பாலிவுட் தேவதை தீபிகா படுகோன் காதல் கணவருடன் இணைந்து நடிக்கப் போகும் திரைப்படம் 83. இதில்தான் தீபிகா தனது கொள்கைகளை தளர்த்தி இருப்பதாக பாலிவுட் வட்டாரம் பேசிக்கொள்கிறது.
திருமணம் அதன் பின்பான ஹனிமூன் என எல்லாம் முடித்த தீபிகா படுகோன் ரன்வீர் தம்பதியினர் தற்போது அவரவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
1983ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கபில் தேவ் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து முதலிடம் பிடித்தது இந்தியா. உலகக்கோப்பை தொடரை முதன் முறையாக வென்றது.
திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !
இந்த சம்பவத்தை அடித்தளமாக கொண்டு எடுக்கப்பட இருக்கும் திரைப்படமே 83. இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் கபில் தேவ் பாத்திரத்தை ஏற்கிறார்.
இதில் ரன்வீர் சிங்கின் மனைவியாகவே தீபிகா வர இருக்கிறார். எனக்கு மனைவியாக நடிக்க என் மனைவியை தவிர வேறு யார் பொருத்தமாக இருக்க முடியும் என்று ரன்வீர் தெரிவித்திருக்கிறார்.
தீபிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர். இந்நிலையில் 83 திரைப்படத்தில் கணவர் ரன்வீருக்காக குணச்சித்திர வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
மேக்கப் இல்லாத கரீனா.. ஆன்ட்டி ஆனதாக இணைய மக்கள் கிண்டல் !
இந்த திரைப்படத்தில் நடிக்க அரைமனதாகவே இவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. கணவர் ரன்வீருக்காகவும் சில காட்சிகள் வருவதற்கு தனக்கு பேசப்பட்ட சம்பளத்திற்காகவும் தனது கொள்கைகளை அட்ஜஸ்ட் செய்து கொண்டிருக்கிறார் தீபிகா படுகோன் என்கின்றனர் பாலிவுட் வட்டாரத்தினர்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த போது இதனை குறிப்பிட்டதாக தெரியவருகிறது. இப்படத்தில் நடிப்பது பற்றி முதலில் தீபிகா உறுதியாக இல்லையாம். கணவர் ரன்வீருக்காகவும் தனக்கு பேசப்பட்ட அதிகமான சம்பளத்திற்காகவும் இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார் அந்த தயாரிப்பாளர்.
சில காட்சிகள் வருவதற்க்கு தீபிகாவிற்கு சம்பளமாக 14 கோடி பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. முன்னதாக அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் நடித்து முடித்த திரைப்படம் சபாக் விரைவில் வெளியாக இருக்கிறது.
விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !
தீபிகா அந்த படத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்று இயக்குனர் பாராட்டி இருக்கிறார். அது தவிர இந்த படத்தின் மூலம் தீபிகா தயாரிப்பாளர் ஆகவும் ஆரம்பித்திருக்கிறார்.
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மூலம் ரன்வீருடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் தீபிகா படுகோன். அங்கே ஆரம்பித்த காதல் தீ திருமணத்தில் முடிந்தது. இப்போது திருமணம் முடிந்த உடன் இருவரும் இணையும் முதல் படமாக 83 இருக்கிறது.
இந்த படப்பிடிப்பில் தீபிகா ரன்வீரை கிரிக்கெட் மட்டையால் அடிப்பது போன்ற வீடியோவை ரன்வீர் பதிய அது பலராலும் பகிரப்பட்டு வைரலானது
ப்ரியங்கா சோப்ராவின் பெட்ரூம் ரூல்ஸ்!
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.