logo
ADVERTISEMENT
home / அழகு
நித்யா மேனன் நமக்கு கற்பிக்கும் 5 அழகிய கர்லி ஹேர் ஸ்டைல்ஸ் ! குறிப்பு எடுங்கள்!

நித்யா மேனன் நமக்கு கற்பிக்கும் 5 அழகிய கர்லி ஹேர் ஸ்டைல்ஸ் ! குறிப்பு எடுங்கள்!

நேரான கூந்தல் உள்ளவர்கள், சுருட்டை முடி உள்ளவரிடம், ‘எனக்கும் உங்களைப்போல் சுருள் முடி இருக்க வேண்டும் என்று ஆசை’ என்று கூறுவார்கள். ஆனால், சுருட்டை முடியை பராமரிப்பது எவ்வளவு கடினம் என்று அவர்களுக்குத்தானே தெரியும்? மேலும் சுருட்டை முடி உள்ளவர்கள் நேரான முடி வேண்டும்  என்று ஸ்ட்ரெயிட்டனிங்(straightening) செய்து கொள்கிறார்கள். இயற்கையான முடியை மேலும் ஜீவனில்லாமல் ஆக்கிவிடும் இந்த ஸ்ட்ரெயிட்டனிங் முறை. 

ஒரு சிலர் தங்கள் சுருள் முடி நேராகத் தோன்ற இழுத்து வாரி, தங்கள் முகத்தில் உள்ள சருமமும் சேர்ந்து இழுத்தவாரு தோன்றுவார்கள். ஒரு சிலர் தலை முழுவதும் கிளிப்(clip)களால் நிறைத்து தங்கள் கூந்தலின் சுருளை மறைக்க முயற்சிப்பார்கள். தனக்கென தனி இடத்தைப்  பிடித்து போல்டான கதாபாத்திரங்களில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்த ‘ஓகே கண்மணி’ நித்யா மேனன் கூந்தல் நியாபகம் வருகிறதா? நித்யா மேனன் இயற்கையான தன் சுருள் கொண்ட கூந்தலை  இழுத்து வாரிக்கொள்ளலாமல், எளிதாக எப்படியெல்லாம் அலங்கரித்துள்ளார் (curly hair style tips) என்று பார்த்து நீங்களும் ஹேர்ஸ்டைல் செய்துகொள்ளுங்கள்.

1. ஃபிரீ ஹேர் ஸ்டைல் (free hair style)

கூந்தலை விரித்து விடுவதென்றாலே நேரான கூந்தலை வளைத்து அலைபோல மாற்றித்தானே ஸ்டைல் செய்கிறார்கள். இதோ பாருங்கள் நித்யா மேனன் பௌண்சியாக (bouncy) தன் சுருட்டை கூந்தலை அழகாக விரித்து எளிதாக ஒரு பாணியில் தோன்றுகிறார். எப்போதும் இயல்பாக தோன்ற அல்லது கிளம்புவதற்கு உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தால் இந்த ஹேர்ஸ்டைல் பின்பற்றலாம்.

2. ஹை ஹாப் போனி ஃபிரீ ஸ்டைல் (high half pony free style )

இந்தத் தோற்றதைப் பார்த்தால், நேரான கூந்தல் உள்ளவர்களும் சுருள் செய்து கொண்டு நித்யா போன்று தோன்ற ஆசைப்படுவார்கள். விரித்த கூந்தலில் முன்புறம் மட்டும் வாரி சிறிது முடியை எடுத்து, பின் உச்சியில்  கட்டி உள்ளார். எப்போதும் போல கூந்தலை வாருவதற்கு முரணாக இருக்கும் இந்த தோற்றம் ஸ்டைலாகவும் சூப்பராகவும் இருக்கிறது! நண்பர்களுடன் சேர்ந்து உலாவும்போது ஜாலியான தோற்றத்தைக் கொடுக்கும் ஒரு ஹேர்ஸ்டைல்.

ADVERTISEMENT

3. ஹேர் பேண்ட் ஸ்டைல் (hairband style)

அகலமான வர்ண ஹேர் பேண்ட் மட்டுமே அணிந்து, ஒரு கூல் ஸ்டைல் லுக் தந்திருக்கிறார். வாட் எ பியூட்டி? கடற்கரை, கேர்ள்ஸ் பார்ட்டி , பர்த்டே பார்ட்டி போன்ற இடங்களுக்கு அவுட்டிங் போகும் போது இந்த ஸ்டைல் உங்களுக்கு நன்றாகப் பொருந்தும். இதை எங்கு வாங்குவது என்று  யோசனையா? 

POPXo பரிந்துரைப்பது –   ஷீன் நோட் டெக்கர் ஹெடபான்ட் – (ரூ 144) , பெண்கள் பிங்க் & ப்ளூ செக்ட் ஆலிஸ் பேண்ட்  – எச் & எம் (ரூ 499) 



4. டாப் பன் ஹேர்ஸ்டைல்(top bun hairstyle)

உச்சியில் ஒரு கொண்டை போட்டுக் கொள்ளும் ஒரு அழகான நேர்த்தியான ஹேர் ஸ்டைல். காற்று அதிகம் உள்ள இடங்களுக்கு செல்கிறீர்கள், உங்கள் கூந்தல் அலைமோதி உங்களை சங்கடப்படுத்தாமல் இருக்க இந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளுங்கள்.இது சில நேரங்களில் உங்கள் அலுவலக உடைகளான பிளேஸர் ஆடைகளுக்கும் பொருந்தும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க – கட்டுக்கடங்காத வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் ஹேர் ஸ்ப்ரே, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

5. போனி ஹேர் ஸ்டைல் (pony hairstyle)

இடதுபுறம் வகுடெடுத்து, முன்புறம் உள்ள கூந்தலை பின்னி, போனி போட்டிருக்கிறார். ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. அலுவலகத்தில் நடக்கும் பார்ட்டி, சந்திப்புகளுக்கு ஏற்ற ஒரு லுக் இது.

இதை அலங்கரிக்க ஒரு கருப்பு நிற பிலோரால் அண்ட் ஸ்ட்ரிப்ட் லோங் டைல்  போனிடெயில் ஹோல்டர் (ரூ 321).  கூந்தலுக்கு இன்னும் அழகு சேர்ப்பது  அதற்கேற்ற அணிகலன்கள் தான் என்றது  நினைவில் இருக்கட்டும்! 

சுருட்டை முடியை எப்படி பராமரிப்பது?

சரி, இதுவரை எப்படி சுருட்டை முடியை நீங்கள் செல்லும் இடங்களுக்குத் தகுந்தவாறு அழகாக ஸ்டைல் செய்துகொள்வது என்று பார்த்தோம். இனி சுருட்டை முடியை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாமா?!

ADVERTISEMENT

1. கூந்தலை சீவுவது எப்படி

  • முதலில் கூந்தலின் நுனியில் உள்ள சிக்கல்களை சீவி நீக்கி விடுங்கள். பிறகு மேலிருந்து சிக்குகளை விளக்க முயற்சித்தால் அதிக கூந்தல் உதிர்வதைத் தடுக்கலாம். 
  • எப்போதும், கூந்தலை சீவ ப்ருஷ் பயன்படுத்தாதீர்கள்.
  • அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள். 

2. கூந்தல் நுனியை ட்ரிம் செய்யுங்கள்

சுரோக்யமான சுருட்டை முடி, பௌண்சியாகவும், புதிதாகவும் தோன்ற 6-8 வாரங்களுக்கு ஒரு முறை உங்கள் கூந்தல் நுனியை சிறிதளவு வெட்டி விடுங்கள். 

3. தேங்காய் எண்ணெய் மசாஜ்

  • சுருட்டை முடி இயற்கையாகவே வறண்டுதான்  இருக்கும். ஏன்னெனில், தலையில் இருந்து முடியின் நுனிவரை எண்ணெய்ப்  பசை செல்வதை, வளைந்த சுருள் முடி தடுக்கிறது.
  • அதனால், கூந்தல் வறண்டு காணப்படும்போது  உங்கள் விரல் நுனியால் தேங்காய் எண்ணெய்  பயன்படுத்தி நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

Instagram

4. பைன் ஆப்பிள் ஸ்டைல்

தூங்கும்போது உங்கள் முடி பிசங்கிவிடாமல் இருக்க, அண்ணாச்சிப் பழம் போல கூந்தலை மேலே தூக்கி கட்டிக் கொள்ளுங்கள். இது  உங்கள் கூந்தல் மடங்குவதை தவிர்க்கும். 

ADVERTISEMENT

5. தலைக்கு குளிப்பது

  • சுருட்டை முடி இயற்கையாகவே வறண்டு  இருக்கும் என்று பார்த்தோம் அல்லவா. அதனால், மிக ஆற்றல் வாய்ந்த ஷாம்ப்பூவை தவிர்த்து மைல்டு ஷாம்பூ(mild shampoo) பயன்படுத்துங்கள்.
  • அடிக்கடி தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம்.
  • குளித்ததும் தண்ணீர் சொட்டுவதை மட்டும் துண்டு கொண்டு லேசாக ஒற்றி எடுத்தால் போதுமானது. மிகவும் அழுத்தி துடைத்தீர்களானால், உங்கள் கூந்தல் பிரிஸ்ஸி(frizzy) ஆகி விடும். 
  • வறண்ட கூந்தலுக்கு பூத்துண்டு (turkey towel) பயன்படுத்துங்கள். சாதாரண துண்டு நன்றாக  நீரை உறுஞ்சி விடும். 

6. தவிர்க்க வேண்டியது

  • ஹேர் ஸ்பிரே(hair spray), ஹேர் ட்ரையர்(hair drier), ஹேர் ஸ்ட்ரெயிட்டனர்(hair straightener) போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். இவை உங்கள் கூந்தலை மேலும் மோசமடைய செய்து விடும்.
  • சல்ஃபேட், சிலிக்கான் போன்ற ரசாயனங்கள் இல்லாத பொருட்களை உங்கள் கூந்தலில் பயன்படுத்துங்கள். அவை உங்கள் கூந்தல் சுவாசிக்க இடம் இல்லாமல் ஆக்கி விடும்.

7. தலையணை

பட்டு அல்லது சிலிக்கான் துணியினால் தலையணைக்கு  உரை தைத்துப் பயன்படுத்துங்கள். அது உங்கள் கூந்தலை மென்மையான வைக்க உதவும்.

எளிதாக ஆரோக்கியமாக உங்கள் சுருட்டை முடியை பராமரித்து என்றும் உறுதியான, மினுமினுப்பான அழகிய அலை அலையான கூந்தலோடு மகிழுங்கள். 

 

மேலும் படிக்க – இரசாயனத்தால் அலெர்ஜியா? வெளியானது சாய் பல்லவியின் அழகிய கூந்தலின் இயற்கை முறை இரகசியங்கள்!

பட ஆதாரம்  – Instagram 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

15 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT