செவ்வாழைப் பழம் என்பது உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் பொட்டாசிய சத்துக்களை தன்னுள்ளே அடக்கியது. பொதுவாக செவ்வாழைப் பழம் என்பது ஆண்களுக்கான சிறப்பு பழம் என்பதாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
ஆண்மை அதிகரிக்க செவ்வாழைப் பழம் (red banana) உதவுகிறது என்பது உண்மை. ஆனால் அதைத் தவிரவும் செவ்வாழைப் பழம் பல நோய்களுக்கு மருந்தாகிறது. அவை என்னென்ன நோய்கள் என்பது எப்படி செவ்வாழைப் பழம் அதனை குணப்படுத்துகிறது என்பதையும் பாப்போம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கடல் உணவுகள் : நாவூறும் ரெசிபிக்களை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்!
அஜீரணக் கோளாறு, வாயுத் தொந்தரவு இருப்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் நீங்கி பல நோய்களில் இருந்து விடுபட முடியும். மூல நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது செவ்வாழை (red banana). தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.
கண்பார்வைக் கோளாறுகளுக்கு அருமருந்தாக இருப்பது செவ்வாழை. 40 வயதிற்கு மேல் வரும் பார்வைக் குறைபாடை சரி செய்ய தினம் ஒரு செவ்வாழை பழம் என்கிற வகையில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிடலாம். மேலும் அதிக பலன்களுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள். கண்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகும்.
பெண்கள் தாம்பத்யத்தில் ஈடுபட விரும்புவது இந்த நேரங்களில்தான் .. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உடலில் ஏற்படும் வைட்டமின் சி குறைப்பாடுகள் தொற்று நோய் பெருகுவதை அதிகரிக்கும். தினம் ஒரு செவ்வாழைப் பழம் (red banana) சாப்பிடுவதன் மூலம் தொற்று நோயில் இருந்து விடுபடலாம்.
செவ்வாழையில் இருக்கும் இரும்பு சத்து , சுண்ணாம்பு சத்துக்கள் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. குழந்தைப் பேறு வேண்டும் தம்பதியினர் இருவருமே தினம் ஒரு பழமாக உண்டு வர விரைவில் ஆண்மை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
பல்வலியால் துன்பப்படுபடுவர்களுக்கும் செவ்வாழைப் பழம் நல்ல மருந்தாகிறது. பல்லசைவு பல்கூச்சம் போன்றவற்றை தினம் ஒரு செவ்வாழைப் பழம் உண்பதன் மூலம் நீக்கலாம்.
நெஞ்செரிச்சல் அதிகமாக இருப்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வர வேண்டும். இந்த பிரச்னை சரியாகி விடும். நிவாரணம் கிடைக்கும்.
செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. இதய புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது. மற்ற வாழைப்பழங்களைக் காட்டிலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் உண்ணலாம். தினமும் காலை ஒரு பழம் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசிக்காது. எடை குறைக்க பயன்படுத்தலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!