இந்த 'அறிகுறிகள்' உங்கள் காதலரிடம் இருந்தால்.. யோசிக்காமல் 'பிரேக்கப்' செய்துவிடுங்கள்!

இந்த 'அறிகுறிகள்' உங்கள் காதலரிடம் இருந்தால்.. யோசிக்காமல் 'பிரேக்கப்' செய்துவிடுங்கள்!

நீங்கள் ஒருவர் மீது அன்பு வைத்து அவருக்காக எல்லாம் செய்யத் தயாராகும்போது அவர் உங்களைக் கண்டுகொள்ளவே இல்லை என்றால், உங்களது மனநிலை எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது அல்லவா. ஒருவேளை காதலிக்கும்போதோ அல்லது திருமணத்துக்கு முன்போ அவர் உங்கள் காதலுக்கு தகுதியானவர் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொண்டால்? கேட்கவே நன்றாக இருக்கிறது தானே. அது குறித்துத்தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம்.நீங்கள் காதலிக்கும் நபர் உங்களுக்குத் தகுதியானவர் தானா? அவர்(He) உங்களைக் காலம் முழுவதும் நன்றாக பார்த்துக்கொள்வாரா? போன்ற
கேள்விகளுக்கான பதிலை ஒருசில விஷயங்களை வைத்து நீங்கள் செக் செய்து கொள்ளலாம். இதேபோல உங்கள் வாழ்விலும் உங்கள் மனதுக்குப்
பிடித்த நபர் இருந்தால் அவரிடம் இந்த குறைகள் இருக்கிறதா என பாருங்கள். இதில் உள்ள அனைத்தும் அவருக்கு பர்பெக்ட்டாக பொருந்திப் போனால் அவரை மறந்து வேறொரு வாழ்க்கையை தேடிக்கொள்வது உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நல்லது!


திருமணத்துக்கு முன் சின்ன விஷயம் தானே என நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால், நாளை அது பூதாகரமாக உருவெடுத்து வாழும் காலம் முழுவதும் அது உங்கள் நிம்மதியை குலைத்து விடக்கூடும் என்பதை மனதில் கொண்டு முடிவெடுங்கள். ஏனெனில் வாழ்க்கை ஒருமுறைதான்!


மரியாதைக்குறைவு


உங்கள் காதலர் அல்லது நீங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகும் நபர் உங்கள் பெற்றோர் குறித்து தவறாகப் பேசுகிறார் என்றால் அது நல்ல
உறவுக்கான அறிகுறியல்ல. உங்கள் வாழ்வில் இருக்கும் நபர்களுக்கு அவர் சரியாக மரியாதை அளிக்கவில்லை, அவர்களைப் பற்றி மோசமான
கருத்துக்களை சொல்கிறார் என்றால் நாளை அது உங்கள் வாழ்விலும் அது எதிரொலிக்கக் கூடும். இதுபோன்ற நபரிடம் அன்பாக இருப்பது உங்கள்
எதிர்கால வாழ்க்கையை மோசமாக்கி விடக்கூடும்.உங்கள் விருப்பங்கள்


ஒரு உறவில் இருக்கும்போது கருத்து வேறுபாடு என்பது தவிர்க்க முடியாது தான். ஆனால் கருத்து வேறுபாட்டிற்கும் அவர் உங்கள் விருப்பங்களை
மதிக்காமல் இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது தொடரும் பட்சத்தில் நாளடைவில் உங்களால்
எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் உங்கள் சுயத்தை இழக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் சின்னச்சின்ன ஆசைகள், கனவுகள்
முளையிலேயே கிள்ளி எறியப்படக்கூடும்.பொது இடங்கள்


பொது இடங்களில் குரலை உயர்த்துவது, மற்றவர்கள் முன்னிலையில் உங்களை மரியாதைக்குறைவாக நடத்துவது போன்ற விஷயங்கள் உங்கள் காதலரிடம் இருந்தால், தயங்காமல் அந்த உறவுக்கு குட்பை சொல்லி விடுங்கள். உங்கள் மீது அவர் உண்மையிலேயே மரியாதை வைத்திருந்தால் தனியாக உங்களிடம் அதுகுறித்து விவாதிப்பார், இப்படி பொது இடங்களில் வைத்து கத்த மாட்டார்.


உங்களது வேலை


உங்களுடைய வேலையை விட தன்னுடைய வேலையை அவர் முக்கியத்துவமாகக் கருதுகிறார் என்றால், உங்களை விட தன்னுடைய வேலையை அவர் சிறந்ததாக நினைக்கிறார் என்று அர்த்தம். இது உங்கள் வேலை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் எதிரொலிக்கக் கூடும். நீங்கள் முன்னேறுவதற்கு அவர் எந்தவொரு உதவியையும் செய்ய மாட்டார். இதனால் இப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து சற்று விலகியே இருங்கள்.தகவல் தொடர்பு


இருவருமே வீடு, ஆபிஸ் என அவரவர் வேலைகளில் பிஸியாக இருக்கும்போது தினசரி பேசிக்கோள்வது, சேர்ந்து நேரம் செலவழிப்பது கஷ்டம் தான். அதேநேரம் வார நாட்களிலும் அவர் உங்களுடன் பேச சாக்குபோக்கு சொல்கிறார், இல்லை நண்பர்களுடன் பொழுதுகளைக் கழிக்கிறார் என்றால் அது ஆரோக்கியமான உறவுக்கான அறிகுறியல்ல. உங்கள் காதலரிடம் இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அதுகுறித்து சிந்தித்து முடிவெடுப்பது உங்கள் இருவருக்குமே நல்லது.


உங்களது வாழ்க்கை


நீங்கள் அணியும் உடை, நண்பர்களுடன் வெளியில் செல்வது, உங்கள் பழக்க வழக்கங்களை குறைசொல்வது போன்ற பழக்கங்கள் உங்கள் காதலரிடம் இருந்தால் அவர்(He) உங்களுக்கு ஏற்றவராக இருக்க முடியாது. உங்களை மதிப்பிட அவர் ஒன்றும் நீதுபதியல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.படுக்கையறை


அவர்(He) படுக்கையில் உங்களை சமமாக நடத்துகிறாரா? அவர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்கிறாரா? அவர்(He) உங்களை வசதியாக உணர வைக்கிறாரா? என்று பாருங்கள். இந்த கேள்விகளுக்கான அனைத்து பதில்களும் இல்லை என்று முடிந்தால் நீங்கள் சரியான நபருடன் உறவில் இல்லை என்று அர்த்தம். யோசிக்காமல் கதவை பட்டென அடித்து சாத்தி விடுங்கள்.


சிரத்தையின்மை


உங்கள் காதலர்(Lover) தனது நண்பர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதை தவிர்க்கிறாரா? நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அவர்(He) எந்த அக்கறையும் காட்டாமல் இருக்கிறாரா? என்று பாருங்கள். உங்களைப் பற்றிய விஷயங்களில் அவருக்கு அக்கறை இல்லாமல் இருந்தால் அவர் உங்கள் உறவை வேண்டாவெறுப்பாக தொடருகிறார் என்பதை உணருங்கள்.எதிர்காலம்


காதலின் ஆரம்ப நாட்களில் எதிர்காலம் குறித்து யாரும் பெரிதாக விவாதிக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் இருவரும் அதனை ஒருவருக்கு ஒருவர் உணர்ந்தவுடன் உங்கள் எதிர்காலம் குறித்துத் திட்டமிட வேண்டும். ஒருவேளை அவர்(He) எதிர்காலம் குறித்த பேச்சில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்றால், ஒருமுறைக்கு பலமுறை அதுகுறித்து பேசிப்பாருங்கள். ஒவ்வொரு முறையும் அவர் எதிர்காலம் குறித்த பேச்சை தட்டிக்கழித்தால் அவருடைய எதிர்காலம் குறித்து உங்களுடன் விவாதிக்க அவருக்கு விருப்பமில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதே நிலை தொடர்ந்தால் நீங்கள் பிரேக்கப் செய்துகொள்வது நல்லது. ஏனெனில் அஸ்திவாரம் இன்றி ஒரு கட்டடத்தை எழுப்புவது வீணான ஒரு விஷயமாகும்.


திருமணம்


திருமணம் குறித்து நீங்கள் பேசும்போது திருமணமும், காதலும் வேறுவேறு என்று அவர் கூறினாலோ அல்லது திருமணம் குறித்த பேச்சில் அவர் அக்கறை காட்டாமல் இருந்தாலோ திருமணம் வரை இந்த உறவை கொண்டுசெல்ல அவருக்கு விருப்பமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த உறவில் நீங்கள் மட்டும் நேர்மையாக இருந்து எந்தவொரு பயனும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.சில நேரங்களில்


மேலே சொன்ன அறிகுறிகள் உங்கள் காதலரிடம் இருந்தால் அமைதியாக இருந்து அவர்குறித்து யோசியுங்கள். அவர்(He) நடந்து கொள்ளும் விதம் குறித்து அலசி ஆராயுங்கள். அவர்(He) நடந்து கொள்ளும் முறை குறித்து அவரிடம் கலந்து பேசுங்கள். அவர் பேசும்போது கோபமாக அல்லது தற்காப்புக்காக பேசுகிறார் என்றால் அவருக்கு இதில் விருப்பமில்லை என்பதை உணருங்கள். உங்களுக்கு இந்த உறவு நீடிக்காது என தெரிந்தால் அவரை விட்டு விலகுவது தான் உங்கள் வாழ்விற்கு சரியானதாக இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.