள் விரும்புகிறார்கள் என்பதை மனதில் கொண்டு என்றென்றும் மகிழ்ச்சியாக வாழுங்கள் என வாழ்த்துகிறோம்....


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.