இந்த ராசி காதலர்கள் உங்களுக்கு கிடைச்சா நீங்க எந்த கவலையுமில்லாம வாழலாமாம் !

இந்த ராசி காதலர்கள் உங்களுக்கு கிடைச்சா நீங்க எந்த கவலையுமில்லாம வாழலாமாம் !

ஒவ்வொரு ஆண்களும் தனக்கான பெண்ணைக் கண்டுபிடித்து அவளைக் கவர்ந்து அதன் பின் அவள் உள்ளத்தை தன் வசப்படுத்துவது தான் தனது பிறவிப் பயன் என்று நினைப்பதுண்டு.


இதில் பெண்கள் எந்த வகையான ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக, குணநலன் ரீதியாக எனப் பல்வேறு விதமான ஆய்வுகள் வெளியாகியபடி இருக்கின்றன. 


அந்த வரிசையில் ராசிபலன் ரீதியாக பெண்களுக்கு எந்தவகை ராசிக்கார ஆண்களை மிகவும் பிடிக்கும் அல்லது எந்த வகையான ராசிக்காரர்கள் பெண்கள் விரும்பும் வகையில் நடந்து கொள்வார்கள் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ராசிக்காரர்கள் பெண்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அவர்கள் அன்போடும் அக்கறையோடும் பார்த்துக் கொள்வதில் வல்லவர்கள். அதற்காக மற்ற ராசிக்காரர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். பெண்கள் கொண்டாடும் சில குணங்கள் கீழ்க்கண்ட ராசியினரிடம் சற்று அதிகமாக காணப்படும். அவ்வளவுதான்.


இன்ஸ்டன்ட் முதல் எஸ்ப்ரெஸ்ஸோ வரை - உங்களுக்கு பிடித்த காஃபிய சொல்லுங்க ! உங்களப்பத்தி நாங்க சொல்றோம்!மிதுனம்


மிதுனத்தை ராசியாக கொண்ட ஆண்கள் பெண்களை கவர்வதில் வல்லவர்கள். இதற்கென எந்த பிரத்யேக முயற்சியும் இவர்களுக்குத் தேவை இல்லை. இவர்களின் இயல்பே பெண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். இவர்களிடம் மென்மையும் மேன்மையும் மேலோங்கி இருக்கும். ஆகவே இவர் உங்கள் காதலராக இருந்தால் உங்கள் வாழ்வு சுகபோகம்தான்! உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வதிலாகட்டும் உங்கள் மீது அக்கறை செலுத்துவதிலாகட்டும் இவரை முந்த யாரும் இல்லை.


எளிதில் உணர்ச்சிவசக் கூடிய பெண்கள் என்றால் இவர்களுக்கு மிகப் பிடிக்கும். துறுதுறுப்பாகவும் ஆர்வகமாகவும் செயலாற்றும் ஆண்களை உங்களுக்கு பிடிக்கும் எனில் நிச்சயம் இவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.சிம்மம்


இந்த ராசிக்காரர்கள் கோபம் இருந்தாலும் குணமும் அவர்களிடம் இருக்கும். இவர்களுடைய உறவினர்களை இவர்கள் மிகுந்த மரியாதையுடன் வைத்துக் கொள்வார்கள். இவருக்கு காதல் என்பது மிக சுலபமாக வரும் உணர்வாகும். பெண்களும் இவருடன் பழக விரும்புவார்கள்.


எல்லோரிடமும் சகஜமாக பழகினாலும் இவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது இவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ரகசியவாதிகள். பெண்கள் என்று வருகையில் இவர்கள் பேச்சு மிக பணிவாகவும் மென்மையாகவும் இருப்பதால் பெண்களுக்கு மிக பிடிக்கும். அது மட்டுமல்ல நட்பை மதிப்பவர்கள் ஆகவே இந்த ராசிக்காரரை கணவனாக அடைந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். தாராளமாக செலவு செய்யக் கூடியவர்கள் ஆகவே இவரை திருமணம் செய்தால் உங்கள் ஷாப்பிங் வாழ்க்கை ஏகபோகமாக இருக்கும்  


 துலாம்


இந்த துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் வித்தியாசமானவர்கள். வெகு சீக்கிரத்தில் அனைவரையும் ஈர்த்து விடும் ப்ரத்யேகப் பாங்கு இவர்களிடம் எப்போதும் இருக்கும். ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களை செய்யும் திறமைசாலிகள். இவர்கள் எதை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். கலைநயம் இவர்களிடம் கொட்டிக் கிடைக்கும்.


உங்களைப் பற்றி அடிக்கடி கவிதை சொல்லி உங்களை மகிழ்விப்பதில் வல்லவர். அதிகம் பேசாத போதும் சில வார்த்தைகளில் தங்கள் அன்பை புரிய வைப்பதில் சாமர்த்திய சாலிகள். உங்களை அணுகும்போதே கலைநயத்தோடு அணுகுவார்கள். உங்களை பொக்கிஷமாக கருதுவார்கள். இந்த ராசிக்காரர்களை கணவனாக அடைந்த பெண்கள் அத்தனை பேருமே உலகின் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலிகள்!


  


மகரம்


இந்த வகை ராசிக்காரர்கள் பெண்களை தங்களது பேச்சின் மூலமும் அழகாக தன்னை காண்பித்துக் கொள்ளும் பங்கின் மூலமும் எளிதாக கவர்வார்கள். பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இவரது பேச்சும் செயல்களும் இருக்கும். இவர்களது இந்த வித்யாசமான செயல்களால் பெண்கள் ஈர்க்கப்படுவார்கள்.


எப்போதும் அடுத்தவர்களை பேச்சாலும் செயலாலும் வசீகரித்தபடி இருப்பது இவர்கள் இயல்பு. இவர்களுக்கு ஆளுமைத் தன்மை அதிகம். அது இவர்களுடைய தனித்துவதில் ஒன்று. இப்படிப்பட்ட மகர ராசிக்காரர்களை திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் எந்த கவலையும் இன்றி பயணிக்கலாம். காரணம் இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை உள்ளங் கையில் வைத்து தாங்குவார்கள்


astro 


"பண வரவுகள், புதிய வாய்ப்புகள், வீடு கட்டும் யோகம்,
பரம்பரை சொத்து .. புதிய வருடத்தில் உங்கள் சித்திரை மாத ராசி பலன்கள் !"


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.