logo
ADVERTISEMENT
home / Dating
உங்களுடையது ‘ஒருதலைக்காதல்’ என்பதற்கான ‘முக்கிய’ அறிகுறிகள் இதுதான்!

உங்களுடையது ‘ஒருதலைக்காதல்’ என்பதற்கான ‘முக்கிய’ அறிகுறிகள் இதுதான்!

காதல், பிரேக்கப் போல ஒருதலைக்காதலும்(One Sided Love) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காதலிக்காத மாணவி மீது ஆசிட் வீச்சு தொடங்கி மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர், கொலையில் முடிந்த ஒருதலைக்காதல்(One Sided Love) என நாள்தோறும் ஒருதலைக்காதல்(One Sided Love) குறித்த கோரமான செய்திகளைப் பார்த்து உச்சுக்கொட்டும் சூழ்நிலையில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் இருந்தது. ஹீரோ,ஹீரோயினைக் காதலிக்க மற்றொரு ஹீரோயினும்,ஹீரோவைக் காதலிப்பார் அல்லது படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்து அவர்கள் இருவருமே ஹீரோயினைக் காதலிப்பார்கள்.

கடைசியில் தமிழ் சினிமா வழக்கப்படி அந்த ஹீரோ அல்லது ஹீரோயின் தன்னுடைய காதலை விட்டுக்கொடுத்து எங்கிருந்தாலும் நல்லபடியாக வாழ்க என கண்களில் நீருடன் ஹீரோ-ஹீரோயினை வாழ்த்துவார்கள். அப்படி இல்லையெனில் படத்தின் கதைப்படி அவர்கள் இறந்து போய் ஹீரோ, ஹீரோயினை சேர்த்து வைப்பார்கள். இதுபோன்ற செண்டிமெண்ட் காட்சிகளை வைப்பதற்கென்றே படம் எடுப்பார்களோ என்று கூட சிறிதுகாலம் எனக்கு சந்தேகம் இருந்தது. கால ஓட்டத்தில் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடும் எண்ணிக்கை குறைந்தது போல இதுபோன்ற முக்கோணக் காதல் கதைகள் குறைந்து, தற்போது வெகு அபூர்வம் என்றாகி விட்டது.

எதற்காக இவ்வளவு பெரிய பில்டப் என கேட்கிறீர்களா? இங்கே நாம் பார்க்கப்போவது ஒருதலைக்காதல் குறித்து தான். தனது மனதுக்குப் பிடித்த பெண்/பையன் நமக்காக செய்யும் செயல்களைப் பார்த்து அவர் நம்மைக் காதலிக்கிறார் என மனதார நம்பிக்கொண்டு இருப்போம். ஆனால் திடீரென அவர்கள் திருமணப் பத்திரிகையை கொண்டுவந்து நீட்டுவார்கள் அல்லது தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாக கூறுவார்கள். அதுபோன்ற சூழ்நிலைகள் வரும்போது என்னடா வாழ்க்கை இது? என மனது வலிக்கும். ஆனால் ஆரம்பத்திலேயே ஒருசில அறிகுறிகளை வைத்து அது ஒருதலைக்காதல்(One Sided Love) என்பதை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால்? கேட்கவே நன்றாக இருக்கிறதா? அது என்னென்ன அறிகுறிகள்(Signs) என்பதை இங்கே படித்துப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

1.மணிக்கணக்கில்

நீங்கள் அவருக்கு உதவி செய்வதற்காக ஏராளமான நேரங்களை அவருடன் செலவு செய்திருக்கலாம். அவர்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பரிசுப்பொருட்கள் வாங்கிட அல்லது அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கிட என மணிக்கணக்காக அவர்களுடன் உங்களது நேரத்தை செலவு செய்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வரும்போதோ, அவர்கள் உதவி உங்களுக்குத் தேவைப்படும் போதோ அவர்கள் உங்களுடன் நேரம் செலவு செய்திட தயாராக இருக்க மாட்டார்கள். ஒரு 5 நிமிடம் கூட தன்னால் ஒதுக்க முடியாது நான் அவ்வளவு பிஸியாக இருக்கிறேன் என கூறுவார்கள்.

2.தங்கள் வசதிக்கேற்ப

ADVERTISEMENT

நீங்கள் அவருக்கு கால் செய்திருந்தாலோ அல்லது மெசேஜ் அனுப்பி இருந்தாலோ அவற்றைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்(He) ஆன்லைனில் இருந்தாலும் கூட உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார். இதுகுறித்து நீங்கள் ஏதாவது கேள்வி எழுப்பினால் நீங்கள் அனுப்பிய மெசேஜ் தனக்கு வரவில்லை அல்லது உங்களது சாட் தனக்கு காட்டவில்லை என ஏதாவது சாக்குபோக்கு தெரிவிப்பார்.

3. உங்கள் கருத்தை

உங்களது சொந்த வாழ்வில் பிரச்சினைகள் வரும்போது நீங்கள் அவரது ஆலோசனை, கருத்துக்களை மதிப்பீர்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது அல்லது ஆலோசனை தேவைப்படும்போது உங்களது கருத்துக்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். இது அடிக்கடி நடைபெறுமானால் அவர்கள் உங்களை உங்கள் கருத்துக்களை மதிக்கவில்லை என அர்த்தம்.

4. சுலபமாக உங்களை

ADVERTISEMENT

காரணம் எதுவும் இல்லையென்றாலும் கூட அவர்கள் உங்களை வெகு சுலபமாக எரிச்சலூட்டி விடுவார்கள். அவர்கள் எதற்காக உங்களிடம் கோபப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று எதையாவது சொல்லி அவர்கள் உங்கள் மூடினை வெகு எளிதாக மாற்றி விடுவார்கள்.

5. மன்னிப்பு

அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்தால் அந்த ஆத்திரத்தை அவர்(He) உங்கள் மீது காட்டலாம். இல்லை எனில் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் காலை கட் செய்துவிட்டு அவர்கள் வேறு ஒருவருடன் பேசலாம். ஆனால் இவை அனைத்தையும் நீங்கள் சொல்லாமலேயே புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுவார்கள். நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களைக் குற்றவாளியாக மாற்றி தங்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.

ADVERTISEMENT

6. நண்பர்களுக்கு முக்கியத்துவம்

நீங்கள் இருவரும் சேர்ந்து வெளியில் செல்வதற்கு திட்டமிட்டிருந்தால் அவர்(He) மிகவும் பிஸியாக இருப்பதாக சொல்வார்கள். இதனால் உங்கள் திட்டத்தை நீங்கள் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியது இருக்கும். ஆனால் அவர்(He) தனது நண்பர்கள் அழைத்தால் ஷெட்யூல்களை தள்ளிவைத்துவிட்டு அவர்களுடன் வெளியில் செல்வார்.

7. அவருக்காக நீங்கள்

உங்கள் அவரோ/அவளோ இவ்வாறு நடந்து கொள்வது குறித்து உங்கள் நண்பர்கள் அல்லது பெற்றோர்கள் கேள்வி எழுப்பினால் அவருக்காக நீங்கள் எதையாவது கூறி சமாளிக்க வேண்டியது இருக்கும். அவருக்கு வேலை அதிகம் அல்லது அவள் மிகவும் பிஸியாக இருக்கிறாள் என நீங்கள் பொய் சொல்ல வேண்டியது இருக்கும்.

ADVERTISEMENT

8. குறைந்த முக்கியத்துவம்

உங்கள் நண்பர்கள் தங்கள் காதலன்/காதலி குறித்து பேசும்போது அவர்கள் முதன்முதலில் சந்தித்தது தொடங்கி எங்கே வேலை பார்க்கிறார்? என்ன செய்கிறார்? போன்ற முழு தகவலையும் தெரிந்து வைத்திருப்பது குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் உங்களுக்கு உங்கள் அவர்(He)/அவள் குறித்து முழுமையாக எதுவும் தெரிந்திருக்காது.

9.நீங்கள் சொல்ல

ADVERTISEMENT

நீங்கள் அவரிடம் சொல்ல விரும்பும் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும். நீங்கள் குழந்தைத்தனமாக பேசுவதை அவர்கள் போரடிப்பதாக சொல்லும்போது அல்லது சலித்துக்கொள்ளும் போது உங்கள் இதயத்தில் இருந்து நீங்கள் பேசுவது குறையும். உங்கள் உணர்ச்சிகளை அவர்முன் வெளிக்காட்ட முடியாத சூழ்நிலை மற்றும் நீங்கள் உண்மையாக அவர்முன் நடந்து கொள்ளாமல் நடிக்க வேண்டியது இருக்கும்.

10.உறவு சிக்கல்கள்

இந்த உலகம் குறித்து முக்கியம் இல்லாத விஷயங்களைப்பற்றி மணிக்கணக்கில் விவாதிப்பார்கள். ஆனால் உங்கள் உறவு குறித்து நீங்கள் பேச முயற்சி செய்யும்போது அதுகுறித்து பேச அக்கறை காட்ட மாட்டார்கள். அவர்களின் இலகுத்தன்மை திடீரென மாறிவிடும். ஒன்று என்ன சொல்வது என்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் சொல்ல விரும்பும் விஷயம் முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக உங்களுக்குத் தோன்றலாம்.

11.எதிர்காலம்

ADVERTISEMENT

அவர்(He) தங்கள் எதிர்கால் வாழ்வு குறித்து, லட்சியங்கள் குறித்து உங்களிடம் பேசுவார்கள். ஆனால் அவரின் எதிர்காலத் திட்டங்கள் எதிலும் நீங்கள் இருக்க மாட்டீர்கள். திருமணம், நீண்ட கால பயணம் குறித்து பேசும்போது உங்களை அதில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

12.பரிசுகள்

அவரிடமிருந்து பரிசுகள், பூங்கொத்துகள் போன்றவை அடிக்கடி உங்களுக்கு வரவில்லை என்றால் அது ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் உங்களுக்காக அவர் ஒரு சின்ன மெசேஜ் அனுப்பக்கூட நேரமின்றி இருந்தாலோ அல்லது உங்களைப்பற்றி ஒரு சின்ன காம்ப்ளிமெண்ட் கூட எப்போதும் அளிக்கவில்லை என்றால் நீங்கள் அதைப்பற்றி யோசிக்க வேண்டாம்.

ADVERTISEMENT

13. குறைகள்

நீங்கள் அவரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புவீர்கள். ஆனால் அவர் எப்போதும் உங்கள் குறைகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் உங்கள் நேரத்துக்கும்,எனர்ஜிக்கும் அவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்பதை உணருங்கள்.

14. உங்களைப் பாதுகாக்க

எந்தவொரு உறவிலும் அதிக பாதுகாப்பு, பொறாமை போன்றவை அந்த உறவையே குலைத்து விடக்கூடும். ஆனால் உங்கள் மீது சிறிதளவு கூட அவர் அக்கறை காட்டவில்லை என்றால் அதுகுறித்து நீங்கள் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

ADVERTISEMENT

15. செயல்கள்

அவர் பேசுவதற்கும் அவருடைய செயல்களுக்கும் சற்றும் பொருந்தாமல் இருக்கிறதா? என்று பாருங்கள். ஐ லவ் யூ என்று அவர் சாதாரணமாக கூறுகிறார், ஆனால் அவரது செயல்களில் அது எதிரொலிக்கவில்லை என்றால் அது அர்த்தமற்றது. ஒரு நல்ல உறவில் வார்த்தைகள் குறைவாகவும், செயல்கள் அதிகமாகவும் இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

16. தீவிரமாக

அவரின் கடந்த காலத்தில் என்ன நடந்தது? உறவுகளை அவர் எப்படிக் கையாண்டார்? என்பது உங்களுக்குத் தேவையில்லை. ஆனால் அவர் உண்மையிலேயே உங்களை விரும்பினால் உங்களுக்காக அவர் எதையும் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

17. பழைய காதல்

அவரது பழைய காதலியோ அல்லது அவளது பழைய காதலனோ மீண்டும் அவர்கள் வாழ்க்கையில் வரும்போது நீங்கள் அதுகுறித்து அதிகமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள். இல்லை அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றாலோ அமைதியாக இருந்து இதுகுறித்து சிந்தியுங்கள். இந்த உறவு உண்மையிலேயே உங்கள் வாழ்வில் மதிப்பு சேர்க்கிறதா? இல்லை உங்கள் ஆற்றலை வடிகட்டுகிறதா? என்பது குறித்து அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்.

18. உணர்வுரீதியாக

ADVERTISEMENT

உங்களுக்கு சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படும்போது அல்லது உங்கள் உணர்ச்சிகரமான தருணங்களில் அவர் உங்களிடம் பரிவாக நடந்து கொள்ளவில்லை என்றால் அது சரியான உறவு அல்ல. உங்கள் கஷ்டகாலங்களில் உடனில்லாது உங்கள் மகிழ்ச்சிகரமான தருணங்களில் மட்டும் அவர் உங்களுடன் இருந்தால் அப்படியொரு உறவு உங்களுக்கு எந்தவிதத்திலும் மகிழ்ச்சி அளிக்காது என்பதை உணருங்கள்.

19. உங்களை மோசமாக

ஒரு நல்ல உறவு எப்போதும் உங்களிடம் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணர உதவி செய்யும். அப்படி இல்லாமல் அவர் எப்போதும் உங்களது மோசமான தருணங்களை வெளிக்கொணர்ந்தால் அது ஒரு நல்ல உறவு அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு மகிழ்ச்சியற்ற உறவு உங்களை மந்தமடைந்து உங்கள் துக்கத்தை வெளிக்கொணரும்.

ADVERTISEMENT

20. தனிமையை உணர்வீர்கள்

ஒரு உறவில் இருக்கும்போது நீங்கள் தனிமையை உணர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. என்ன நடந்தாலும் உங்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு பிணைப்பு, அவர் இருக்கிறார் என ஒரு ஆறுதலை நீங்கள் உணரவேண்டும். அப்படி இல்லாமல் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் எந்தவொரு ஆதரவும் உங்களுக்கு அவரிடமிருந்து கிடைக்கவில்லை எனில் நீங்கள் இந்த உறவை துண்டிப்பது குறித்து சிந்திப்பது அவசியம்.

பிரச்சினைகளை எப்படி சரிசெய்வது?

இதுபோன்ற அறிகுறிகள் உங்கள் காதலரிடம் இருக்கும் பட்சத்தில் முதலில் அதனைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். முதலில் அவரிடம் இதுகுறித்து பேச முயற்சி செய்யுங்கள். அது ஒரு வாதமாக இல்லாமல் உரையாடலாக இருக்கட்டும். உண்மைகளுக்கு பக்கத்தில் செல்லும்போது அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கக்கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இருவரும் பேசி இந்த பிரச்சினைகளை சரிசெய்ய முடியுமா? அவருக்கும் அதில் ஆர்வம் இருக்கிறதா? என்பதைப் பாருங்கள். இருவரும் அமர்ந்து பேசும்போது முடிந்தவரை உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். அமைதியாகவே உரையாடுங்கள்.

ADVERTISEMENT

தனது தவறுகளை அவர் உணரும்பட்சத்தில் அதனை சரிசெய்திட அவருக்கு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் காதல் அவருக்கு வேண்டும் என அவர் நினைத்தால் பொறுமையாக அமர்ந்து உங்கள் பிரச்சினைகளை காதுகொடுத்து கேட்பார். அப்படி அவர் நடந்து கொண்டால் நீங்களும் எந்த மாதிரியான விஷயங்கள் உங்களை அதிகம் பாதிக்கிறது? என்பதை எடுத்து சொல்லுங்கள். தனது தரப்பில் இருந்து அவர் ஏதாவது விளக்கம் அளித்தால் அதனைப் பொறுமையாக காது கொடுத்துக் கேளுங்கள். அது ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயமாக இருந்தால் அவரிடம் அதுகுறித்து பேசுங்கள். இல்லை நான் இப்படித்தான் என உங்களிடம் தீர்க்கமாகத் தெரிவித்தால் அதற்குப்பின் மேலே அதுகுறித்து பேசி ஒன்றும் செய்வதற்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒருவர் மட்டுமே இதுகுறித்த பிரச்சினைகளை சரிசெய்திட முடியாது என்பதை உணருங்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து தான் இதனை சரிசெய்திட முடியும். அவர் தன்னை மாற்றிக்கொள்ள முன்வந்தால் உங்கள் உறவு காப்பாற்றப்படும். தனது தவறுகளை அவர் உணர மறுக்கிறார், தன்னை மாற்றிக்கொள்ள அவர் முன்வரவில்லை என்றால் இந்த உறவு நீடித்தாலும் எந்த பயனும் இல்லை நீங்கள் திறம்படத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரேநாளில் நீங்கள் அனைத்து பிரச்சினைகளையும் அமர்ந்து சரிசெய்திட முடியாது என்பதை உணருங்கள். ஒவ்வொரு விஷயமாக பேசி இருவர் தரப்பில் இருந்தும் அதனைப் புரிந்து கொண்டு அடுத்த பிரச்சினைகளை பேசிட முன்வாருங்கள். ஒரே நேரத்தில் ஒரு பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அவரும் திணறி உங்களையும் திணறடித்து விடக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

எப்படி முற்றுப்புள்ளி வைப்பது?

ADVERTISEMENT

மேலே சொன்ன அறிகுறிகளை வைத்து நீங்கள் ஒருதலைக்காதலில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிந்து விட்டால், அதிலிருந்து எப்படி வெளியே வருவது? என்பதை இங்கே பார்க்கலாம்.

காதலில் ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுப்பது, அன்பு செலுத்துவது, விட்டுக்கொடுத்து செல்வது போன்றவை வேலைக்கு ஆகாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற ஒரு உறவில் இருந்து வெளியில் வந்ததற்காக உங்களை நீங்களே முதலில் பாராட்டிக் கொள்ளுங்கள். உங்களின் நிபந்தனையற்ற அன்புக்கு அவர் தகுதியானவர் அல்ல, உங்களை இழப்பதால் அவருக்குத்தான் நஷ்டம் என்பதை மனதில் பதியுங்கள். இதிலிருந்து மீண்டு வெளிவருவதற்கான வழிகளை ஆராயுங்கள். அவற்றை முதலில் பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள். இந்த விஷயங்களை மனதிலேயே போட்டு புதைத்துக் கொள்ளாமல் உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் என்ன நடந்தது? என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற விஷயங்களில் ஒருபோதும் கவுரவம் பார்க்காதீர்கள். இப்படி செய்வதால் உங்கள் மன இறுக்கம் தளரக்கூடும். மேலும் துக்கத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்போது அது பாதியாகக் குறையும் என்பதையும் உணர்வீர்கள். ஒரு உறவில் இருந்து நீங்கள் வெளியில் வந்து விட்டீர்கள் என்றால் அதுகுறித்து பேசவோ, சிந்திப்பதோ கூடாது. அதேபோல நண்பர்களாக பழகுவதும் இங்கே வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அவர் மொபைல் நம்பரை பிளாக் செய்வது, சமூக வலைதளங்களில் அவரது தொடர்பைத் துண்டிப்பது எந்த வழியிலும் அவரை மீண்டும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது ஆகியவை உங்களுக்கு அமைதியை அளிக்கக்கூடும்.

ADVERTISEMENT

குறிப்பாக அவர் செல்லும் இடங்களுக்கு போகாமல் இருப்பது, இருவரும் சேர்ந்து சென்ற இடங்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது மற்றும் இருவருக்கும்
பொதுவான நபர்களை சந்திப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். ஆரம்பத்தில் இது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் உங்களை
நீங்களே ஏமாற்றிக்கொண்டு ஒரு உறவில் இருப்பதை விட அதிலிருந்து வெளியே வருவது சிறந்தது என்பதை புரிந்து கொள்ளாமல். உங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவர் உங்கள் வாழ்க்கைத்துணையாக வருவார் என நம்பிக்கை வையுங்கள். ஏனெனில் உலகம் பரந்து விரிந்தது என்பதை மனதில் கொள்ளுங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

11 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT