என்றென்றும் நயன்தாரா.. ஒரே செல்ஃபியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்!

என்றென்றும் நயன்தாரா.. ஒரே செல்ஃபியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த  விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருவது அனைவரும் அறிந்ததே. நானும் ரவுடிதான் படத்தில் இருவருக்கும் மலர்ந்த காதல் இன்று வரை தொடர்கிறது. 

இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும் அதனை உறுதி செய்யும் விதமாக வெளிநாடு, கோவில், சுற்றுலா, விருது விழா என எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாகவே சென்று வருகின்றனர். 

அதற்கான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது வெளியிடுவார். சமீபத்தில்  மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா சுசீந்திரம் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று வந்தார்.

twitter

அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தனது காதலருடன் இணைந்து கொண்டாடினார் நயன்தாரா. ஆனால் அவரது புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் இடம்பெறவில்லை. 

மேலும் படிக்க - சீரியல் நடிகை ஆலியா மானசாவிற்கு வளைகாப்பு... வைரலாகும் புகைப்படங்கள்!

அதேபோல் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிலும் நயன்தாரா மட்டுமே கலந்து கொண்டார். இதை கவனித்த சிலர் இருவருக்குள்ளும் மனக்கசப்பு இருப்பதாகவும், திருமணத்துக்கு விக்னேஷ் சிவன் வற்புறுத்தியதால் நயன்தாரா (nayanthara) அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல்களைப் பரப்பினர். 

இதனால் இருவரது ரசிகர்களும் குழப்பமடைந்தனர். இவர்கள் இருவரும் எப்போது திருமணத்தை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் இருவருக்குமான காதலில் பிளவு ஏற்பட்டிருப்பதாக பரவிய தகவல் அதிர்ச்சியடைய செய்தது.

twitter

ஆனால் எங்களுக்குள் எந்த பிரிவும் ஏற்படவில்லை என்று இருவரும் ஒரே குரலில் தெரிவித்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், 

இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்றும் எப்பொழுதும் என்று பதிவிட்டு நயன்தாராவின் (nayanthara) புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். 

 
 
 
View this post on Instagram
 
 

Always & forever 🥰🥰🥰 #onlygoodvibes #wikkiclicks📷 #shotoniphone #love #alwaysandforever

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

அதில் மிஸ் விக்கீஸ் என்ற சிப்ஸை கையில் வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. இதனை தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் விக்னேஷ் சிவன், குறிப்பாக விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது அணிந்திருந்த உடையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 
 
 
View this post on Instagram
 
 

🥰

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

விருது விழாவுக்கு புறப்படும் முன் அதே புடவையில் விக்கியுடன் நயந்தாரா செல்ஃபி எடுத்துவிட்டு தான் சென்றுள்ளார். இந்தப் பதிவின் மூலம் தங்களை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும் படிக்க - மதுமிதாவின் மகள்கள்.. கெளதமியின் கணவர்..கவுண்டமணி மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படங்கள் !

எந்த வார்த்தையும் இல்லாமல் ஒரு ஸ்மைலியுடன் அந்த புகைப்படத்தை எல்லோருக்கும் உணர்த்தும் விதமாக விக்னேஷ் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

twitter

இதேபோல நயன்தாராவும் (nayanthara) இந்த இரண்டு புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து மிஸ் விக்கி என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் இடம் பெற்றிருந்ததாகவும், அப்போது வெளியான நயன்தாராவின் புகைப்படமே விக்னேஷ் சிவனால் எடுக்கப்பட்டது தான் என்றும் கூறப்படுகிறது. 

பட வேலைகளில் இருந்தால் ஜீ தொலைக்காட்சி விருது நிகழ்ச்சிகளிலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா உடன் கலந்துகொள்ளவில்லை என்று  தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க - புடவையில் தேவதை போல் இருக்கும் யாஷிகா ஆனந்த் : வைரலாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் திணறல்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!