logo
ADVERTISEMENT
home / Dating
உங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்க சில எளிமையான வழிகள் உண்டு !

உங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்க சில எளிமையான வழிகள் உண்டு !

பெரும்பாலான காதல்கள் வெற்றிகரமான திருமணத்தில் முடியாததற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது காதலியின் பெற்றோரிடம் சம்மதம் (approval) கிடைக்காமல் போவதால்தான் என்கிறது சர்வே. எப்படியோ முட்டி முன்னேறி பொய் முக்கால் உண்மை கால் என பேசி பெண்ணை காதலிக்க வைப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது.

அதன்பின்னர் அந்தக் காதல் கல்யாணத்தில் முடிய வேண்டும் என்று நினைக்கும் சொற்ப பேராண்மகன்களுக்கு பிரச்னை காதலியின் பெற்றோர் ரூபத்தில் தான் வருகிறது. டாட்’ஸ் லிட்டில் பிரின்சஸ் பெண்ணை தன்னுடைய மனைவியாக்கி கொள்ள அவ்வளவு எளிதாக முடிவதே இல்லை. இதற்கான சில தீர்வுகள் உங்கள் வசம்.                                               

இதெல்லாம் பிடிக்காமல்தான் நான் டிடியை விவாகரத்து செய்தேன் – ரகசியத்தை வெளியிட்ட DD கணவர்!

ADVERTISEMENT

Hotstar

காதலியின் பெற்றோர் சம்மதம் பெற அவர்கள் முன்பு நீங்கள் மொபைல் போனை உபயோகிக்காமல் இருப்பது முதல் படி. அவர்களை சந்திக்கும் சமயம் அவர்களுடன் நீங்கள் இருப்பது தான் முக்கியம். சோசியல் மீடியாவை மெதுவாக பார்த்துக் கொள்ளலாம். அவர்களுடன் உணவருந்தும் போது செல்போனை உபயோகிக்காதீர்கள் அது அவர்களை அவமதிப்பது போலத் தோன்றலாம்.

காதலியின் பெற்றோர்களை சந்திக்கும் முன்னர் அவர்களது ரசனை பற்றி உங்கள் காதலியிடம் அளவளாவி விட்டு செல்லுங்கள். காதலியின் அம்மாவிற்கு ஆன்மிகம் பிடிக்கலாம் அப்பாவிற்கு திரைப்படங்கள் மேல் காதலாக இருக்கலாம். இதனைப் பற்றிய அறிவுடன் அவர்களிடம் சுவாரசியமாக உரையாடினால் மிகவும் மகிழ்வார்கள்.

 நீங்கள் காதலிப்பவர் உங்களை ஏமாற்றி விடுவாரா ! அவரின் இந்த குணங்களை சரிபாருங்கள்! 

ADVERTISEMENT

Hotstar

உங்கள் காதலியின் பெற்றோரை சந்திக்கும் போது நீங்கள் உங்கள் காதலியிடம் மரியாதையான முறையில் நடந்து கொள்ள வேண்டும். காதலி அருகில் இருந்தாலும் அவரைத் தொடாமல் கண்ணியமாக இருந்தால் நீங்கள் அவர்கள் மகளை மிக மரியாதையாக பார்த்துக் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும்.

காதலியின் பெற்றோரை சந்திக்கும் போது உங்கள் நடவடிக்கை நிதானமாகவும் தெளிவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மரியாதையான வார்த்தைகளை அடிக்கடி உபயோகியுங்கள். நன்றி போன்ற சொற்களை மிருதுவாக உச்சரியுங்கள். காதலிக்கு நீங்கள் எப்படி இருந்தாலும் பிடிக்கும்தான் ஆனால் காதலியின் பெற்றோருக்கு சில சம்பிரதாயங்கள் முக்கியம். அவர்கள் வேறொரு தலைமுறையை சார்ந்தவர்கள் என்பதை நினைவு மறவாதீர்கள்.

ADVERTISEMENT

Hotstar

உங்கள் காதலி பற்றிய கேலி கிண்டல் பேச்சுக்களை அவர்களிடம் பேசி விடாதீர்கள். சரியான வாயாடி , பரபரப்பானவள் பொறுப்பிலாதவள் போன்ற புகார்களை நீங்கள் அவர்களிடம் கூற நேர்ந்தால் அது அவர்களுக்கு மன வருத்தத்தை தரலாம். உங்கள் காதலியை உங்களுக்கு சமமாக நடத்துங்கள்.

மிக முக்கியமாக காதலியின் பெற்றோரை சந்திக்கும்போது இயல்புக்கு மாறான விஷயங்களில் ஈடுபடாதீர்கள். உங்களுக்குத் தெரியாததை தெரிந்ததாக காட்டிக் கொண்டு பொய் சொல்வதை தொடராதீர்கள். அவர்களின் அனுபவம் உங்கள் நாடகத்தை வெளிக்காட்டி விடலாம்.

ADVERTISEMENT

காதலியின் பெற்றோர் உங்களுக்கும் பெற்றோர்தான் என்பதை உணருங்கள். அதே அக்கறையுடன் அதே பிரியத்துடன் அவர்களை அணுகுங்கள். மூன்றாவது மனிதரிடம் பேசுவது போல பேச வேண்டாம். உயர் அதிகாரி போல அவரை நடத்தாமல் உங்கள் உறவாக அவர்களை பாருங்கள். எல்லாம் உங்கள் வசமாகும்.

Dedicated to my favourite person Mariyanesan!

 

 

ADVERTISEMENT

Hotstar

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
18 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT