திரைக்கு வரும் எனை நோக்கி பாயும் தோட்டா!அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் சந்தோஷத்தில் ரசிகர்கள்!

திரைக்கு வரும் எனை நோக்கி பாயும் தோட்டா!அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் சந்தோஷத்தில் ரசிகர்கள்!

வரும் ஆனா வராது என்கிற நகைச்சுவை எந்த திரைப்படத்திற்கு பொருந்துகிறதோ இல்லையோ இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திற்கு நன்றாகவே பொருந்தி இருக்கிறது.

2016ம் ஆண்டு எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பொதுவாக தற்போதெல்லாம் ஒரு திரைப்படம் என்பது 3 மாத காலத்திற்குள் படபடிப்பிப்பு முடிக்கப்பட்டு ஐந்தாவது அல்லது ஆறாவது மாதத்திற்குள் திரைக்கு வந்துவிடுகிறது.

1 அடி நீரில் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை.. ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கிறார் டிஜிபி தகவல்

ஆனால் எனை நோக்கி பாயும் தோட்டா 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018ம் ஆண்டில்தான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. பணப்பிரச்சனை காரணமாகவே படம் முடிவடைய இத்தனை காலம் எழுந்ததாக இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இந்நிலையில் பிரச்னைகள் தீர்த்ததால் கடந்த மே மாதமே திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. மே மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வெளியாகவில்லை. இதனால் GVMமிற்காகவும் தனுஷிற்காகவும் காத்திருந்த ரசிகர்கள் ஏமாந்தனர்.

லாஸ்லியா மற்றும் திவ்யா - ஆறு வித்யாசங்கள் !

தற்போது இத்திரைப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. வருகின்ற ஜூலை 26ம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆகிறது என்கிற செய்தியை தயாரிப்பு தரப்பு வெளியிட்டிருக்கிறது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மென் காதல் கதைகளுக்கு என தனித்த ரசிகர் கூட்டம் ஒன்று இருக்கிறது. அதில் தனுஷ் இணையவே தனுஷின் பின்தொடர்பாளர்களும் இந்த திரைப்படத்திற்காக தவம் இருக்கின்றன நிலையில் திரைப்படம் இம்மாதத்தில் வெளியாவது மிகுந்த சந்தோஷத்தை ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.                           

அப்பாவுடன் தினம் ஒரு பெண்.. தவறாக நடந்த அப்பாவின் நண்பர்கள்.. வனிதாவின் மகள் பகிர்ந்த வலி

இன்னும் ஒரு கூடுதல் மகிழ்ச்சியாக இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது தயார் ஆகிக் கொண்டிருப்பதாகவும் அடுத்தவாரம் இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகிறது என்பதை கூடுதல் தகவலாக திரைப்படக் குழு தெரிவித்திருப்பது சோர்ந்து கிடந்த ரசிகர்களை சந்தோஷக் கூச்சலிட வைத்திருக்கிறது.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்டன. தர்புகா ஷிவா எனும் புது இசையமைப்பாளர் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் தனிரகமாக மனதை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன. மொத்தம் 7 பாடல்கள் வெளியான நிலையில் மறுவார்த்தை பேசாதே மிகப்பெரிய ஹிட் ஆனது மற்றும் விசிறி இந்தப்பாடல் ஹிட் வரிசையில் இருக்கிறது.

என்னை நோக்கி பாயும் தோட்டாவிற்காக காத்திருக்கும் ரசிகர்களே..! இன்னும் 15 நாள்தான் நம் கொண்டாட்டத்திற்கு ! இன்னும் கொஞ்சமே கொஞ்சம் காத்திருங்கள்!!                                  

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன