பண வரவுகள், புதிய வாய்ப்புகள், வீடு கட்டும் யோகம், பரம்பரை சொத்து .. புதிய வருடத்தில் உங்கள் சித்திரை மாத ராசி பலன்கள் !

பண வரவுகள், புதிய வாய்ப்புகள், வீடு கட்டும் யோகம், பரம்பரை சொத்து .. புதிய வருடத்தில் உங்கள் சித்திரை மாத ராசி பலன்கள் !

இந்த நாளில் மூன்று வெவ்வேறு இனமக்கள் தங்கள் புது வருடத்தை ஒன்றாக ஆரம்பிக்கிறார்கள். முதலில் தமிழர்கள் இரண்டாவது கேரளா மக்கள் இதனை விஷு என்று அழைக்கிறார்கள் மூன்றாவதாக சிங்கள மக்கள் இதே நாளைத்தான் அலூத் அவ்ருதா என்று அழைக்கிறார்கள்.


இந்த தமிழ் வருடப்பிறப்பிற்கு விகாரி என்று பெயர்.


விகாரி வருட வெண்பா

பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சேரார்
பயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடைமை விற்றுண்பார் தேர்.


இந்த வருடம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறப்பதால் மக்கள் பொன் பொருள் சேர்க்கை அற்புதமாக இருக்கும்.மழையின்றி நீர் பஞ்சம் ஏற்படலாம் என பாடல் கூறுகிறது. விவசாயம் மத்திமமாக இருக்கலாம். சேர கூடாதவர்கள் என்று கூறப்படுபவர்கள் அதிகரிக்கலாம். குருமங்கள யோகம் இருப்பதால் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் இறைவனின் சாந்நித்யம் கிடைக்கும். தனலாபங்கள் அதிகரிக்கும்.


புதுவருடம் பிறந்து மேஷத்தில் சூரியன் நுழையும் மாதமான சித்திரையில் உங்கள் ராசிபலன் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். (Astro)


இந்த வருடம் மேஷம் - மிதுனம் - கடகம் - சிம்மம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம் ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். : ரிஷபம் - விருச்சிகம் - கும்பம் - மீனம் ராசிக்காரர்களுக்கு மத்திமமாக இருக்கும். தெய்வீகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களுக்கு எல்லா நாட்களும் அற்புதமானதாகவே மாறும்.மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாதம்.அரசு வேலை கிடைக்கும், பதவிகள் உங்களை தேடி வரும். அசையா சொத்துக்கள் மூலம் பண வருமானம் உண்டாகும் . குருவால் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், செல்வ நிலை சிறப்படையும். 9ஆம் தேதிக்கு மேல் திடீர் பணவரவு ஏற்படும். வீட்டுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள், தடைகள் நீங்கும். செல்வம் பெருகும். புதிய வீட்டுக்கு மாறும் சூழல் ஏற்படும். தெய்வத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். செவ்வாய் கிழமைகளில் முருகனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகரிக்கும், செலுத்த வேண்டிய வரிகளை செலுத்திவிடுவது சிறப்பு. இந்த மாதம் கோபம் அதிகமாக இருக்கும். அசையா சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். எதிர்பாராத வகையில் திடீரென்று பணம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். கடுமையான உழைப்பால் மனதில் இனம் புரியாத பாரம் அழுத்தும், பிற்பகுதியில் வங்கி சேமிப்பு உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். வியாழனில் குருவிற்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடலாம். கொண்டைக்கடலை வேகவைத்து தானம் தரலாம்.மிதுனம்


மிதுனம் ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான மாதமாக இருக்கும். பதவி உயர்வு தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். இருப்பினும் விரய செலவுகள் அதிகரிக்கும். மாதத்தின் மத்தியில் அதிகமான கோபம் ஏற்படும். கவனமாக இருக்கவும். சொந்த தொழில் சிறப்படையும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களின் செயல்கள் சாதகமாக இருக்கும். பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும், வியாபாரம் விருத்தியாகும் மற்றும் வியாபாரக் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். ராகுவால் மனதில் பயம் உண்டாகும். கேதுவால் மனைவியுடன் பிரச்சினை உண்டாகும். புதன்கிழமை பெருமாள் வணங்கி வந்தால் தீர்வு கிடைக்கும்.கடகம்


கடக ராசிகாரர்களுக்கு செயல்கள் மற்றும் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் உதவுவார்கள்.வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும் அதை போலவே பணம் வரவு செலவுகளில் சிக்கல் இருக்கும். உறவினர் இடையே மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகளால் மகிழ்ச்சி இருக்கும். எதிரிகளால் தொல்லை இருப்பதால் மனதில் பயம் இருக்கும். விரய செலவுகள் அதிகரிக்கும். கேதுவால் நோய் பற்றிய கவலை வரலாம். வெள்ளிக் கிழமை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்.சிம்மம்


சிம்மம் ராசிக்காரர்ளுக்கு பதவி உயர்வு மற்றும் சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். பரம்பரை தொழில் விருத்தி அடையும்.லாபம் அதிகரிக்கும். உறவினர் செயல்களால் மனம் வருந்துவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. வாகனம் அல்லது அசையாத சொத்துக்கள் சேர்க்கை நடக்கலாம்.கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரப்படுத்துங்கள். நீண்ட நாள் ஏக்கங்கள் நடந்தேறும். உற்சாக பயணம் செல்வீர்கள். ஞாயிறு கிழமை அன்று சிவன் கோயிலில் உள்ள சூரியனை வழிபட்டால் கண் பிரச்சினைகள் தீரும்.கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் கவனம் வேண்டும், உயர் அதிகாரிகள் துன்பம் தரலாம்.வெளிநாட்டு தொழில் ரீதி தொடர்புகள் உங்களுக்கு நலம் பயக்கும்.ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகமாகும். வியாபாரம் நன்றாக இருக்கும். உறவினர்கள் தொல்லை தரலாம். வாகன சேர்க்கை மற்றும் அசையாத சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பயணம் செல்ல வேண்டி வரலாம். கணவன் மனைவி நெருக்கம் நீடிக்கும். அம்மாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு கட்டும் யோகம் உண்டாகும். சனிக்கிழமை பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபட நன்மை கிட்டும்.துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு பயணங்கள் அதிகமாக இருக்கும். அரசு ஒப்பந்த தொழிலில் லாபம் கிடைக்கும். வண்டி வாகனம் இயக்கும்போது கவனமாக இருக்கவும். பூர்விக சொத்துக்கள் கிடைக்கும். உறவினர்கள் தொந்தரவு இருக்கும். ஷேர் மார்க்கெட் முதலீடு லாபம் தரும். பணம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்துடன் விடுமுறையை அனுபவிப்பீர்கள். துணையுடனான பிரச்சினையை தவிர்ப்பது நல்லது. அலைச்சலுடன் கூடிய அலுவலக பிரயாணங்கள் இருக்கலாம். வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலில் தாயாருக்கு தாமரை தந்து விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்.


rasi %282%29


விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சச்சரவு ஏற்படும். உயர்அதிகாரிகளிடம் விவாதத்தை தவிர்க்கவும். ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும். வாகனங்களில் கவனம் தேவை மற்றும் மின்சாதனங்களையும் பத்திரமாக கையாளவும். பங்கு வர்த்தக முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். செல்வச் செழிப்பு அதிகமாகும். அதனால் மனதில் அமைதி நிலவும்.வீட்டுக்கு பொருட்கள் வாங்குவீர்கள். பேச்சில் கவனம் வேண்டும், பணம் வருவதில் தடைகள் உண்டாகும். கவலையை தவிர்க்க திங்கட்கிழமை சிவன் கோயிலுக்கு சென்று அபிஷேகம் செய்ய பால் வாங்கி கொடுக்கலாம்.தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், மருத்துவம் படிக்க வாய்ப்புகள் அதிகம். உடன்பிறந்தவர்களுடன் சச்சரவு உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். செல்வம் பல வகையிலும் வந்து சேர்ந்தாலும் வீண் செலவுகள் இருக்கும். புது வாகன யோகம் உண்டு. உடல் வலி போன்ற தொந்தரவுகள் இருக்கும். வேலை அதிகமாகும். எண்ணங்களில் குழப்பம் நீடிக்கும். வியாழன் அன்று குருவையும் சனியன்று ஆஞ்சநேயரையும் வழிபடலாம்.மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு புதிய வீடு மற்றும் வாகன யோகம் உண்டாகும். கலை ஆர்வம் அதிகமாக இருக்கும். உடன்பிறந்தவருடன் மனப்பிணக்கு உண்டாகும். அலுவலகத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். விரய செலவுகள் அதிகரிக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். அதனால் முக வசீகரம் அதிகரிக்கும் வெளிநாட்டு யோகம் உண்டு. ஆரோக்கியம் கூடும். செவ்வாய் அன்று முருக பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.கும்பம்


கும்பம் ராசிக்காரர்களுக்கு வெளியூர் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில இருந்து நல்ல தகவல் கிடைக்கும். புதிய நிலம் வாங்கும் யோகம் இருக்கிறது. பரம்பரை சொத்து கைக்கு வரலாம்.சமயத்திற்கு தகுந்தபடி உங்கள் பேச்சு இருக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ஆபரண சேர்க்கை அதிகமாகும்.தொழிலில் லாபம்  உண்டாகும்.முன்னோர்களின் ஆசி உங்களுக்கு ஏற்படும். புதன்கிழமைகளில் காலை 6.30 முதல் 7.30குள் விளக்கேற்றி வழிபட்டால் நல்லது நடக்கும்.


rasi %283%29


மீனம்


மீனம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.பேச்சில் நிதானம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சந்தோஷமாக இருப்பீர்கள். வாக்கு பலமாகும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். செயல்களில் தெளிவு பிறக்கும். விரய செலவுகள் ஏற்படலாம். உங்களின் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். வீட்டை பராமரிக்கும் வேலை நடைபெறும். வெள்ளிக் கிழமைக அன்று காலை 6.30 முதல் 7.30 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் படிக்க நன்மை கூடும்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


இந்த ராசியில் உங்கள் காதலர் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான்!


இன்ஸ்டன்ட் முதல் எஸ்ப்ரெஸ்ஸோ வரை - உங்களுக்கு பிடித்த காஃபிய சொல்லுங்க ! உங்களப்பத்தி நாங்க சொல்றோம்!


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.