குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த முறைகள் - Winter Season Skin Care Tips

குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த முறைகள் - Winter Season Skin Care Tips

பனிக்காலம் ஆரம்பமானதுமே எல்லா பெண்களின் மிகப்பெரிய கவலையாக இருப்பது நமது சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது தான். நானும் அப்படித்தான், முன்பெல்லாம் மிகவும் பயப்படுவேன்... தோல் வரட்சியால் சுருக்கம் ஏற்படும், அலுவலகம் செல்லவோ வெளியில் செல்லவோ மிகவும் தயக்கமாக இருக்கும். எந்த க்ரீம்களை பயன்படுத்தினாலும் அது கொஞ்ச நேரம் தான் பலன் தரும். பிறகு வழக்கம் போன்று சருமம்(skin) வரண்டு காணப்படும். குறிப்பாக முகம் பொலிவிளந்து காணப்படும். நம்மை பார்க்கும் அனைவரும் நம்மிடம் கேட்பது என்ன ஆச்சு டல்லா இருக்க? என்பது தான் முதல் கேள்வியாக இருக்கும். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முகம் மட்டும் அல்ல மனமும் சேர்ந்து வாடிவிடும்.


Also Read: Skin Care Problems With Their Solutions


குளிர்காலத்தில் தோல் பராமரிப்பு குறிப்புகள் -Skincare Tips During Winterwinter-season-skin-care-tips-in-tamil-1


என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்த வேலையில் தான் வீட்டிலிருந்தே இந்த முறைகளை அனைத்தையும் பின்பற்ற ஆரம்பித்தேன். பாருங்க நான் முயற்சி செய்த சிறிது நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்தது. இப்போது பனி காலம் ஆரம்பிக்கும் போது சருமம் வரண்டு விடுமோ என்கிற பயமும் இல்லை தயக்கமும் இல்லை. எப்போதும் போல அலுவலகத்திற்கும், வெளியில் செல்ல வேண்டிய இடங்களுக்கும் தைரியமாக தன்னம்பிக்கையுடன் சென்று வருகின்றேன். நான் என்னென்ன முறையை கையாண்டேன் என்பதை இங்கே உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.


உலர்ந்த தோல் கஃபே பற்றியும் படிக்கவும்


தண்ணீர் குடியுங்கள் (Drink Water)


குளிர் காலத்தில் அதிகமாக நமக்கு தண்ணீர் தாகம் ஏற்படாது. அதனால் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் அநேகருக்கு இருக்காது. இதனால் நம் உடம்பிற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். இதனால் நமது சருமம் தண்ணீர் சத்து இன்றி வரண்டு காணப்படும். அதிலும் பனி காற்று நம் உடம்பில் இருக்கும் தண்ணீரை அதிகம் உறுஞ்சுவதால் வழக்கத்தை விட அதிகம் தண்ணீர் குடிப்பது அவசியம். குறிப்பிட்ட நேர இடைவேளையில் அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தால் நமது சருமத்தில் ஏற்படும் வரட்சியை தடுக்கலாம்.
தக்காளி தயிர் (Tomato Yogurt)


பனி காலத்தில் நம்மில் சிலருக்கு அதிக வரட்சி காரணமாக வெடிப்புகள் ஏற்படும். இதனால் தோல் உறிந்து காயங்கள் ஏற்படும். மேலும் இவை இரண்டு நாட்களில் தழும்புகளாக மாற நேரிடும். இந்த மாதிரியான தருணங்களில் தயிருடன் தக்காளி பழத்தை நன்கு மசித்து முகத்தில் மற்றும் தோல் வர்ணடு இருக்கும் இடங்களில் தடவினால் முகம் பொலிவுடனும் பழபழப்பாகவும் இருக்கும். தக்காளி முகத்திற்கு நல்ல ப்ளிச் பேக் போன்று செயல்படும். தயிர் இருக்கும் நல்ல பேக்டீரியாக்கள் வரண்ட சருமத்தை பொழிவுடன் மாற்றுவதுடன் தழும்புகளை விரைவில் மறையச்செய்கின்றது.


எண்ணெய் சரும பராமரிப்புக்கான வீட்டு வைத்தியங்களையும் படிக்கவும்winter-season-skin-care-tips-in-tamil-2


ஆரஞ்சு தேன் (Orange And Honey)


ஆரஞ்சு தோளை நன்கு காயவைத்து அதனுடன் தேன் கலந்து பேஸ் பேக் போன்று ரெடி செய்து காலை எழுந்ததும் முகத்தில் தடவி பாருங்கள். முகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை நல்ல இளமையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அதனுடன் தேன் கலந்து பேஸ் பேக் போட்டால் இன்னும் மினுமினுப்பை அதிகப்படுத்தும்.winter-season-skin-care-tips-in-tamil-3


இது ஒரு மேஜிக் பேக் என்றும் சொல்லலாம். உங்கள் சருமம் மிருதுவாக மாறுவதுடன் பேசியல் செய்துகொண்டதற்கான ஈடான பலனை பெறலாம். இதனுடன் கான்ப்ளார் மாவையும் சேர்த்து அப்ளை பண்ணலாம். பேஸ் பேக் கொஞ்சம் கெட்டியாக முகத்துடன் நன்கு ஒட்டவேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். வரண்ட சருமம் உள்ளவர்கள் கான்ப்ளார் மாவை தவிர்ப்பது நல்லது.


மேலும் படிக்க தேயிலை எண்ணெய்


வைட்டமின் சத்துக்கள் (Vitamin) 


வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ சத்துள்ள உணவுகளை பழங்களை அதிகம் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். பனி காலங்களில் வெளியில் செல்லும் போது முகத்தையும் சருமத்தையும் குளிர்காற்றில் காட்டாமல் இருப்பதே நல்லது. உடலை நன்கு மூடி நன்றாக கவர் செய்யும் ஆடைகளை அணிந்துகொண்டு வெளியில் செல்லுங்கள்.


அவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் (Avocado fruit and olive oil)


பனிக்காலத்தில் அதிகம் மேக் அப் போட வேண்டாம். வீட்டில் எப்போதும் வெண்ணெய் வைத்துக்கொள்வது நல்லது. உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் வெண்ணையை தொடர்ந்து தடவி வரலாம். ரசாயன கலப்பு உள்ள மாய்ச்சரைசர்களை தவிர்த்து விடுவது நல்லது. ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும். ஆவகேடோ பழத்தை மசித்து அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவுங்கள்.winter-season-skin-care-tips-in-tamil-4


கற்றாழை, பப்பாளி (Aloe Vera And Papaya)


வீட்டு தோட்டத்தில் கற்றாழை வளர்ப்பது அவசியம், அதேபோல பப்பாளி மரமும் இன்றைக்கு பலரும் வளர்க்கின்றனர். மழை, பனி காலத்தில் இவை நன்கு செழித்து வளர்ந்திருக்கும். இரண்டுமே சரும வறட்சியை போக்கும் பண்பு கொண்டவை. காலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி பின்னர் சில நிமிடங்கள் கழித்து குளிக்க வறட்சி நீங்கும். பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து உலர வைத்து பின்னர் குளிக்க சருமம் பொலிவடையும்.


winter-season-skin-care-tips-in-tamil-20


வேப்ப எண்ணெய் வெள்ளரிக்காய் (Coconut Oil)


வேப்பிலை நோய் நிவாரணி. அம்மை போட்டவர்கள் தண்ணீர் ஊற்றும் போது வேப்பிலை, மஞ்சளை போட்டு குளிக்க வைப்பார்கள். வீட்டின் கொல்லைப்புறத்தில் வேப்ப மரம் இருந்தால் அதன் இலைகளை பறித்து அரைத்து குளிக்கும் நீரில் வாரம் ஒருமுறை கலந்து குளிக்கலாம். வேப்ப எண்ணெய் சரும வறட்சியை நீக்கும். இதனை கை, கால்களில் பூசலாம். வெள்ளரிக்காயில் அதிக தண்ணீர் சத்து உள்ளது. இது உடம்பின் வறட்சியை நீக்கும். வெள்ளரிக்காயை சாப்பிடுவதன் மூலம் சரும வறட்சி நீங்கும். அதே போல வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கை கால்களில் வைத்துக்கொள்ள வறட்சியை தடுக்கலாம்.


winter-season-skin-care-tips-in-tamil-7


பால், பாதாம், எலுமிச்சை (Milk , Almond And Lemon)


எலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். இதனை தினமும் தடவி வந்தால் சருமத்தை சாஃப்ட் ஆக்கும். வறட்சியாக உள்ள முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும். இதனை தயார் செய்து ப்ரிட்சில் ஒரு கண்டைனரில் சேர்த்து வைக்கலாம்.

winter-season-skin-care-tips-in-tamil-8


கேரட், பால் சிகிச்சை (Carrot And Milk treatment)


நன்றாக தண்ணீர் குடித்தாலே சரும வறட்சி நீங்கும். வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பால் கலந்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும். சருமத்தின் மென்மை தன்மையும் அதிகரிக்கும்.


winter-season-skin-care-tips-in-tamil-10


எண்ணெய் மசாஜ் (Oil Massage)


தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவை சருமத்தை நன்றாக பாதுகாக்கும். இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து ஊறவைத்து சில நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். சரும வறட்சி நீங்குவதோடு குளிர்கால பிரச்சினைகளும் தீரும். விளக்கெண்ணெய், கிளிசரின் போன்றவை சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. விளக்கெண்ணெய், எலுமிச்சை, கிளிசரின் சேர்த்து மிக்ஸ் செய்து உதட்டில் தடவ உதடு வறட்சி, வெடிப்புகள் நீங்கும்.


இவையனைத்தும் முகத்திலும் சருமத்திலும் ஏற்படும் வரட்சியை போக்க வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு நாங்கள் செய்து பார்த்ததை உங்களுக்கு பரிந்துறை செய்திருக்கிறோம். கட்டாயம் இவை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். நீங்களும் இதை முயற்சி செய்து பனி காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பிலிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.


POPXO இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். தள்ளுபடியை பெற POPXOFIRST என்கிற  கூப்பனை உபயோகிக்கவும்...
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.


 


 


 


 


 


 


 


 To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.