சினிக்கர்ஸ் - சினி ஸ்னாக்ஸ்

சினிக்கர்ஸ் - சினி ஸ்னாக்ஸ்

இந்த வாரம் சினிக்கர்ஸ் (snacks) பகுதியில் பிரபலங்களின் சொந்த வாழ்க்கை தகவல்கள் மற்றும் சினிமா தகவல்களைப் பார்க்கலாம்.


நேற்று நெட்டிசன்களுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை பிரியா வாரியரின் திரைப்படத் துளிகளை டிஸ்லைக் செய்து ட்ரெண்ட் ஆக்கியது முதல் புர்கா அணிந்த ஏ ஆர் ரஹ்மானின் மகள புகைப்படத்திற்காக ரஹ்மானையே கடிந்து கொண்டது வரை பல விஷயங்கள் இணையதளத்தில் வலம் வந்தன.


சினிமாவில் ஏ ஆர் ரஹ்மான் தனது முதல் ஆஸ்கர் விருதை வாங்கி 10 வருடங்கள் ஆனதை ஒட்டி இதனைக் கொண்டாடும் விதமாக முதல் ஆஸ்கர் படமான ஸ்லாம் டாக் மில்லினர் படத்தில் காட்டப்பட்ட மும்பை தாராவி பகுதியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அங்கு ரஹ்மானின் மகள் கதிஜா (இவர் எந்திரன் படத்தில் புதிய மனிதா பாடலை பாடியிருக்கிறார்.) கண்கள் மட்டும் வெளியே தெரியும்படியான உடை அணிந்து மேடையில் பேசினார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் எ ஆர் ரஹ்மானை இரட்டை வேடம் போடுகிறார் என்று கடிந்து கொண்டனர்.


எல்லாவற்றிற்கும் புன்னகையை பதிலாகக் கொடுக்கும் ரஹ்மான் இந்த விஷயம் இணையதளத்தில் வீணாக பரவுவதைக் கண்டு தனது மகள்கள் மற்றும் மனைவி இருக்கும் சொந்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் போட்டு தான் உடை விஷயத்துக்காக யாரையும் நிர்பந்திப்பதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.அந்த புகைப்படத்தில் அவரது மனைவி சாய்ரா பானு தனது தலைக்கு மேலே முக்காடிட்டபடி இருந்தார். ஒரு மகள் ரஹீமா இந்த அடையாளங்கள் ஏதும் இல்லாமல் சாதாரண உடையில் இருந்தார் இன்னொரு மகள் கதீஜாவோ அதிலும் கண்கள் மட்டும் தெரியும் வகையிலான உடை அணிந்திருந்தார். கதீஜாவிற்கு தனது முகத்தை வெளியில் காட்ட விருப்பம் இருந்ததே இல்லை என்பதுதான் உண்மை. தான் யாரையும் உடை விஷயத்தில் கட்டாயப்படுத்தியதில்லை என்பதை புகைப்படத்தின் மூலம் ரஹ்மான் நிரூபித்திருக்கிறார். இருப்பினும் புரியாதவர்கள் புலம்பல்கள் தொடர்கிறது.சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளின் இரண்டாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில் சுவாரஸ்யமான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் சுற்று சூழலுக்கு ஆதரவாக வேப்ப மரத்தின் விதைகளை லதா ரஜினி காந்த் பரிசாகக் கொடுத்து இருக்கிறார்.கொடி படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். கொடி படத்தை இயக்கிய இயக்குனர் துறை செந்தில் குமார் இந்தப் படத்தையும் இயக்குவதாகத் தெரிகிறது. சினிமாவில் வெற்றிமாறனுடன் இணைந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற அத்தனை படங்களும் வெற்றி பெற்று விருதுகளைக் குவித்த நிலையில் இப்போது அசுரன் படத்திலும் இவ்விருவரும் இணைகிறார்கள். இந்தப் படம் முடிந்த பிறகு துறை செந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.சினிமாவில் மூத்த நடிகர் சிவகுமார் செல்"லும் இடங்களில் எல்லாம் சிக்கலாகின்றது போல. ஏற்கனவே ஒருமுறை தன்னோடு செல்ஃபி எடுக்க வந்த நபரின் செல்போனை கீழே தட்டி விட்டார். அதன்பின் அது மிகப்பெரிய விவகாரம் ஆக அவர் அந்த நபருக்கு இன்னொரு செல்போன் பரிசளித்திருந்தார். இப்போது இன்னொரு குடும்ப விழாவில் சிவகுமாரைப் பார்த்த உடன் ஒரு நபர் அவரை வீடியோ எடுத்தபடியே பின் தொடர சிவகுமார் அசால்டாக செல்போனைப் பார்க்காமலே அதனை தட்டி விட்டபடி நடந்து செல்லும் வீடியோ ஒன்று பிரபலமாய்ப் பேசப்படுகிறது.நடிகை பிரியா வாரியர் என்றாலே சர்ச்சையும் அதனையொட்டிய சிக்கல்களும் என்றாகிவிட்டது. இவரது ஒரு அடர் லவ் படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது. இதனை ஒட்டி ஸ்னீக்பீக் விடீயோக்களை அக்குழு வெளியிட்டது. ரசிகர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட விடீயோக்களில் ஒரு விடியோவாக இந்த ஸ்னீக்பீக் சாதனை செய்துள்ளது.தனது கண்களை காட்டி முதலில் பிரபலமான பிரியா வாரியார் இப்போது இப்படத்தில் முத்தக் காட்சி ஒன்றில் நடித்திருப்பதால் பிரபலம் ஆகியிருக்கிறார். பள்ளிப் பருவ கதையில் பிரியா வாரியருக்கு உதட்டோடு முத்தம் கொடுத்திருக்கிறார் ரோஷன்.


இந்த விடியோவை டிஸ்லைக் செய்த கையேடு அந்த லிப்லாக் சீனையும் எடிட் பண்ணி இணையத்தில் உலவ விட்டிருக்கின்றனர் இணையவாசிகள்.பேரன்புபடங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


----


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.