பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமாக நடைப்பெற்று கொண்டிருக்கும், ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இதில் ஜுனியர், சினியர் என்ற இரு பிரிவின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியானது தற்போது 7 சீசன்களை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி வரை பயணித்து இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் பிரகதி குருபிரசாத் (pragathi).
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத், ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி இருக்கின்றார். மேலும் திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார்.
மேலும் படிக்க – சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மற்றொரு நடிகையுடன் தொடர்பு..மனைவி ஜெயஸ்ரீ பரபரப்பு புகார்!
தாரை தப்பட்டை என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் பிரகதி (pragathi) நடித்து இருப்பார். இதுவரை பிரகதி 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கும் பிரதிக்கு 22 வயது ஆகின்றது. எப்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு மிகவும் பிஸியாக இருக்கும் பிரகதி, விதவிதமாக ஆடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து போஸ் கொடுத்து வருகிறார்.
இதனிடையே பிரகதி, நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாக வதந்திகள் பரவியது. நடிகர் அசோக் செல்வன் பிறந்தநாள் அன்று தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பிரகதிவெளியிட்டார். அவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படத்தால் அசோக், பிரகதி காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேச்சு கிளம்பியுள்ளது.
மேலும் படிக்க – அமெரிக்காவில் நண்பர்களுடன் அசைவ விருந்தில் நயன்தாரா… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
இதுகுறித்து விளக்கம் அளித்த பிரகதி, நான் தற்போது திருமணம் செய்யவில்லை. அப்படி செய்தால் கண்டிப்பாக அனைவரிடமும் சொல்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடு சென்ற பிரகதி (pragathi) அங்கு பொது இடத்தில் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை ஷேர் செய்து, என்னுடைய முதல் பீர் என பதிவு போட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கமெண்டுகளை வீசி வருகின்றனர். சிங்கப்பூரில் வளர்ந்த இவர் பீர் குடிப்பது பெரிய விஷயம் இல்லையென்றாலும் தமிழ் ரசிகர்கள் தங்களது விரக்தியை காட்டி வருகின்றனர்.
பிரகதி பீர் சாப்பிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இது உங்கள் உடம்புக்கு சரி வராது எனவும், குடிக்க வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் தொப்பை போட்டுவிடும் வேண்டாம் என்றும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க – சாக்ஷிக்கு ஏற்ற கணவராக நடக்கிறேன்.. ஆம்.. சரி.. இதுவே சாக்ஷிக்கு பிடித்த வார்த்தைகள்-தோனி
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!