உங்க துணையோட 'நெருக்கமா' இருக்கும்போது இத 'நோட்' பண்ணி இருக்கீங்களா?

உங்க துணையோட 'நெருக்கமா' இருக்கும்போது இத 'நோட்' பண்ணி இருக்கீங்களா?

உடலால் இணையுங்கள் 


கணவன்-மனைவி உறவில் இணைந்து வாழும் வாழ்க்கையில், தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை என்பது உப்பில்லாத உணவுக்குச் சமம்.எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் உப்பில்லா விடில் அந்த உணவினை நம்மால் விரும்பி சாப்பிட முடியாது. ஒருவேளை சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அது பத்திய சாப்பாடு போலதான் இருக்கும். சாப்பிட்ட நிறைவினை நம்மால் அனுபவிக்க முடியாது. அதுபோல்தான் தாம்பத்திய உறவும். தம்பதிகள் தாம்பத்தியத்தை தவிர்த்து வாழும் வாழ்க்கை என்பது பத்திய சாப்பாடு சாப்பிடுவது போலதான்.


 ஆண்-பெண் உறவில் அன்பையும்,மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதற்குப் பல வழிகள் இருந்தாலும் அந்த மகிழ்ச்சியையும்-அன்பையும் அதிகரிக்கச் செய்வதில் உடலுறவுக்கு(Intercourse)முக்கிய இடமுண்டு. குறிப்பாக கணவனும்,மனைவியும் ஈருடல்-ஓருயிராக நெருங்கிப் பழகவும், அன்னியோன்யத்தை அதிகரிக்கச் செய்திடவும் உடலுறவு மிகப்பெரும் உதவியாக உள்ளது.
திருமணம்(Marriage)ஆன புதிதில் கவர்ச்சி,வயது,தனிமை போன்ற பல்வேறு காரணங்கள் அடிக்கடி உறவு வைத்துக்கொள்ள தூண்டும். நாளடைவில் குழந்தைகள் வந்து போதுமான தனிமையும் கிடைக்காமல் போகும்போது இயல்பாக உறவு கொள்வது தள்ளிப்போகும். குழந்தைகள் சற்று பதின்பருவ வயதினை எட்டும்போது பசங்க வளந்துட்டாங்க என்று உறவினைத் தவிர்ப்பவர்களும் உண்டு. சரி உங்க துணையோட 'நெருக்கமா' இருக்கும்போது இத எல்லாம்  'நோட்' பண்ணி இருக்கீங்களா? கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..


 


நேரமின்மை:
கணவன்-மனைவி தங்களுக்கு போதுமான நேரம் ஒதுக்காதது, போதிய இடைவெளியில் உறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பது ஆகியவை குடும்பத்துக்கு உலை வைப்பமது மட்டுமின்றி உங்களது ஆரோக்கியத்தையும் சீர்குலைத்து விடும்.நீண்டநாள் மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளை உற்றுநோக்கினால் அவர்கள் மனது மட்டுமின்றி, உடலாலும் அடிக்கடி ஒன்றிணைந்தவர்களாக இருப்பார்கள்.


தீண்டுதல்:உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் துணையை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் அவர்களை மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.உங்களோட மொரட்டுத்தனம் வெளிப்படும்:


 நெறைய பேரோட பாசமா பேசினாலும், நெருங்கிப் பழகினாலும் நம்மளோட கணவன்/மனைவி கிட்ட தான் மனசு மட்டுமில்லாம உடல் அளவிலும் நெருங்கிப் பழகுவோம்.இது நெறைய பேருக்கு தெரியுமான்னு தெரியல.ஆனா நமக்கு ரொம்ப புடிச்சவங்களோட உறவுல(Sex) இருக்கும்போது நம்மளோட மொரட்டுத்தனம் வெளிப்படும்.


ஜிம்-டயட்:(Gym)ஒவ்வொரு வருஷம் நியூ இயருக்கும் இந்த வருஷம் கண்டிப்பா உடம்பக் கொறைக்கணும்னு நெனைக்கிறேன். ஆனா எதுக்கும் நேரமில்ல சொல்ற ஆளா நீங்க. அப்போ நீங்க கண்டிப்பா உங்க துணையோட அடிக்கடி உறவு வச்சுக்கணும். ஒருதடவ உடலுறவுல(Sex) ஈடுபடுறது ஜிம்ல(Gym) அரை மணி நேரம் வொர்க் அவுட் பண்றதுக்கு சமம். நீங்க அடிக்கடி உடலுறவு(Sex) வச்சுக்கும்போது ஆட்டோமேடிக்கா உங்க உடம்பு எடை தன்னால கொறைஞ்சு, நீங்க நெனைக்குற மாதிரி அழகான ஒரு உடலமைப்ப பெறலாம். சந்தோஷத்துக்கு சந்தோஷமும் ஆச்சு, டயட்டுக்கு டயட்டும் ஆச்சு.


 


வாழ்நாள் அதிகரிக்கும்(LIfetime)ரொம்ப நாள் வாழணும்னு ஆசையா இருக்கு. ஆனா அந்த டயட், இந்த டயட்னு எதுவும் பாலோ பண்ண முடிலன்னு சொல்றீங்களா? நீங்க அடிக்கடி உங்க துணையோட உடலுறவு வச்சுக்கிட்டா ரொம்ப நாள் வாழலாம். மருந்து,மாத்திரை,டயட், விருப்பமில்லாத சாப்பாடுனு எதுவும் தேவை இல்ல.


மன அழுத்தம்:(Depression)சின்னவங்க-பெரியவங்கனு வயசு வித்தியாசம் இல்லாம இன்னைக்கு எல்லாரும் மன அழுத்தத்தால பாதிக்கப்படுறாங்க.சில சமயம் இந்த மன அழுத்தம் தற்கொலையில கொண்டுபோய் விடுது. ரொம்ப டிப்ரெஷனா இருக்கு அதனால தான் குடிக்கறேன்னு சொல்றவங்க, இதுல இருந்து விடுபடுறதுக்கு உடலுறவு ரொம்ப உதவியா இருக்கும். இது நெறைய பேருக்குத் தெரியாதுன்னாலும் உடல் மற்றும் மனம் சார்ந்த நெருக்கடிகளைக் குறைக்க இது ஒரு சிறந்த வழி.எல்லாமே அளவுதான்:


 தாம்பத்திய உறவில் இணையும் போது இரு மனமும் சம்மதத்துடன் இணைவதே சிறப்பு. குறிப்பாக உறவில் ஈடுபடும்போது ஆளுமை, கட்டுப்படுத்துதல், கட்டாயப்படுத்துதல் போன்றவை சமநிலையில் இருப்பது நல்லது. இதில் அளவை மீறுவது சமயங்களில் அழிவையும் உண்டாக்கலாம்.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,தமிழ்,தெலுங்கு,மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.