முகத்தின் அழகு எப்போதும் பெண்களுக்கு முக்கியமான ஒன்றுதான். அவர்களின் தன்னம்பிக்கை என்பது அவர்கள் முகத்தின் தெளிவில் இருந்துதான் வெளிப்படுகிறது. அந்த வகையில் முகத்தை மாசு மரு இல்லாமல் தெளிவான முகமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து அளித்து தேகத்தை மின்ன செய்வதில் ஆரஞ்சு பழம் (orange fruit) தனிப் பங்கு வகிக்கிறது. அதில் உள்ள சிட்ரஸ் மூலப் பொருள்கள் சருமத்தின் நச்சுக்களை நீக்குகிறது. அதனால் இருளடைந்த முகம் கூட சில நிமிடங்களில் பொலிவாக மாறுகிறது.
கரும்புள்ளிகளால் பொலிவிழந்த முகத்திற்கு கல் உப்பு வைத்தியம்.. செலவில்லாமல் அழகாகுங்கள் !
Pexels, pixabay, Youtube
ஆரஞ்சு பழத்தை (orange fruit juice) பிழிந்து அந்த ரசத்தை பிரீஸரில் வைத்து விடுங்கள். இது ஐஸ் கட்டியாக மாறிய பின்னர் ஒரு பருத்தி துணியால் கவர் செய்து கண்கள் மேல் ஒத்தடம் கொடுங்கள். இப்படி செய்வதால் கண்களில் உள்ள கருவளையங்கள் மறைவதுடன் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்.
ஆரஞ்சு தோலை நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெட்டி வேர், பூலாங்கிழங்கு, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா ஆகியவைகளை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனை பொடியாக்கி இந்தப் பொடியை தலையில் தேய்த்து குளிப்பதால் கூந்தல் ஆரோக்கியமாகவும் வாசனையாகவும் இருக்கும். இதனையே உடலுக்கும் பயன்படுத்தினால் மேலும் பொலிவான மாற்றம் கிடைக்கும்.
சாயிஷாவை போன்ற குறைபாடற்ற பிரகாசமான தோற்றத்தை பெற இந்த 5 முக்கிய படிகள் போதுமானவை!
Pexels, pixabay, Youtube
உடலில் கருமை படர்ந்த இடங்களில் எல்லாம் சிறிது ஆரஞ்சு தோல் பொடியுடன் வேப்பங்கொழுந்து பொடி மற்றும் கஸ்தூரி மஞ்சள் பொடியை சேர்த்துக் கலந்து கொண்டு தடவி வர கருமை படர்ந்த இடங்களின் நிறம் மாறி சரும நிறத்திற்கு வந்து விடும்.
ஆரஞ்சு தோலை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சந்தனம் மற்றும் முல்தானி மெட்டி பொடியை சம அளவில் சேருங்கள். உடன் கொஞ்சம் பயத்தம்பருப்பு பொடியும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நீங்கள் தயிருடன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவுங்கள்.
செவ்வாழைப் பழத்தின் சிறப்பான நன்மைகள் ! தினம் ஒரு செவ்வாழை பழம் தருமே பூரண உடல் நலம்!
Pexels, pixabay, Youtube
வாரம் ஒருமுறை இந்த பேக்கை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பேஷியல் செய்த பலனைப் பெறுவீர்கள். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன்கள் பெறலாம். இருளடைந்த முகம் கூட ஆரஞ்சு பழத்தால் பொலிவாகி மின்னும் மாயம் உணர்வீர்கள்.
உலர்ந்த ஆரஞ்சு தோல் 100gm, வெந்தயம் 100gm. பிஞ்சு கடுக்காய் 10gm, வால் மிளகு 10gm, பச்சை பயறு கால் கிலோ எல்லாவற்றையும் கலந்து அரைத்து தலையில் நன்றாகத் தேய்த்துக் குளித்து வந்தால், அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.
Pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!