logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
இவர்களிடம் இருந்து ‘விலகி இருப்பது’ உங்கள் பணத்திற்கு ‘ரொம்பவே’ நல்லது!

இவர்களிடம் இருந்து ‘விலகி இருப்பது’ உங்கள் பணத்திற்கு ‘ரொம்பவே’ நல்லது!

முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். இதனால் குழந்தை வளர்ப்பில் இருந்து குடும்ப பிரச்சினைகள் வரை அனைத்துக்கும் பெரியவர்கள் வழியாக தீர்வு கிடைத்தது. இப்போதுள்ள இளைய தலைமுறையினர் தனியாகவே வாழவே(Life) விரும்புகின்றனர். இதனால் குழந்தை பார்த்துக்கொள்வதில் தொடங்கி பலவற்றுக்கும் தம்பதிகள் சண்டை போட்டுக்கொள்ளும் நிலை உருவாகிறது.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தைத்(Money) துரத்திக்கொண்டு ஓடுகின்றனர். பிரச்சினைகள்(Problems) அவர்களைத் துரத்திக்கொண்டு பின்னால் ஓடுகின்றன.இதனால் எவ்வளவு பணம்(Money) சம்பாதித்தாலும் நிம்மதி என்ற ஒன்று மனிதர்களிடம் இல்லாமலேயே போய் விடுகிறது. ‘வாழ்வதற்கான செலவு மிகவும் குறைவு; ஆனால் அடுத்தவர்களைப் போல வாழ்வதற்கான செலவு மிகவும் அதிகம்’ என்பது தற்போது உண்மையாக மாறிவருகிறது.

ADVERTISEMENT

படிப்பதற்காக பெருநகரங்களுக்கு செல்லும் இளைஞர்களுக்கு(Youth) அங்குள்ள கலாச்சாரம்,நாகரிகம் பிடித்துப்போய் அவற்றுடன் ஒன்றிப்போய்
விடுகின்றனர்.இதனால் படித்து,முடித்து வேலை கிடைத்தவுடன் சொந்த ஊர்களுக்கு வருவதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். இவ்வாறு தனித்து
வாழும் சூழ்நிலையில் பணத்தை சரியாக கையாளத் தெரியாமல் பெரும்பாலோனோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

நோ சேமிப்பு ஒன்லி செலவு(Life)

புதிதாக வேலைக்கு சென்ற ஆர்வத்தில் கிரெடிட்கார்டு(Credit Card), வீட்டு லோன்,கார் லோன் என தொட்டதுக்கு எல்லாம் லோன்(Loan) போட்டு தாம் தூம் என இளைஞர்கள் செலவு செய்கின்றனர். சமயங்களில் வேலை பறிபோகும்போது அல்லது வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்படும்போது இந்த மாதிரி கடன்கள் அனைத்தும் தலைக்குமேல் தொங்கும் கத்தி போல எந்நேரமும் அச்சுறுத்த ஆரம்பித்து விடுகின்றன.

ADVERTISEMENT

சேமிக்க மறப்பது(Savings)

விருந்து, பார்ட்டி, கேளிக்கை, சுற்றுலா,திரைப்படம்,ஆடம்பர செலவுகள், அடிக்கடி உடை வாங்குவது, மொபைல்களை அடிக்கடி மாற்றுவது என
இன்றைய தலைமுறையினர் பணத்தை தண்ணீராக செலவு செய்கின்றனர். இதுதவிர கிரெடிட்கார்டு(Credit Card)/இஎம்ஐ(EMI) என முன்கூட்டியே கடன்(Loan) வாங்கி விடுவதால் சம்பளம் வாங்கியவுடன் கடனுக்கே சரியாகப் போய்விடுகிறது. இதனால் மாதம் முழுவதுமே மாதக்கடைசி போல எண்ணியெண்ணி செலவு செய்ய நேரிடும்.இதுபோன்ற சூழ்நிலைகளை,நெருக்கடிகளை எப்படி திறமையாகக் கையாள்வது? விலகி இருப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.

ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லுங்கள்

ADVERTISEMENT

ரத்த உறவுகள் தானே என தங்கள் நெருங்கிய உறவுகளுக்கு லோன் எடுத்துக் கொடுத்து விட்டு பின்னால் கட்ட முடியாமல் திண்டாடும் பலரை
சமீபகாலமாக காண நேரிடுகிறது. யாராக இருந்தாலும் லோன் அல்லது கிரெடிட்கார்டு(Credit Card) வழியாக பிறருக்கு பணம் எடுத்துக் கொடுத்தால் உங்களால் சரியாக அதனைக் கட்ட முடியுமா? அவர்கள் சரியாக பணத்தை திருப்பிக் கொடுப்பார்களா? என்பதை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துப் பார்த்து பின்னர் முடிவெடுங்கள். ஏனெனில் வாழ்வில்(Life) சந்தர்ப்பமும், சூழ்நிலையும் எப்போதும் ஒரேமாதிரி இருக்காது.

நெருங்கிய உறவுகளில்

ADVERTISEMENT

நெருங்கிய உறவுகளுக்குள் பணம்(Money) கொடுப்பது,வாங்குவது ஒருபோதும் வைத்துக்கொள்ள வேண்டாம். அதேபோல பண விஷயத்தில் யாருக்கும் உத்தரவாதம் கொடுக்காதீர்கள். ஏனெனில் நாளைக்கு பணத்தை திரும்ப அவர்கள் கேட்டு உங்களால் கொடுக்க முடியாவிட்டாலும் அல்லது நீங்கள் பணம் கேட்டு அவர்களால் கொடுக்க முடியாவிட்டாலும் பணம் மட்டுமின்றி,உறவையும் இழக்க வேண்டியது இருக்கும்.இவர்களிடம் இருந்து ‘விலகி இருப்பது’ உங்கள் பணத்திற்கும்-மனதிற்கும் ‘ரொம்பவே’ நல்லது!

நீங்களாக முடிவெடுக்காதீர்கள்

பண விஷயத்தை பொறுத்தவரை நீங்களாக எந்த முடிவும் எடுக்காதீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒரு உறவிடம்(கணவன்/மனைவி) பண விவகாரங்களை கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். நீங்கள் சேமிக்கும் பணம் குறித்த விவரங்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மறைக்காமல் தெரிவியுங்கள். இது பலவகையிலும் உங்களுக்கு நன்மையாக இருக்கும்.

ADVERTISEMENT

எந்தெந்த வழிகளில்

கடைகள்,ஹோட்டல்கள் போன்றவற்றுக்கு செல்லும்போது கார்டில் தேய்ப்பதை விட்டு பணமாக எடுத்துச் செல்லுங்கள். உங்கள் கையில் இருந்து பணம்(Money) செலவு செய்யும்போது ஒருமுறைக்கு பலமுறை நீங்கள் யோசித்து முடிவு செய்யலாம். உங்களுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தற்போது ஆடி மாதம் மட்டுமின்றி வருடம் முழுவதுமே ஆபர்கள் கிடைக்கின்றன. ஆபர் கிடைக்கிறது என்பதற்காக எந்த ஒரு பொருளையும் வாங்க வேண்டும். உங்களுக்கு உண்மையிலேயே தேவை ஏற்பட்டால் மட்டும் ஒரு பொருளை வாங்குங்கள். சம்பளம் வாங்கியதும் அதில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து தனியாக வைத்து விடுங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர வேறு எதற்கும் அந்த பணத்தை எடுக்கக்கூடாது என வைராக்கியத்துடன் இருங்கள்.

நேர மேலாண்மை

ADVERTISEMENT

நேரத்துக்கு கிளம்புவதன் மூலம் நீங்கள் பலவழிகளில் பணத்தை மிச்சப்படுத்த முடியும். தினசரி ஆபீஸ்க்கு லேட்டாக செல்பவராக இருந்தால் நீங்கள் இருந்தால் உங்களது சம்பளத்தில் ஒருபகுதி நேரம் தவறி செல்வதற்காக கழிக்கப்படும். இதுதவிர ப்ரோமோஷன் உள்ளிட்ட சலுகைகளின் போது உங்கள் தினசரி லேட் உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் அதிகம். நேரம் தவறி செல்லும்போது உங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தம் அன்றைய வேலைகளிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் உங்கள் தினசரி குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மேற்சொன்ன வழிமுறைகளுடன் நேர மேலாண்மையையும் சேர்த்து பின்பற்றி உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக வாழுங்கள் என மனமார
வாழ்த்துகிறோம்.

22 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT