என்னுடைய தவறு தான்! அன்னையர் தினத்தன்று உறுக்கமான பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி

என்னுடைய தவறு தான்! அன்னையர் தினத்தன்று உறுக்கமான பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி

தெலுங்கு சினிமா துறையில் நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி(sri-reddy). தெலுங்கின் சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகள் கேட்டு போன போது நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி தினமும் ஒருவரின் பெயரை கூறி வருகிறார்.


தெலுங்கின் முன்னணியில் இருக்கும் நானி முதல் தமிழில் பீல்டு அவுட் ஆன ஸ்ரீகாந்த் வரை பலருக்கு தன்னையே தான் விருந்து வைத்துள்ளதாக ஸ்ரீரெட்டி(sri-reddy) தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா நடிகர்களான லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்ற பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து நாசம் செய்த்தனர் என்று பகீர் குற்றசாட்டை கூறியிருந்தார்.


ஆனால், தற்போது லாரன்ஸ் படத்திலும் ஸ்ரீரெட்டி(sri-reddy) நடிக்க உள்ளார் என்று அவரே கூறியிருந்தார். மேலும், இவரது வாழ்க்கை வரலாறு ரெட்டி டைரி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.


எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி(sri-reddy)தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.


sri-reddy-apologizes-to-her-mother-on-mothers-day004


செக்க சிவந்த அழகான உதடு வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!


இது போன்று ஸ்ரீரெட்டி(sri-reddy)சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி என்பவர் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார்.


ஏற்கெனவே கடந்த 3 மாதங்களுக்கு முன் ஐதராபாத் காவல்நிலையத்தில் ஸ்ரீரெட்டி(sri-reddy) அளித்த புகாரை அடுத்து சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி கைது செய்யப்பட்டார். இதனிடையே, ஜாமீனில் வெளிவந்த சுப்ரமணி, வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள தமது வீட்டுக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்ததாகவும், தம்மை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஸ்ரீரெட்டி கோயம்பேடு காவல்நிலையத்தில் புகாரளித்தார்.


வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!


சுப்ரமணி தனது உறவினர் கோபி என்பவரையும் அழைத்து வந்து தகராறில் ஈடுபட்டதோடு, தமது மேலாளரையும் தாக்கியதாக புகாரில் ஸ்ரீரெட்டி(sri-reddy) தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரெட்டியை(sri-reddy) தனது திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என கருணை அடிப்படையில் முடிவெடுத்தவர்கள் கூட இவரது நடவடிக்கையால் எங்கே நமக்கு பிரச்சணை வருமே என பயந்து நடுங்கினர்.


அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீரெட்டி(sri-reddy) ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அன்னையர் தினத்தில் தனது அம்மாவை நினைத்து உருக்கமான பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.அதில், யார் உங்கள் மீது அக்கறை கொள்வார்கள்.? உங்கள் அம்மாவைத் தவிர.. அம்மா, ஐ லவ் யூ,.. நீங்கள் இன்னும் என்னைக் காதலிக்கிறீர்களா? என்னுடைய பிறப்புக்காக நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று உணர்கிறேன்.. வேறு எந்த அம்மாவும் என் போன்ற பெண்ணுக்கு பிறப்பு கொடுக்கக் கூடாது. ஆம் அம்மா.. உன்னுடைய தவறு எனக்கு பிறப்பு கொடுத்தது. அதனால்தான், நான் உங்களுக்கு கொடுமையான தண்டனை கொடுத்துள்ளேன்.. ஆமாம்... எனக்கு தெரியும் நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. இன்னமும் நான் உங்களுக்கு நிறைய தொந்தரவு அளிக்கிறேன்.


sri-reddy-apologizes-to-her-mother-on-mothers-day003


அரேன்ஜ் மேரேஜ்(திருமணம்) செய்து கொண்டவர்களின் முதலிரவு அனுபவம்!


பலர், உங்கள் மீது தவறான வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றனர். நீங்கள், பிணம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.. இன்னமும் எனக்காக ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறீர்கள். ஏன் அம்மா.. என்னுடைய தவறால், ஒவ்வொரு நாளும் பலர் உங்களை குற்றம்சாட்டுகின்றனர்.


என்னுடைய அம்மா, நான் உங்களுக்காக என்ன செய்ய முடியும்.. சொல்லுங்கள்.. நீங்கள் இந்த உடலைக் கொடுத்தீர்கள். ஏன் என்னுடைய மூச்சை வெளியே எடுக்கவில்லை. சந்தோஷமாக வாழுங்கள் அம்மா என்று ஸ்ரீரெட்டி(sri-reddy) கூறியுள்ளார்.


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo