இந்திய சினிமாவின் ‘தல'(Thala) மோஸ்ட் ஹேண்ட்சம் ஹீரோ, திரையில் உண்மையான வயதை சொல்லி நடிப்பவர், சால்ட்&பெப்பர் லுக்கிலும் கிறங்கடிக்கக் கூடிய நடிகர் என பல்வேறு புகழாரங்களுக்கு சொந்தக்காரரான அஜித்குமார்(Ajith) அவர்களின் ‘விஸ்வாசம்’ படம் மற்றும் அப்படம் அடைந்த வெற்றி விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வீரம், வேதாளம், விவேகம் என ‘வி’ சென்டிமெண்டில் சமீபத்தில் திரைக்கு வந்த விஸ்வாசம்(Viswsam) திரைப்படம் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. தல (Thala)அஜித்-சிறுத்தை சிவா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான விவேகம் திரைப்படம் வசூல் ரீதியாக சற்று நஷ்டம் அடைந்தது.
இதனை ஈடுகட்டும் விதமாக விவேகம் படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனத்துக்கு தல(Thala) மீண்டும் கால்ஷீட் கொடுத்து விஸ்வாசம்(Viswasam) படத்தில் நடித்தார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் வெளியான இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கிராமத்து சப்ஜெக்ட்டில் ஆக்ஷன் புகுத்தி, தந்தைப்பாசம், காதல், குடும்ப உறவுகள், கிராமத்து வாழ்க்கை என பல விஷயங்களை சிவா இதில் அழகாக சொல்லி இருந்தார்.
பிளாக்பஸ்டர்
இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியான விஸ்வாசம்(Viswasam) படம் 11 நாட்கள் கடந்தும் அனைத்து சென்டர்களிலும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொங்கல் விடுமுறையும் கைகொடுக்க குடும்பம், குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு சென்று விஸ்வாசம் படத்தினை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
125 கோடிகள்
இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சமீபத்தில் விஸ்வாசம் திரைப்படம் 125 கோடிகளை வசூலித்து உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. அஜித்(Ajith) படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கும், ஆனால் கலெக்ஷன் விஷயத்தில் அவரது படங்கள் அந்தளவு வசூலை எட்டுவதில்லை என, இதுவரை இருந்த பரவலாக பேச்சு இருந்தது. தற்போது விஸ்வாசம் படத்தின் வசூலை தென்னந்திய சினிமா உலகமே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிசில்(Box Office) 200 கோடிகளைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பா-மகள்
திரை வாழ்வில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக நடித்திருக்கும் அஜித்(Ajith) சொந்த வாழ்விலும் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக உள்ளார். இதனால் படத்தில் அவரைப் பார்ப்பவர்களும் அஜித் அந்த(அப்பா) கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று கூறுகின்றனர். படத்தைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இந்த படத்தை பார்த்தபின் தங்களுக்கு ஒரு மகள் இல்லை என ஏங்குவதாக தெரிவிக்கின்றனர். அந்தளவு இப்படத்தில் அஜித்தின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
ஆபரேஷன்கள்
இதுவரை அஜித்(Ajith) தனது உடலில் ஏகப்பட்ட ஆபரேஷன்கள் செய்து கொண்டுள்ளார். அப்படி இருந்தும் இதுவரை சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். சண்டைக்காட்சிகளில் அஜித் உண்மையாக நடிப்பது அவரது படத்தினை தியேட்டரில் சென்று ரசிக்க வேண்டும் என்னும் உணர்வினை அளிப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தில் சண்டைக்காட்சிகள்,டான்ஸ், நகைச்சுவை என அனைத்திலும் அஜித் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
துணை கமிஷனர் பாராட்டு
சமீபத்தில் விஸ்வாசம் படத்தினைப் பார்த்த சென்னை துணை கமிஷனர் இப்படம் மிகவும் சிறப்பாக இருந்ததாக மனமாரப் பாராட்டி உள்ளார். குறிப்பாக இப்படத்தில் அஜித் பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்வது, காரில் செல்லும்போது சீட்-பெல்ட் அணிந்து செல்வது போன்ற விஷயங்களை வெகுவாகப் பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் அஜித் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும்போது அவரது ரசிகர்களும் இதனைப் பின்பற்றுவர் என தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டு தினத்தில் மதுரை டிராபிக் போலீசார் அஜித் ஹெல்மெட் அணிந்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும்படி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்
கடந்த ஆண்டு இறுதியில் செக்க சிவந்த வானம்,பரியேறும் பெருமாள், ராட்சசன், 96,வடசென்னை மற்றும் 2.O ஆகிய படங்கள் வெளியாகி வசூல்
ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வரிசையில் இந்தாண்டு வெளியான விஸ்வாசம்,பேட்ட படங்கள் பாக்ஸ் ஆபிசில்(Box Office)நல்ல வசூலைக் குவித்து வருகின்றன. இதனால் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கும் என விநியோகஸ்தர்கள்,தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன அந்த நம்பிக்கையை இனிவரும் படங்கள் தக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.