சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் லேடி சூப்பர் ஸ்டார் ? விரிவான விபரங்கள் உள்ளே !

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் லேடி சூப்பர் ஸ்டார் ? விரிவான விபரங்கள் உள்ளே !

ரஜினிகாந்த் என்றாலே பரபரப்புக்கு காத்திருக்கும் மக்கள் அதிகம். அரசியலில் அவரது செயல்கள் எல்லாம் விமர்சிக்கப்படுகின்ற நிலையில் தலைவரின் 167வது படமாக தர்பார் (darbar) வெளியாகிறது.


சமீபத்தில் வெளியான இதன் பர்ஸ்ட் லுக் இணைய தளங்களில் வைரலானது. இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.


ஆரம்பத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நயன்தாரா இருக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால் படக்குழுவிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக லேடி சூப்பர் ஸ்டார் வருவதாக கூறுகின்றனர்.



ஆனாலும் இந்த செய்தி பற்றி இன்னமும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தி நடிகர் பிரதிக் பாபரும் இதில் வில்லனாக நடிக்கிறார் என்பது உறுதியான தகவலாக இருக்கிறது.


தர்பார் திரைப்படத்தின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு பேருடன் நீண்ட காலத்திற்கு பின்னர் இணைகிறார். ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திரமுகி குசேலன் படத்திற்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைகின்றனர்.


இன்னொருவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். கஜினி திரைப்படத்திற்கு பின்னர் இவர்கள் இனைந்து பணியாற்றுகின்றனர்.



தர்பார் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை அனிருத் ரவிச்சந்திரன் . ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் மும்பையில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக ஒரு நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.



நாளை ஓட்டு பதிவு என்பதால் , ரஜினிகாந்த், நயன்தாரா, மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகிய மூவரும் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு பின்னர் மீண்டும் படப்பிடிப்பை தொடர போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்னும் பல விஷயங்கள் சொல்வதற்கு இருந்தாலும் எல்லா விஷயங்களையும் இப்போதே சொல்லி விட்டால் படம் பார்க்கையில் நமக்கு ஆச்சர்யங்கள் எதுவும் இருக்காது. ஆகவே படம் வெளி வரும் வரை காத்திருப்போம்.



படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


மாமியாருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்


முதல் சந்திப்பும்.. அதன்பின்பான பதட்டமும்.. மாதுரி பற்றி மனம் திறந்த சஞ்சய் தத் !


---                                                           


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.