logo
ADVERTISEMENT
home / Family
உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் இடையே இருக்கும் உறவை எப்படி பலப்படுத்திக் கொள்வது?

உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் இடையே இருக்கும் உறவை எப்படி பலப்படுத்திக் கொள்வது?

உறவுகள் பல இருந்தாலும், தாய் மற்றும் மகளுக்கு இடையே இருக்கும் உறவு அழகானது. இதை யாராலும் மறுக்க முடியாது.ஒரு பெண், தன் அன்னையிடமே அதிகம் தன்னை பற்றி, தன் மனதில் எழும் எண்ணங்களை பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ள விரும்புவாள். அப்படி அவளுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஒரு தாயின் உறவும், இருக்க வேண்டும். இதனால் உறவு பலப்படுவதோடு, ஒரு நல்ல பெண்மணியும் நீங்கள் இந்த சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துகின்றீர்கள். உங்கள் அன்பு மகளுடன் உங்களுக்கு இருக்கும் உறவை நீங்கள் பலப்படுத்த விரும்பினால், இங்கே உங்களுக்காக சில சுவாரசியமான மற்றும் பலன்தரக்கூடிய குறிப்புகள்.

1. உங்கள் மகள் பேசுவதை ஆருவத்துடன் கவனியுங்கள்

எப்போதும் சிறு குழந்தைகளுக்கு பேசிக்கொண்டிருந்தால் அதிகம் பிடிக்கும். ஆனால் பெற்றோர்களுக்கு தான் அதிக வேலை காரணமாகவும், நேரமின்மை காரணமாகவும், பேச முடியாமல் போய்விடக் கூடும். ஆனால், அப்படி செய்யாமல், உங்கள் மகளுக்காக(daughter) நீங்கள் அதிக நேரம் ஒதுக்கி, அவள் உங்களுடன் ஆர்வத்தோடு பேசும் போது அதனை கவனித்து அவளுக்கு அன்புடன் பதிலளியுங்கள்.

2. உங்கள் மகளுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

Pexels

ADVERTISEMENT

உங்களுக்கு பிடித்து தான் உங்கள் மகளுக்கும் பிடிக்கும் என்றில்லை. அதனால், உங்கள் மகளுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை பற்றி தெரிந்து கொண்டு, அவளுக்கு பிடித்த விடயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். இது அவள் உங்கள் மீது அதிக அன்பை செலுத்த ஒரு நல்ல காரணியாக இருப்பதோடு, உங்கள் உறவும் பலப்படும்.

3. உங்கள் மகளின் கேள்விகளுக்கு தடை போடாதீர்கள்

குழந்தைகளுக்கு பொதுவாக வளரும் பருவத்தில் பல கேள்விகள் மனதில் தோன்றும். அதற்கு வரம்பு இல்லை. அப்படி உங்கள் மகள் ஏதாவது கேள்வி கேட்டால், அதற்கு கட்டுப்பாடு விதிக்காமல், அவளுக்கு விடயங்களை புரிய வைத்து, எடுத்துக் கூறினால், அந்த புரிதல் அவளுக்கு அறிவை வளர்ப்பதோடு, பக்குவத்தோடு நடந்து கொள்ளவும் உதவும். ஆனால் நீங்கள் அவள் கேள்விகள் கேட்கும் போது கட்டுப்பாடு விதித்தால், அவளுக்கு உங்கள் மீது பயம் உண்டாவதோடு, எந்த கேள்விகளும் கேட்ட தயங்குவாள். இது அவளது அறிவு வளர்ச்சியையும் பாதித்து விடும்.

4. உங்களுக்கு தெரிந்துவற்றை கற்றுக் கொடுங்கள்

Pexels

ADVERTISEMENT

உங்கள் மகளுக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் நேரங்களில் உங்களுக்கு தெரிந்ததை கற்றுக் கொடுங்கள். இதனால் அவளுக்கு சில புதிய விடயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைப்பதோடு, அவள் திறமையையும் வளர்த்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

5. பள்ளிக்கூட நிகழ்வுகள் மற்றும் நண்பர்களை பற்றி பேசுங்கள்

உங்கள் மகள் கூறாவிட்டாலும், அவளிடம் நீங்களாகவே ஒரு நல்ல நட்போடு, அவளது பள்ளிக்கூட நிகழ்வுகளை பற்றியும், நண்பர்களை பற்றியும் பேச வேண்டும். அப்படி பேசும் போது அவளுக்கு பள்ளியில் ஏற்படும் நன்மைகள் மற்றும் அசௌகரியங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு, அவளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யலாம். மேலும் அவள் நல்ல நண்பர்களுடன் தான் பலகுகின்றாலா என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.

6. நீங்கள் முதலில் செயல்படுங்கள்

Pexels

ADVERTISEMENT

எப்போதும் உங்கள் மகள் உங்களிடம் முதலில் வந்து கூற வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்கள் முதலில் செயல்படுங்கள். இதனால் அவளுக்குள் ஏதாவது தயக்கம் இருந்தாலும், அது விலகி, உங்களிடம் வெளிப்படையாக மனதில் இருக்கும் எண்ணங்களையும், விருப்பங்களையும் உங்களிடம் கூறுவாள்.

7. உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்

அனைத்து அம்மாக்களும் (mom) செய்ய வேண்டிய முக்கியமான விடயம் இது. நீங்கள் உங்கள் இளம் வயது முதல் எப்படி வாழ்த்து வந்தீர்கள் என்பதை விட, இப்போது உங்கள் மகளின் எதிர்காலத்திற்காகவும், நன்மைக்காகவும் உங்களை நீங்கள் சற்று மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். இதனால் அவள் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க நீங்கள் ஒரு நல்ல துணையாக இருப்பீர்கள்.

8. பேசுங்கள்

Pexels

ADVERTISEMENT

உங்கள் மகளிடம் எந்த நேர கட்டுப்பாடும், அளவுகோலும் இல்லாமல் மனம் விட்டு பேசுங்கள். நீங்கள் உங்கள் மகளிடம் பேச பேசத்தான் அவளுக்கும் உங்கள் மீதான நட்பு, அன்பு மற்றும் உறவும் வளரும். இது உங்கள் பந்தத்தையும் பலப்படுத்தும்.

9. பேசுவதை காது கொடுத்து கவனியுங்கள்

உங்கள் மகள் உங்களிடம் ஆசையாக அல்லது மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ள உங்களிடம் பேச வந்தால், அதனை காது கொடுத்து கவனியுங்கள். பிறகு பேசலாம், இப்போது நேரமில்லை என்று ஏதோ காரணங்களை கூறி புறக்கணிக்காதீர்கள். இது அவள் மனதில் வருத்தத்தை உண்டாக்குவதோடு, தனக்காக யாரும் இல்லையோ என்கின்ற வலியை மனதில் உண்டாக்கி விடக்கூடும். இது அவள் வளர்ச்சியையும் பாதித்து விடக் கூடும். 

 

மேலும் படிக்க – “ஹெலிகாப்டர் பெற்றோர்” – உலகின் மிக நீண்ட தொப்புள் கொடி பற்றி அறிந்ததுண்டா ?

ADVERTISEMENT

பட ஆதாரம்  -Pixabay,Pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

04 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT