பிக் பாஸ் சீசன் 3 - முதல் போட்டியாளர் இவர்தானாம் !

பிக் பாஸ் சீசன் 3 - முதல் போட்டியாளர் இவர்தானாம் !

பல அரசியல் பரபரப்புக்களுக்கு நடுவே பிக் பாஸ் சீசன் 3யையும் தொகுத்து வழங்க இருக்கிறார் கமல்ஹாசன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.


அதற்கான பிரமோ படப்பிடிப்புகள் நேற்று துவங்கி இருக்கின்ற அதே நேரத்தில் போட்டியாளர் தேர்வும் நடைபெற்று வருகிறதாம்.


பிக் பாஸ் மூன்றாவது சீசன்( season 3) அடுத்த மாதம் ஆரம்பிக்க இருப்பதால் அதற்கான ப்ரோமோக்கள் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னமும் இதற்கான போட்டியாளர்கள் விபரங்கள் வெளியாகவில்லை. ஆனாலும் அனைவருக்கும் நல்ல செய்தி என்ன என்றால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நமது கமல்ஹாசன் என்பதுதான்.அரசியலில் இறங்கியதால் கமல்ஹாசன் வர மாட்டார் என்றும் நயன்தாரா வர போகிறார் என்றும் பல்வேறு செய்திகள் அடிபட்ட நிலையில் இப்போது மீண்டும் கமல்ஹாசன் வருகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் மூன்றிற்கான ப்ரோமோ வீடியோ எடுக்க பூந்தமல்லி ஈவிபி வளாகத்தில் இருக்கும் பிரம்மாண்ட செட்களில் கமல்ஹாசன் கலந்து கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.


போட்டியாளர்களாக கலந்து கொள்ள நிறைய பெயர்கள் அடிபடும் நிலையில் முதலில் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் நடிகை சாந்தினி ஆக இருக்கலாம் என ஊகிக்க படுகிறது.


பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய சிம்பு.. பின்னணியில் நயன்தாரா..?சாந்தினி தவிர நடிகைகள் சுதா சந்திரன், லைலா , சாக்ஷி அகர்வால் ஆகியோர் பெயரும் அடிபடுகிறது. இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்திருப்பதால் சாந்தினி வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் சாந்தினி இன்னும் இதை பற்றி தான் முடிவு செய்யவில்லை என்றும் இப்போது பேச்சு வார்த்தை மட்டுமே நடக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கைவசம் படங்கள் இருப்பதாகவும் அதனை முடித்து கொடுக்க வேண்டும் என்பதால் இதில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்று தான் யோசித்து வருவதாக கூறியிருக்கிறார்.


பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய சிம்பு.. பின்னணியில் நயன்தாரா..?எது எப்படியோ இந்த சீசனில் ஆவது போனமுறை போல ஆகாமல் நல்லவிதமாக நடக்க சரியான ஆட்களை தேர்வு செய்வது அவசியம் என்பதை டிவி நிறுவனம் புரிந்து வைத்திருக்கும் என்று நம்புவோமாக.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்       


https://www.popxo.com/trending/bigg-boss-season-3-in-tamil-817889/


                              


---                                                  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                   


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.