உங்கள் கணவன்/மனைவிக்கு வேறொரு 'உறவு' இருப்பது தெரிய வந்தால்?

உங்கள் கணவன்/மனைவிக்கு  வேறொரு 'உறவு' இருப்பது தெரிய வந்தால்?

முன்பெல்லாம் ஒரு திருமண உறவைத் தக்க வைக்க 'செக்ஸ்'(Sex) போதுமானதாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் என்ன செய்தாலும் கணவன்-மனைவி கோர்ட் படியேறுவதைத் தடுக்க முடியவில்லை. திருமணத்துக்கு முன் செக்ஸ்(Sex) வைத்துக் கொள்வதும், திருமணம் முடிந்தாலும் வாய்ப்பு கிடைத்தால் பிறருடன் செக்ஸ்(Sex0 வைத்துக் கொள்வதும் தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றன.'திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம்' என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அது தற்போது செக்ஸ் விஷயத்திலும் உண்மையாகி வருகிறது. டேட்டிங் ஆப்கள், சமூக வலைதளங்கள் என இதுபோன்ற செயலுக்கு உதவிட எக்கக்சக்கமான ஆப்கள் மார்க்கெட்டில் கொட்டிக்கிடக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் சகஜமாகி விட்டதால் விரும்பியதை எல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


முன்பெல்லாம் நெட் பேக் போடுவதும், மொபைலுக்கு ரீசார்ஜ் பண்ணுவதும் மிகப்பெரிய சாகசமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. டெலிகாம் நிறுவனங்களின் போட்டாபோட்டியால் அன்லிமிடெட் மீல்ஸ் போல அன்லிமிடெட் நெட்பேக்குகள் சகஜமாகி விட்டன. இது மட்டுமின்றி குறிப்பிட்ட நிறுவனத்தின் சிம் வைத்திருந்தாலே போதும், உங்களுக்கு தினசரி உங்கள் தேவையை விட அதிகமான நெட்பேக்கும், ரீசார்ஜ்ஜும் இலவசமாகக் கிடைக்கின்றன.இதனால் ஆபாச வலைதளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இத்தகைய சூழலில் உங்கள் கணவனோ(Husband)/மனைவியோ(Wife) உங்களுக்குத் தெரியாமல் மற்றொரு உறவில் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் உங்களுக்குத் துரோகம்(Treachery) செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.


மனம் திறந்து பேசுங்கள்உங்கள் கணவன்/மனைவியுடன் தினமும் மனம் விட்டுப்பேசுங்கள்.பல வீடுகளில் கணவன்-மனைவி இடையே ஒரு இணக்கமான சூழ்நிலை நிலவுவதில்லை.இதற்குக் காரணம் ஒருவருடன் ஒருவர் மனம் விட்டுப் பேசாததே ஆகும்.முன்பின் தெரியாதவர்களிடம் கூட மணிக்கணக்காக பேசும் நாம் நமது கணவன்/மனைவியிடம் எப்படி பேசுகிறோம் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். கணவன்(Husband)-மனைவி(Wife) இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பது மட்டுமே வரும் காலங்களில் தாம்பத்தியத்தை தாங்கிப் பிடிப்பதற்கான வழியாக இருக்கும்.


கள்ளத்தொடர்புபலரும் கள்ளத்தொடர்பை ஒரு திரில் தரும் விஷயமாக கருதுகிறார்கள்.இதனால் அதில் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பெருகிவரும் சமூக வலைதளங்களும் இதற்கு உதவியாக இருப்பதால் ஒருமுறை தானே என தவறு செய்கின்றனர். இதேபோல நமது கணவனோ,மனைவியோ செய்தால் தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.


குழந்தைகள்பல வருடங்களாக ஒரு தாம்பத்தியத்தை குழந்தைகள் தாங்கி பிடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளாலும் ஒரு தாம்பத்தியத்தை தக்க வைக்க முடியவில்லை. ஒரு தாம்பத்தியத்தை தக்க வைத்திட கணவன்(Husband)/மனைவி(Wife) இருவரிடமும் சகிப்புத்தன்மை அவசியம் என்பதை இருவரும் உணருதல் அவசியம்.


ஒரு இரவு மட்டும்தற்போதைய காலத்தில் ஒன்நைட் ஸ்டாண்ட்(One Night Stand) என்ற கலாச்சாரம் பெருகிவருகிறது. ஒன்நைட் ஸ்டாண்ட்(One Night Stand) என்றால் என்னவென்று கேட்கிறீர்களா? பெரிதாக அறிமுகமில்லாத நபருடன் வரப்போகும் பிரச்சினைகளைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் செக்ஸ் வைத்துக்கொள்வது தான் ஒன்நைட் ஸ்டாண்ட்(One Night Stand). இதில் திரில்லுடன் சேர்ந்து வித்தியாசமான செக்ஸும் கிடைப்பதாக கருதுகின்றனர். இதனால் திருமணம் ஆனவர்கள் மட்டுமின்றி, திருமணம் ஆகாதவர்களிடமும் இந்த கலாச்சாரம் பெருக ஆரம்பித்துள்ளது.


என்ன செய்வதுகண நேரத்து தடுமாற்றம் தான் இதுபோன்ற செயல்களுக்கு காரணம். இதுபோன்ற உறவுகள் வெறும் நீர்க்குமிழி போல என்பதை மனதில் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் கணவனோ(Husband), மனைவியோ(Wife) இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களிடம் இதுகுறித்து பேசுங்கள். எதிர்கால வாழ்க்கை, குழந்தைகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறுங்கள். வீட்டு பெரியவர்களிடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்று சுமூகமாகத் தீர்வு காணுங்கள். இது எதுவும் முடியாத பட்சத்தில் ஆழ்ந்து யோசித்து உங்கள் மனது என்ன கூறுகிறதோ அதன்படி முடிவெடுங்கள்.ஏனெனில் உலகம் பரந்து கிடக்கிறது...


 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.