காபி சாப்பிடற மாதிரி கல்யாணமும், டிவோர்ஸும் சகஜமாகிடுச்சி! | POPxo

காபி சாப்பிடற மாதிரி கல்யாணமும், டிவோர்ஸும் சகஜமாகிடுச்சி!

காபி சாப்பிடற மாதிரி கல்யாணமும், டிவோர்ஸும் சகஜமாகிடுச்சி!

கல்யாண வாழ்க்கை(Marriage Life)


'கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி'.. என எத்தன பேரு விஜய் சேதுபதியா மாறி உங்க பொண்டாட்டிய கொஞ்சி சந்தோஷப்பட்டு இருக்கீங்க. அட கொஞ்சவெல்லாம் வேணாம் தெனமும் கொஞ்ச நேரம் மனசு விட்டு கூட பேசறது இல்ல. கல்யாணம் பண்ண புதுசுல மனுஷன் குட்டி போட்ட பூனை மாதிரி என்ன சுத்தி,சுத்தி வந்தாரு.ஆனா இப்போலாம் நான் சொல்றத கேட்கக்கோட அவருக்கு டைம் இல்ல.எப்ப பார்த்தாலும் ஆபிஸ்,ஆபீஸ்னு ஆபிஸயே கட்டிட்டு அழுகுறாரு. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. அந்த பக்கமா யாரையாவது கல்யாணம்(Marriage) எதுவும் பண்ணி வச்சிருக்கிறாருன்னு தெரியல. எப்போ போன் பண்ணலாம் பிஸின்னே வருது. பசங்க, வேலை, வீடுன்னு எப்போவும் கால்ல சக்கரம் கட்டிட்டு ஓடிட்டு இருக்கேன். ஆனா ஒருநாள் கூட என்கூட உட்காந்து நான் எப்டி இருக்கேன், என்னோட ஹெல்த் எப்டி இருக்குனு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்றாரு.முன்ன எல்லாம் திருமணம் (Marriage) ஆகி ஒரு 10,15 வருஷத்துக்கு அப்புறம் தான் இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் கணவன்-மனைவிக்குள்ள வரும். இப்போ அப்டி இல்ல. கல்யாணம்(Marriage) பண்ணி அதிகபட்சம் ஒரு நாலஞ்சு வருஷத்துக்குள்ளேயே இந்த மாதிரி பேச்சு வர ஆரம்பிச்சிடுது. இதுக்கு முக்கியமான காரணம் பொதுவா ஆண்களுக்கு தரப்படுற அதிகபட்ச மரியாதை, கல்யாண வயசு வந்துட்டாலும் சின்ன பசங்க மாதிரியே பெத்தவங்க பசங்கள நடத்துறது. இன்னொண்ணு காலம்,காலமா பசங்களுக்கு கீழதான் பொண்ணுங்க அப்டின்னு பசங்க-பொண்ணுங்க ரெண்டு பேர் மனசுலயும் ஆழமா பதிய வச்சுடுறது.


சுத்தி போட வேணாமாஎனக்குத் தெரிஞ்ச ஒரு ஜோடி காலேஜ் டைம்ல இருந்து உருகி,உருகி காதலிச்சு பெத்தவங்கள கன்வின்ஸ் பண்ணி கல்யாணமும் பண்ணிகிட்டாங்க. கல்யாணத்துக்கு(Marriage) வந்த எல்லோருமே ரொம்ப பொருத்தமான ஜோடி, சுத்தி போடுங்கனு சொன்னப்போ வாழ்க்கையில பெருசா எதையோ சாதிச்ச சந்தோஷம் அவங்க ரெண்டு பேருக்கும்.


இனிமே பாக்கவே கூடாது(Marriage Life)ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்க போறாங்கன்னு எல்லாரும் நெனச்சிட்டு இருக்க எண்ணி ஆறே மாசத்துல டிவோர்ஸ்(Divorce) கேட்டு கோர்ட் படியேறி, ஒரே வருஷத்துக்குள்ள பிரிஞ்சே போயிட்டாங்க ரெண்டு பேரும். இத கேட்ட எல்லோருக்குமே பெரிய ஷாக். என்னடா இப்டி பண்ணிட்டாங்கனு. இத பத்தி ரெண்டு பேர்கிட்டயும் பேச போனா அவள பத்தி பேச விருப்பமில்ல மச்சின்னு அவனும், அவன பத்தி பேசுறதுனா இனிமே என்கூட பேசவே வேணாம்னு அவளும் மொகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க.


வேப்பங்காயா கசக்கும்(Marriage Life Complicated) 
மேல சொன்ன சம்பவம் போல ஏகப்பட்ட உதாரணம் நம்ம கண்ணு முன்னாடியே இருக்கு.சின்ன வயசுல இருந்து பசங்கள செல்லமா வளர்க்குறதால கல்யாணத்துக்கு(Marriage) அப்புறம் பொறுப்புகள ஏத்துக்க முடியாம பசங்க திண்டாடுறாங்க. திடீர்னு ஒரு அந்நிய நபர் (அது மனைவியா இருந்தாலும்) தன்னோட வாழ்க்கையில வந்து தன்ன கேள்வி கேட்குறது அவங்களுக்கு புடிக்க மாட்டுது. இன்னும் சில பேரு என் அப்பா,அம்மாவே என்கிட்ட கேள்வி கேட்டது இல்ல? இவ என்ன கேட்குறதுன்னு நெனைக்க ஆரம்பிச்சிடுறாங்க


உறவில் விரிசல்:(Marriage Life)இதுல சில பேரு பொண்ணுங்களுக்கு பணம் இருந்தா போதும்னு நெனச்சு, அவங்களுக்கு சேலை,நகைன்னு வாங்கிக் குடுத்துட்டு வெளில பிரண்ட்ஸோட சுத்துறது,டூர் போறதுன்னு அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்க ஆரம்பிச்சிடுறாங்க. இத பாக்குறப்ப நம்ம ஒட்டுமொத்த வாழ்க்கையும் இவன் கூடதான்னு நம்பி வந்துருகோம். ஆனா இவன் இப்டி இருக்கானேனு பொண்ணுங்க நெனைக்க ஆரம்பிச்சிடுறாங்க. இதோட விளைவு வாழ்க்கையில விரிசல் விழுக ஆரம்பிச்சிடுது.


காபிஷாப்-ஹோட்டல்(CoffeShop-Hotel)இன்னைக்கு இருக்கற குடும்பங்கள்ல முக்காவாசி குடும்பம் பிரியாம இருக்குறதுக்கு காரணம் குழந்தைங்க(Children) தான். அதே மாதிரி உப்பு-சப்பில்லாத விஷயத்துக்கு எல்லாம் கோர்ட் படியேறதும் சகஜமாகி கிட்டே வருது. முன்ன எல்லாம் ஒரு மேரேஜ் உடையாம இருக்கணும்னு முன்ன,பின்ன தெரியாதவங்க கூட முயற்சி எடுத்துப்பாங்க. ஆனா இன்னைக்கு காபிஷாப்(Coffee Shop) போறமாதிரி காதலும், ஹோட்டலுக்கு போறமாதிரி டிவோர்ஸும்(Divorce) சகஜமாகியிடுச்சு.


ஒரு தடவ தான்வாழ்க்கை(Life) ஒரே ஒரு டைம் தான். நேத்து இருந்தவங்க இன்னைக்கு இல்ல.இன்னைக்கு இருக்கறவங்க நாளைக்கு இருக்கறது இல்ல. அதனால முடிஞ்சளவு உங்க கணவன்/மனைவியோட மனசு விட்டுப் பேசுங்க. ஈகோ பாக்காதீங்க. எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும், மனசு விட்டுப் பேசினா கண்டிப்பா ஒரு தீர்வு கெடைக்கும்.அதே நேரத்துல எப்பவுமே ஒருத்தர் விட்டு குடுத்து போறதும் நல்ல விஷயம் கெடையாது. இதையெல்லாம் மனசுல வச்சு வாழ்ற வாழ்க்கையை நல்ல ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையா வாழ முயற்சி பண்ணுங்க..


 

Read More from Wedding

Load More Wedding Stories