நமது பாரம்பரிய உடை சேலை என்றாலும், கால போக்கில் அது மாடர்ன் உடைகளுடன் கலந்து விட்டது. இன்றைக்கு நாம் அதிகம் விரும்பும் உடைகள் வெஸ்டர்ன் ஆகியிருந்தாலும், சேலையில் செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. அதுவே அழகும் கூட! உங்களுக்கு எந்த சேலையை எப்படி ஸ்டைல் (saree style) செய்யவது என்று புரியவில்லை என்றால் கீர்த்தி சுரேஷிடம் இருந்து டிப்ஸை எடுங்கள் . கீர்த்தி தனது படங்களில் மட்டுமில்லாமல் தன்னுடை சேலைகளிலும் நம்மளை கவர்ந்திருக்கிறார் என்பதே நிஜம்!
இனி எந்த விழாவாக இருந்தாலும் சேலையில் நொடியில் தயாராகும் குறிப்புகளை கீழ் காணலாம். எந்த சேலைக்கு எந்த லுக் சேரி என்பதையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த கிறிஸ்துமஸிற்கு சிவப்பில் என்ன ஆடை அணியலாம் என்று யோசிக்கிறீர்களா? கீர்த்தி சுரேஷிடம் இருந்து ஐடியாஸ் எடுங்கள்! இந்த தனிசிறப்புடைய சேலை மீடியம் என்கிற கிலோதிங் ப்ராண்டால் வடிவமைக்க பட்டது. இந்த பாந்தனி பட்டு சேலையில் இட்ஜிமே பப்ளீட்ஸ் (itjime pleats) சிறப்பாகும்.இதை அவர் டேங்க்லர்ஸ் ஓடு மேட்ச் செய்த்துள்ளார். மேலும் இதில் ஆப் ஷோல்டர்-போட் நெக் போலிருக்கும் பிளவுஸ் தான் சிறப்பு.
இது போன்ற பாரம்பரிய புடவைகள் (saree) நமக்கு ஒரு கிளாசிக் டச் தரும். காலம் கடந்தாலும் நம்மளுடைய வட்ராப்பில் (wardrobe)இதுபோல் சேலைகள் வைத்திருக்க மற்றும் அணிய ஆசையை தூண்டும் சேலைகளில் இதும் ஒன்று!ராஜலக்ஷ்மி பனாரஸ் சேலையில் கீர்த்தி ஜொலிக்கிறார். அவர் இந்த லூக்கிற்கு ஸ்ரீ பலாசா (Sri Palasa) பிளவுஸ் மற்றும் சிதாரா ஜிவெளீரி உடன் மேட்ச் செய்ந்துளார். அவருடைய சிகையில் ஒரு மெஸ்ஸி பன் இதற்கு மேலும் அழகு கூட்டுகிறது.
பாரம்பரிய சேலையில் ஒரு மாடர்ன் டச் குடுக்க நினைத்தால் இது போன்ற ஒரு ஸ்டைலை பின்பற்றுங்கள். லதா புட்டண்ணாவின் ஓட் கடூர் (haute couture) இந்திய சேலை வகைகளில் இருந்து இந்த பாரம்பரிய சேலையை இவர் உடுத்தி இருக்கிறார். ஹேர்ஸ்டைல்லில் ஒரு டைட் அப் பண் (tied up bun) மற்றும் பிரதே (prade) ஜெவெல்ஸில் அலங்கரித்துளார். அவர் அணிந்திருக்கும் பெல் ஸ்லீவ் பிளவுஸ் லுக் ( bell sleeve blouse) தான் பாரம்பரிய புடவையில் ஒரு ட்ரெண்டி ட்விஸ்ட் கொடுத்திருக்கிறது.
ஒரு வைன் மற்றும் சில்வர் நிறம் கொண்ட மினுமினுக்கும் முழு கை ஜாக்கெட்டை வைன் நிறம் கொண்ட சேலையுடன் மேட்ச் செய்த்திருக்கிறார். இந்த வைன் நிற எ -ம் -பி -ம் பேஷன்ஸ் (ampm fashions) சாரியை அவர் மகுடம் அவார்ட்ஸிற்கு அணிந்திருந்தார்.அவர் இந்த தோற்றத்தை பிரதே (prade)ஜெவெல்ஸால் அலங்கரித்து , கூந்தலை லேசான சுருள்களுடன் ஸ்டைல் செய்திருந்தார்.
ஒரு கல்யாணத்திற்கோ அல்லது ஏதேனும் ஒரு விழாவிற்கு செல்லும்போது பாரம்பரிய பட்டே அழகுதான். கீர்த்தி சுரேஷ் இந்த மெரூன் கங்கடலா (kankatala) சேலையை ஜே எப் டபுள்யு மகசின் (JFW magazine) விருதிற்கு அணிந்திருந்தார் . ஒரு எளிமையான மற்றும் எலெகண்ட் ஆனா இந்த லுக்கிற்கு அமரப்பள்ளி (amarapalli jewels) ஜெவெல்ஸால் அலங்கரித்திருந்தார். எளிமையான சுருள் செய்த கூந்தல் இதற்க்கு மேலும் அழகு கூட்டியது.
ஷ்ரவ்யா வர்மாவால் ஸ்டைல் செய்யப்பட்ட இந்த லுக் மிகவும் நளினமான ஒன்று. இதை குண்டூரில் ஹாப்பிமொபைல்ஸ் (happy mobiles) திறப்பு விழாவிற்கு அணிந்திருந்தார் கீர்த்தி. இந்த டெக்கான் ஸ்டோரி (deccan story) சேலையின் க்ரெய் கலருக்கு மேட்சாக அமரப்பள்ளி ஜெவெல்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பெடுங்கள் இங்கே!
நீங்கள் சேலையை இன்னும் அல்ட்ரா மாடர்ன்னாக அணிய ஆசையுள்ளவரா இருந்தால் இது உங்களுக்கான லுக். மிகவும் ட்ரெண்டி ஆனா இந்த லுக் சாந்தனு நிகில் டிசைனரால் வடிவமைக்க பட்டுள்ளது. மேலும் இதற்க்கு ஒரு சிக் என்ற காதணியும் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய மோதிரமும் மேட்ச் செய்த்திருக்கிறார்.சிம்பிள் ஆன இந்த லுக் ஒரு மாடர்ன் பெண்மணியின் தேவைக்கேற்ப இருக்கிறது.
ஷ்ரவன் குமாரின் இந்த வெள்ளை நிற சேலை எந்த விதமான நிகழ்ச்சிக்கும் அணிய சிறந்ததே! இதில் கீர்த்தி தன்னோடைய கோல்டன் ஜரிகைக்கு மேட்சாக ஒரு பெரிய டாங்க்லெர் காதணியையும் , மோதிரமும் அணிந்திருக்கார். சிகை அலங்காரத்தில் ஒரு சிம்பிள் ஆனா மெஸ்ஸி பன் உடன் இந்த லுக்கை முடித்திருக்கிறார்.உண்மையில் அவர் ஒரு தேவதையை போல் தெரிகிறார்! நீங்களும் ட்ரை செய்து பாருங்களேன்!
என்ன பெண்களே ? நீங்களும் கீர்த்தி சுரேஷைபோல் சேலையில் ஜொலிக்க தயாரா?
படங்களின் ஆதாரங்கள் - Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Also read pretty sarees you must check ou this wedding season