மன அழுத்தமா ? இந்த சுலபமான ​யோகா ஆசனங்களை பின்பற்றி உடனடியாக பயனடையுங்கள் - Yoga Asanas And Their Benefits

மன அழுத்தமா ? இந்த சுலபமான ​யோகா ஆசனங்களை பின்பற்றி உடனடியாக பயனடையுங்கள் - Yoga Asanas And Their Benefits

இன்றைய நவ நாகரீக வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை பெரும்பாலான மக்களிடம் பரவி காணப்படுகின்றது.  மன அழுத்தம் மற்றும் பதற்றம் என்பது பொதுவாக வியாதிகள் அல்ல. ஆனால் அதுவே ஒரு எல்லையை தண்டி செல்லும்போது அதன் மூலம் வரும் விளைவுகள் அதிகம். எனவே அதனை முறையான விதத்தில் சரி செய்ய வேண்டும் ஆரம்ப காலத்தில். இல்லையென்றால் அது அன்றாட வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும். நாம் சாதாரணமாக செய்யும் ஒரு சின்ன செயல்கள் கூட பதற்றத்தின் காரணமாக தவறாய் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் .


Also Read: பதற்றத்தை கையாளுவது எப்படி? (How To Handle Stress)


யோகா(yoga) எப்படி இதனை சரி செய்கிறது - How Does Yoga Reduce Stress?


மன அழுத்தம் (stress) மற்றும் பதற்றத்தை யோகாசனம் மூலம் எளிதில் சரி செய்யலாம். யோகா மனிதனின் மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் சுவாச செயலினை விரிவுபடுத்தி மனதில் உள்ள நலன் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுகிறது. பிராணாயாமம் முறையானது முழுவதுமாக மனா அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுபட வலி வகை செய்கிறது.


அனைத்து ஆசனங்களும் வெறும் வயிற்றில் செய்வது நல்லது. முதல் முறை பழகுபவர்கள் தகுதி வாய்ந்த   ஆசிரியரின் முன்னிலையில் செய்வது பலன் தரும்.


பின்வரும் யோகா (Yoga) நிலைகள் மனா அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவைகளில் இருந்து வெளியேற உதவுகிறது. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.1. உஸ்ட்ராசனா


2.  சேது பந்தாசனா


3. பாத்தா கோனாசனா


4. பஸ்ச்சிமொட்டனாசனா


5. தண்டாசனாஉஸ்ட்ராசனா (Ustrasana)


Yoga-Asanas-And-Their-Benefits-In-Tamil
முறை : மண்டியிட்டு பின்னர்  பின்பக்கம் வழியாக கைகளால் பாதங்களை தொடுவதாகும்.
இது காலை வேளையில் மற்ற யோகாசனங்களுடன் செய்ய வேண்டிய யோகா நிலையாகும். இதனை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.குறிப்பு :குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.பலன்கள் : உஸ்டிராசனா செய்யும் பொழுது ரத்த ஓட்டம் சீராகிறது. அதாவது அதிகப்படியான ஆக்ஸிஜன் உடலில் உள்ள அழுத்தத்தை சரி செய்து உடலையும் மனதையும் ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது.


 
சேது பந்தாசனா (Sethu Bandasana)


Yoga-Asanas-And-Their-Benefits-In-Tamil- 2


முறை : தரையில் படுத்து பின்னர் உடலை மேலெழுப்பி கைகளை கீழாக கோர்த்துக்கொள்ள வேண்டும்.


குறிப்பு :கழுத்து வலி உள்ளவர்கள் இதனை செய்தல் கூடாது
கர்ப்பிணி பெண்கள் முழுவதுமாக இதனை செய்ய வேண்டாம்.
உங்களுக்கு முதுகு வலி இருந்தால் இதனை தவிர்ப்பது நல்லது


பலன்கள் : உஸ்டிராசனாவை போலவே இதுவும் ரத்தத்தை ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இது முதுகு தண்டு மற்றும் இதயத்திற்கு பலம் சேர்க்கிறது. இதனை நிலையின் மூலம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக திகழ்வீர்கள்


 
பாத கோனாசனா 


Yoga-Asanas-And-Their-Benefits-In-Tamil- 3
முறை : நேராக நிமிர்ந்து அமர்ந்து செயல்பட வேண்டும்


குறிப்பு :முழங்கால் வலி உள்ளவர்கள் இதனை தவிர்க்கவும்
பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் பொது இதனை செய்ய கூடாது


பலன்கள் : இது ஒரு நிலையான யோகா (Yoga) நிலையாகும். இது தொடை மற்றும் இடுப்புப்பகுதியில் உள்ள வலிகளை நீக்கி உங்களை எப்பொழுதும் ரிலாக்ஸாக உணர வைக்கும். மேலும் இது முதுகு தண்டு வலியினை நீக்கும்.


பாஸ்ச்சிமொட்டனாசனா (Paschimottanasana)


Yoga-Asanas-And-Their-Benefits-In-Tamil- 4
முறை : கால்களை நீட்டி பின்னர் முன்னோக்கி மடங்கி கைகளால் கால்களை தொடுதல்இந்த ஆசனத்தை செய்யும் பொழுது வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும்.  நான்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு உணவு அருந்தி இருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனை காலை வேளைகளில் செய்வது நல்ல பலன் தரும். காலை வேளைகளில் முடியாதவர்கள் மாலை வேளைகளில் இதனை செய்யலாம்.குறிப்பு :ஆஸ்துமா , வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது.
கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும்,
முதுகு வலி இருப்பவர்கள் தாமாக செய்வது ஏதேனும் விளைவினை உண்டாகலாம். எனவே தகுதியான யோகா ஆசிரியரை வைத்து செய்து நல்லது.


பலன்கள் : இந்த முன்னோக்கிய நிலையானது கால்களின் பின்பகுதி மற்றும் முதுகெலும்பு போன்றவற்றிக்கு உதவுகிறது. இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடும்போது ரிலாக்ஸாக உணர்வீர்கள் . உணவு செரிமானத்திற்கு உதவும்.


தண்டாசனா (Dandasana)


Yoga-Asanas-And-Their-Benefits-In-Tamil-4-
முறை : நேராக அமர்ந்து கால்களை நீட்டி கைகளை தரையில் நேராக ஊன்ற வேண்டும்குறிப்பு :முழங்கை வலி இருப்பவர்கள் இதனை செய்ய வேண்டாம்பலன்கள் :  இது பார்ப்பதற்கு எளிமையா இருப்பினும்  ஒன்றாகும். இது முதுகு தண்டு நேராக செயல் பட உதவுகிறது. இது செய்து முடித்தபின் மிகவும் ரிலாக்ஸாக உணர்வீர்கள் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுபடலாம்.


மேற்கண்ட ஆசனங்களை செய்து வாழ்வில் முறையான பழக்கங்களை பெற்று மகிழ்ச்சியாய் வாழுங்கள்!!!


படங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ, பேக்செல்ஸ்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.