இன்று வெளியாகிறது தலைவர் ரஜினிகாந்தின் தர்பார் பட ட்ரைலர்.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

இன்று வெளியாகிறது தலைவர் ரஜினிகாந்தின் தர்பார் பட ட்ரைலர்.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

தர்பார் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 167-வது படமாக  தர்பார் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல காலம் கழித்து ரஜினியை காக்கிச் சட்டையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இன்று மாலை வெளியாகும் ட்ரைலர்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். 

தர்பார் படத்தின் இந்தி ட்ரெய்லர் இன்று மாலை மும்பையில் நடக்கும் விழா ஒன்றில் வெளியிடப்படுகிறது. அந்த விழாவில் முருகதாஸ், ரஜினிகாந்த், அனிருத், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். 

மேலும் படிக்க - குழந்தைக்காக காத்திருக்கும் அறந்தாங்கி நிஷா.. விமர்சையாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி!

வழக்கம் போன்று நயன்தாரா கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது ஆர்.ஜே. பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

twitter

தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரி ஆதித்யா அருணாச்சலம் மற்றும் சமூக ஆர்வலர் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தர்பார் அரசியல் பற்றிய படம் என்று கூறப்பட்ட நிலையில் அதை முருகதாஸ் மறுத்தார். இது அரசியல் படம் அல்ல பக்கா கமர்ஷியல் படம் என கூறியுள்ளார். இந்நிலையில் ட்ரைலர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

மேலும் படிக்க - காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமண வரவேற்பு...நேரில் சென்று வாழ்த்திய முக்கிய பிரபலங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!