மேக்கப்பை விரும்பும் நபர்களுக்கு மழைக்காலம் என்பது கொஞ்சம் சங்கடமான காலமாகவே இருக்கும். இதற்கெனவே சில தனிப்பட்ட ப்ராடக்ட்கள் வந்துவிட்டதுதான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் கவனமாக நீங்கள் இருந்தால் மழைக்காலம் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் நீங்கள் அழகாக தெரிவீர்கள்.
மழைக்காலத்தில் (monsoon) சிலசமயம் மேக்கப் அழிந்து திட்டு திட்டாக காணப்படும். சில சமயம் நம் சருமம் குளிர்காலத்திற்கு ஏற்ப மேக்கப்களை உள்வாங்காமல் இருக்கலாம். திட்டு திட்டாக ஃபவுண்டேஷன் சொட்டு சொட்டாக வழியும் ஐ லைனர் இதையெல்லாம் தவிர்க்க சில முக்கிய ரகசிய குறிப்புகள் உங்களுக்காக.
உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டி !
மாய்ச்சுரைஸ்
மாய்ச்சுரைஸ் என்பது மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய ஒன்று அல்ல. காற்றில் ஈரப்பதம் இருந்தாலும் மழை நேரங்களில் நம் சருமம் வெகு சீக்கிரமே உலர்ந்து விடும். உங்கள் கைவசம் எப்போதும் மாய்ச்சுரைஸர் வைத்திருப்பது உங்கள் முகத்தை உலர விடாமல் பாதுகாக்கும்.
பவுடர் பயன்படுத்துங்கள்
மழைக்கால நேரங்களில் க்ரீம் அடிப்படையான மேக்கப் பொருள்களை உபயோகிக்காமல் பவுடர் பொருள்களை உபயோகியுங்கள். அது மேட் (matte) எபெக்டை கொடுப்பதால் நீட் லுக் தரும். அதிகமான பவுண்டேஷன் அல்லது கன்சீலரை உபயோகிக்காதீர்கள். மழை நேரங்களில் பவுடர் அடிப்படையில் உள்ள மேக்கப் பொருள்கள் நீண்ட நேரத்திற்கு உங்கள் அழகை நிலை நிறுத்தும்.
லிப் டிண்ட் பயன்படுத்துங்கள்
உங்கள் உதட்டிற்கு அவசியமான லிப் டிண்ட் என்பது மேட் (matte) டிண்ட்கள் தான். பிங்க் அல்லது சாஃப்ட் ப்ரவுன் நிறங்கள் மழைக்காலத்திற்கு ஏற்றவை. அடர் நிறங்களை பயன்படுத்த வேண்டாம். இந்த மழை நேரத்தில் க்ளாஸ் (Gloss) லுக் தவிர்த்து மேட் (matte) லுக் கொடுங்கள்.
“கெட் தி லுக் : பார்ட்டி சீசன்களில்
பிரகாசமான தோற்றத்தை எவ்வாறு அடையலாம்?”
கண்கள்
பிரபலங்களுக்கு மேக்கப் போடும் நிபுணர்கள் கண்கள் பற்றிக் கூறுகையில் வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா மற்றும் ஐ லைனர் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். கண்களுக்கு ஐ லைனர் போடும் முன்பு கண்களை ஈரப்படுத்தி அதன் பின்னர் போட்டால் நன்றாக நிற்கும். மேட் (matte) லுக் வேண்டும் என விரும்புபவர்கள் காஜலை நன்கு கூர்மையாக்கி பயன்படுத்தலாம். ஒரு கருப்பு காஜல் அதன் மேல் ஒரு வெள்ளைக் காஜல் சேர்ந்து இரண்டு கோடுகள் பயன்படுத்தினால் கண்கள் ப்ரகாசமாகத் தெரியும்.
பிளஷர் மற்றும் ஐ ஷேடோக்கள்
மழை நேரங்களில் நீங்கள் பிளஷர் (blusher) மற்றும் ஐ ஷேடோக்கள் பயன்படுத்த விரும்பினால் அவற்றில் பவுடர் வடிவில் இருக்கும் ப்ராடக்ட்ளை தேர்வு செய்யுங்கள். க்ரீம் அடிப்படையிலான ப்ராடக்களை மழைக் காலத்தில் பயன்படுத்த வேண்டாம். ஐ ஷேடோக்கள் க்ரீமி பிங்க், லைட் ப்ரவுன், பேஸ்டல் கலர்கள் மற்றும் பீஜ் கலர் தேர்ந்தெடுப்பது நல்லது.
மேக்கப் என்பது உங்கள் அழகை இன்னும் பிரதானப்படுத்தி காட்டுவது என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். ஆகவே அது மிக அதிகமாகவும் இல்லாமல் மிகக் குறைவாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.