சென்னையில் ஒரிஜினல் பட்டு புடவைகள் வாங்க சிறந்த கடைகள்.. முகவரி & விவரங்கள்!

சென்னையில் ஒரிஜினல் பட்டு புடவைகள் வாங்க சிறந்த கடைகள்.. முகவரி & விவரங்கள்!

இன்றைய பரபரப்பான வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள் என்றால் அது உறவினர்கள், நண்பர்கள் சகிதமாக கொண்டாடும் விழாக்களும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும்தான். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கான பிரத்யேக ஆடைகளை பாரம்பரியம் மாறாமல் உடுத்தி மகிழ்ந்து வருகிறோம். 

என்னதான் நவீனம், மாடர்ன் என வந்தாலும் பழமை என்பது நம்முடைய பட்டு புடவையில் தான் உள்ளது. வரலாறு மீது இயல்பாகவே புதிய தலைமுறையினருக்கு ஈர்ப்பு வரும். தென்னிந்தியாவில் புடவைகள் மீதான காதல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 

இன்றைய தலைமுறை பெண்கள் கூட பட்டு புடவைகளை விரும்பி அணிகின்றனர். பட்டு துணிகள் (pattu saree) அதை அணிபவர்களுக்கு தெய்வீக அழகை தருகிறது. தமிழகத்தில் ,காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் மற்றும் ஆந்திர மாநிலம் தர்மாவரம் ஆகிய பட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.

Table of Contents

  சென்னையில் பட்டு புடவை வாங்க பிரபலமான கடைகள் (Popular shops to buy pattu saree in chennai)

  சென்னையில் அனைத்து வகையிலான உடைகளும் பல்வேறு டிசைன்களில் கிடைக்கிறது. தி. நகர் முழுவதும் ஜவுளி ரகங்களால் நிறைந்திருக்கும். மேலும் காஞ்சிபுரம், ஆரணி பட்டு புடவைகளும் கிடைக்கிறது. சென்னையில் பட்டு புடவை வாங்க சிறந்த கடைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.

  நல்லி சில்க்ஸ்

  இன்று பட்டுப் புடவைக்கு மிகவும் பிரபலமாக உள்ள நல்லி சில்க்ஸ் (Nalli Silks) .இந்த நிறுவனத்தின் 89 ஆண்டுகால பாரம்பரியமிக்க பட்டு புடவைகள் பல்வேறு டிசைன்களில் கிடைக்கிறது. நல்லி குப்புசாமி செட்டியார் நல்லி சில்க்ஸின் வளர்ச்சியை சென்னை தி.நகரில் 1928ல் சிறிய கடையாக தொடங்கினார். இன்று 90 ஆண்டுகள் கழித்து இன்று நல்லி சில்க்ஸ் என்பது பட்டுச் சேலைகளின் மிகப்பெரிய பிராண்டாக விளங்குகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக 32 கடைகள் உள்ளன (pattu saree) . 2012ல் தங்க நகை விற்பனையிலும் அவர்கள் கால்பதித்துள்ளனர். நல்லி என்றாலே திருமணப் புடவைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதற்கான இடமாக விளங்குகிறது. 

  Address

  No.9, Nageswaran Road,
  Thiyagaraya Nagar - Chennai - 600017. 


  Phone : +91-44-24344115, 42604567 

  ஆன்லைனில் பட்டு புடவைகள் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

  instagram

  குமரன் சில்க்ஸ்

  சென்னை தி.நகரின் பரபரப்பான சாலைகளில் 75 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருக்கும் குமரன் சில்க்ஸ் உள்ளே நுழைந்தால், தி.நகரின் அத்தனை பரபரப்பும் இரைச்சலும் அடங்கி ஒரு புராதன தலத்துக்குள் நுழைந்ததுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.1955-ல் தொடங்கிய குமரன் சில்க்ஸின் கதை ஒவ்வொரு நாளும் பட்டு போல மின்னிக்கொண்டிருக்கிறது. பட்டுப் புடவைகள் ஏற்கெனவே இருக்கிற டிசைன், வண்ணங்கள், நூற்பு முறை ஆகியவற்றை மட்டுமே பின்பற்றி கொண்டிருக்காமல் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளையும் குமரன் சில்க்ஸ் தொடர்ந்து எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தங்கப்பட்டுப் புடவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

  Address

  No. 12 Nageswaran Road Opp, 
  Panagal Park, T. Nagar, 
  Chennai  - 600017

  Phone : 91 44 24348844

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

  kumaran silks

  ஆர்எம்கேவி சில்க்ஸ்

  கடந்த 89 ஆண்டுகளாக பட்டு சேலை தயாரிப்பில் ஆர்எம்கேவி ஈடுபட்டு வருகிறது. பட்டுத்துறையில்  பல சாதனைகள் படைத்து வரும் ஆர்எம்கேவி இலகுவாக நெசவு செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய நுமாட்டிக் கைத்தறியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் நெசவாளர்களின் உடல் உழைப்பைக் குறைக்க முடியும்.இந்த முறையை பயன்படுத்தி பழைய அட்டை முறையை தவிர்த்து எண்ணற்ற புதிய டிசைன்களையும், துரித பட்டு சேலை உற்பத்தியையும் உருவாக்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பல புதிய டிசைன்களில் பட்டு சேலைகளை வழங்கி வருகிறது. 

  Address

  1. RmKV Silks Pvt Ltd, no. 125-127, Usman Road,
  Panagal Park, T.Nagar,
  Chennai-600017.

  Phone: 044 28144445

  2. RmKV Silks Pvt. Ltd
  S 55-58, 2nd Floor, Phoenix
  Market City,
  142, Velachery Main Road,
  Velachery, Chennai-600042.

  Phone: 044-66513500/3501

  3. RmKV Silks Pvt. Ltd
  Unit No.215, 2nd Floor,
  Forum Vijaya Mall,
  183, Arcot Road, VadapalaniChennai-600026.

  Phone: 044-66528500/501

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

  rmkv

  சென்னை சில்க்ஸ்

  திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்குத் தியாகராய நகரில் கிளை உள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரேதம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களிலும் தங்களது கடைகளைச் சென்னை சிக்ஸ் நிறுவனம் நிறுவியுள்ளது. நவீன காலத்துக்கேற்ப பட்டு தயாரிப்பில் புதுபுது உத்திகளை கையாண்டு, வர்ணஜாலம், 50,000 கலர் சேலை, லினோ லைட் சேலை, ஹம்சவர்ணா, லினோ வர்ணா, ஜாடு கலம்கரி போன்ற சேலைகளை வெளியிட்டிருக்கிறது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சொந்தமாக பட்டு நெசவுக் கூடங்கள் வைத்து நடத்தி வருகிறார்கள். இதனால் எண்ணற்ற டிசைன்களில் இங்கு பட்டு சேலைகள் கிடைக்கின்றன. காஞ்சி டிரான்ஸ்பரன்ட் சில்க், பைரவி சில்க், விபாஞ்சி சில்க் உள்ளிவை புதிய வரவுகளாக உள்ளது. 

  மேலும் படிக்க - மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லி மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்!

  Address

  1. No. 55, Usman Road, 
  T.Nagar, Chennai - 600017.

  2. No. 137, Tambaram Main Road,
  Near Velachery Railway Station,
  Velachery, Chennai,  - 600 042. 

  Phone : +91 9994811711, +91 04212242888

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

  twitter

  எஸ்.எம் சில்க்ஸ்

  காஞ்சிபுரம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டுச் சேலைகள் தான். மிகவும் பிரபலமான இந்த சேலைகள் தமிழ்நாட்டில் உள்ள பெண்களை மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பெண்களையும் கவர்ந்துள்ளது. இத்தகைய பட்டு சேலைகள் (pattu saree) தொகுப்பை ஒரே இடத்தில் வாங்க விரும்பினால் சென்னை டி.நகரில் உள்ள காஞ்சிபுரம் எஸ்.எம் சில்க்ஸ் சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு உள்ள புடவைகள் உயர்தரப் பட்டு நூல் மட்டுமின்றி, மற்ற பட்டுப் புடவைகளை விட நிறங்களும் மிகவும் அருமையாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பும் வகையிலான புடவைகள் இங்கு கிடைக்கின்றன. 

  Address

  Nageswaran Salai, Panagal Park, T.Nagar
  Chennai - 600017

  Phone : 044 2435 6890

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

  sm silks

  சென்னையில் பட்டு சேலை வாங்க சிறந்த கடைகள் (Best shop to buy pattu saree in chennai)

  சென்னையில் பட்டு சேலை வாங்க எண்ணற்ற கடைகள் இருந்ததாலும், சில குறிப்பிட்ட பட்டு புடவை கடைகள் தரமான புடவைகளை விற்பனை செய்கின்றன. அவை குறித்து விரிவாக பார்ப்போம்.

  போத்தீஸ் சில்க்ஸ்

  1923 கே.வி. பொதி மூப்பனார்  என்கிற பெயரில் இந்த கடை தொடங்கப்பட்டது. முதன் முதலாக  சொந்தமான தறியிலே உற்பத்தி செய்து கார்டன் சேலை, வேட்டிகளை விற்பனை செய்ய ஆரமித்தார்கள். இதன் பிறகு  “போத்தீஸ்” என பெயர் மாற்றம் செய்து அனைத்து வகையான துணி ரகங்களையும் விற்பனை செய்ய தொடங்கினர். இந்த அதிரடி மாற்றத்திற்குப் பிறகு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு வகைகள் மற்றும் டிசைங்களிலான பட்டு புடவைகள் இங்கு கிடைக்கின்றன. இவர்களின் சொந்த தயாரிப்பு என்பது தான் வேறு எந்த நிறுவன துணி கடைகளுக்கு இல்லாத சிறப்பு அம்சம். மேலும் மணமகள், மகன் புகைப்படம் கொண்ட பெயர்களை சேலையின் முந்தானையில் பிரிண்ட் பண்ணி தருகிறார்கள். இந்த மாதிரி விற்பனையின் மூலம் பெஸ்ட் பிரைடல் விருது வாங்கியிருக்கிறார்கள்.

  Address

  No.15, Nageswara Rao Road, 
  Opp, Duraiswamy Subway, 
  T. Nagar, Chennai - 600017

  Address : 044 4396 6333. 

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

  twitter

  துளசி சில்க்ஸ்

  சென்னை, மைலாப்பூரில் உள்ள துளசி சில்க்ஸ் குறைந்த விலையில் நல்ல தரமான பட்டு புடவைகளை வழங்குகிறது. இங்கு புத்தம் புதிய டிரெண்டிங்கான  செட்டிநாடு காட்டன், இண்டோ காட்டன், காட்டன் பிரின்டட், பேன்ஸி பூனம் போன்றவை அதிரடி தள்ளுபடியில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும் ரினா பூனம், ரிச்சி சில்க், செமி கிரேப் புடவை, காதி சில்க், கிமாயா பூனம், வியக்க வைக்கும் விலையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. டிரெண்டிங் புடவைகளான மால்குடி, லிச்சி எம்பாஸ், சனா சில்க், டர்க்கி ஜர்கார்ட், டஸ்ஸர் ஜர்கார்ட், குறைந்த விலையில் இதுவரை இல்லாத  தள்ளுபடி விலையில் இங்கு கிடைக்கின்றன.

  மேலும் படிக்க - காதலில் தோல்வியடைந்த மனதுக்கு ஆறுதலளிக்க பொன்மொழிகள்

  Address

  No. 68, Luz Church Rd,
  Kapali Thottam, Mylapore, 
  Chennai - 600004

  Phone: +91 44 24991086 / 87

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

  twitter

  ஸ்ரீனிவாஸ் சில்க்ஸ்

  ஸ்ரீனிவாஸ் சில்க்ஸ் தி. நகர் பாண்டி பஜார் பகுதியில் உள்ளது. இங்கு வடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஞ்சி பட்டு, பனாரஸ் பட்டு, சில்க் காட்டன், பங்காளி காட்டன், தாக்கைச் சேலை, பசப்பள்ளி சேலை எனப் பல வகையான சேலைகள் கிடைக்கின்றன.  சிற்பக்கலையை போலவே தமிழர்கள் கைத்தறி நெசவுத் தொழிலிளும் சிறந்து விளங்குவதற்கு சான்றாக இருப்பது திருபுவனம் பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி பட்டு சேலைகள் தான். இந்த சேலைகளை மொத்தமாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. 

  Address

  No. 4, Ramakrishna Mutt Rd,
  Venkatesa Agraharam, Mylapore, 
  Chennai - 600004. 

  Phone : 044 2464 3566

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

  srinivas silks

  சுந்தரி சில்க்ஸ்

  சென்னை தி.நகரில் எண்ணற்ற ஜவுளி நிறுவனங்கள் இருந்தபோதும், தனக்கன பிரத்யேக வாடிக்கையாளர்களுடன் தனி சிறப்புடன் விளங்கும் நிறுவனம் சுந்தரி சில்க்ஸ். எங்கும் காணப்படாத பிரத்யேக டிசைன்களும், அதன் தரமும் தான் இதற்கு முக்கிய காரணம் இங்கு விற்கப்படும் ரகங்கள், டிசைன்கள் அனைத்தும் இக்குடும்பத்தினரே உருவாக்குபவை. காஞ்சிபுரம், போட்லா, பனாரஸ், டசர், போச்சம்பள்ளி, லினன், சில்க் 9 யார்ட்ஸ் சாரீஸ், காத்வால், உப்படா, கிரேப், ஜார்ஜட், ரா சில்க், மைசூர் சில்க், மகேஸ்வரி சாரீஸ், எம்ராய்டரி, சிபான், ஜூட், கலம்காரி, கோரா, பிரிட்டட் சாரீஸ், சாப்ட் சிலக், பைலூ, பிரைடல் சாரீஸ் உள்ளிட்ட பல்வேறு ரக புடவைகள் விற்பனையாகிறது.

  Address

  36, N Usman Rd, Postal Colony,
  Parthasarathi Puram, T. Nagar,
  Chennai - 600 017. 

  Phone : +91 44 2814 9999 / +91 44 2814 3093

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

   

  twitter

  சாரங்கி சில்க்ஸ்

  சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள சாரங்கி சில்க்ஸ் கடையில் பல்வேறு வண்ணங்களில் பட்டு புடவைகள் கிடைக்கின்றன. மேலும் பரம்பரா பட்டு, சாமுத்ரிகா பட்டு மாயப்புடவை, த்ரீ டி புடவை, டெனிம் பட்டு, ஜோடிப்பட்டு என்று புதுவரவுகள் பட்டுச்சந்தையை வண்ணமயமாக்குகின்றன. மாயப்புடவை அணிந்துகொண்டு வெயிலில் சென்றால் புடவை வித்தியாசமான வண்ண நிறம் கொன்டதாகத் தெரியும். வீட்டுற்குள் வந்தால் அல்லது நிழலுக்கு வந்தால் அந்த வண்ணம் மாறித் தெரியும். இந்த மாயப்புடவைகள் ரூ.4,500லிருந்து ரூ.7,500 வரையிலான விலைகளில் கிடைக்கிறது. இது தவிர அனைத்து விதமான காஞ்சி பட்டு புடவைகளும் இங்கு கிடைக்கின்றன. 

  Address

  Sarangi – the Kanjivaram sari store,, 
  No. 138, Luz Church Road,
  Mylapore, Chennai - 600004.

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

   

  sarangi silks

  பாலம் சில்க்ஸ்

  பாலம் சில்க்ஸ்சில் வடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் அனைத்து வகையான பட்டு ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஹம்சவர்ணா பட்டு, வசுந்தரா பட்டு உள்ளிட்டவைகள் எண்ணற்ற வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக இங்கு விவாகா எக்ஸ்க்ளூசிவ் ப்ரைடல் பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புடவையில் சுத்தமான தங்கம், வெள்ளி கலவையில் உள்ள ஜரிகை பார்ப்பதற்கே தகதகவென மின்னுகிறது.  உடுத்தித் தேய்த்தபின் பழைய விலைக்குப் போட்டால், கிடைக்கும் தங்கத்துக்கும் வெள்ளிக்கும் அன்றைய விலை என்னவோ அதைத் தருவதாகச் சொல்கிறார்கள்.  

  மேலும் படிக்க - சென்னையில் சிறந்த திருமண மண்டபங்கள் தேடுபவருக்கு ..

  Address

  No. 115, 1st floor, Pondy Bazaar, 
  Opp. Hotel Saravana Bhavan, T.Nagar, 
  Chennai - 600017. 

  Phone : 044-24661315

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

  twitter

  லட்சுமி சில்க்ஸ்

  லட்சுமி சில்க்ஸ் பட்டு புடவைகள் கடையில் நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரியே தரமான பட்டுப் புடவைகள் கிடைக்கின்றன. அனைத்து வகையிலான பட்டு புடவைகளும் விரும்பும் நிறத்தில் வாங்க இந்த கடை சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் ‘மாம்  அண்ட் டாட்டர் கான்செப்ட்’ உடைகளை ஒரே பட்டுப்புடவையில், அம்மா-பொண்ணு இருவருக்கும் ஒரே மாதிரி வடிவமைத்து தருகின்றன. அதாவது பட்டுப் புடவையை இப்போதைய டிரெண்டிற்கு ஏற்ப மிகவும் புதிதாக வடிவமைத்து, அனார்கலி, லெகெங்கா, ஷார்ட் மற்றும் லாங் குர்தா, லாங் கவுன் போன்றவைகளாக மாற்றி  ரொம்பவே நவீனமாக்கி விற்பனை செய்யப்படுகிறது. பட்டுச் சேலையில் இருக்கும் பள்ளு, பார்டர், பட்டுச் சேலைக்காக ஜாக்கெட் என அனைத்தும் இங்கு கிடைக்கிறது. 

  Address

  No. 18 SEETHAMMAL ROAD, 
  ALWARPET, CHENNAI – 600018.

  Phone : +91 44 45032222

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

  lakshmi silks

  ஹயாங்ரிவாஸ் சில்க்ஸ் ஹவுஸ்

  ஹயாங்ரிவாஸ் சில்க்ஸ் ஹவுஸ் தி. நகரில் அமைந்துள்ளது. இங்கு ஜெய்ப்பூர் காட்டன், பனாரஸ், கோட்டா உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற ரகங்களும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்களுக்கு என பிரத்யேக செக்சனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தினர் 8 தலைமுறைகளாக ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். வாடிக்கையாளர்களின் திருப்தி, மன நிறைவை குறிக்கோளாக கொண்டு இந்த நிறுவனம் நடத்தப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த கடைக்கு அருகிலேயே கூடுதல் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

  Address

  No.153, Gopathi Narayanaswami Chetty Rd, 
  Next to Citi Bank ATM, Parthasarathi Puram, 
  T. Nagar, Chennai -  600017. 

  Phone : 098407 58494

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

  instagram

  கே.பி.எஸ் பட்டு புடவைகள்

  கே.பி.எஸ் பட்டு புடவைகள் கடையில் காஞ்சிபுரம் புடைவைகள் மட்டுமின்றி பைத்தானி பட்டு புடவைகளும் கிடைக்கிறது. இந்தியாவின் விலை உயர்ந்த பட்டு மற்றும் கைத்தறிப் பட்டுப்புடவைகள் வரிசையில் தமிழகத்தின் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு இணையாக மதிக்கப்படக் கூடிய வகையில் இருப்பவை ’மகாராஷ்டிரத்தின் பைத்தானி’ கைத்தறிப் பட்டுப்புடவைகள் உள்ளன. இந்த கடையில் விற்பனை செய்யப்படும் புடவைகள் அனைத்தும் இவர்களாலே நெய்யப்படுகிறது. சொந்தமாக தறி வைத்து பட்டு புடவைகள் நேயப்படுவதால் எண்ணற்ற டிசைன்களில் புடவைகள் கிடைக்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர தள்ளுபடி விற்பனையை வழங்குவது வாடிக்கையாகும்.

  Address

  No.1, 1st Main Rd, 
  Royala Nagar, Ramapuram, 
  Chennai - 600089. 

  Phone : 088079 95600

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

  KPS silks

  ஆவரனா சில்க்ஸ்

  ஆவரனா சில்க்ஸ்சில் காஞ்சிபுரம் பட்டு, காட்டன் பட்டு, பட்டோலா பட்டு, பனாரஸ் பட்டு, ஆர்ட் பட்டு, சாடின் பட்டு, டஸ்ஸர் பட்டு, பாகல்புரி பட்டு, கோட்டா  பட்டு, பலுசாரி பட்டு, மைசூர் பட்டு, சந்தேரி பட்டு, தான்சோய் பட்டு, ஆர்கான்ஸா பட்டு, ரா பட்டு உள்ளிட்ட அனைத்து வகையிலான புடவைகளும் கிடைக்கும். மூன்று தலைமுறைக்கு முந்தைய பெண்கள் கட்டிய 9 கஜம் கொண்ட பட்டுப் புடவைகளும் இங்கு கிடைக்கிறது. பழைய பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனும், அந்த கால கைத்தறி நெசவாளர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான பட்டு புடவைகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. 

  Address

  No. 27/14, C. V Raman Road, 
  Alwarpet, 
  Chennai - 600018. 

  Phone : 044 2498 8292

  ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

  avaranaa

   

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!