லாஸ்லியா காதலுக்கு ஓகே சொன்ன அப்பா..ஒரே ஒரு கண்டிஷன் தானாம்!தோழி மூலம் வெளியான ரகசியம்!

லாஸ்லியா காதலுக்கு ஓகே சொன்ன அப்பா..ஒரே ஒரு கண்டிஷன் தானாம்!தோழி மூலம் வெளியான ரகசியம்!

இந்த சீஸன் பிக் பாஸில் (biggboss) மறக்க முடியாத ஒரே விஷயம் லாஸ்லியாவின் காதல். இதை இப்படித்தான் சொல்ல முடிகிறது. கவினின் கடைசி சாய்சாக லாஸ்லியா இருந்தார். தொடர்ந்த பேச்சுக்கள் தரும் கிறக்கம் காதலுக்கு வழி வகுக்கிறது.

பெண்களின் காதல் பெரும்பாலும் செவி வழி தான் ஆரம்பிக்கிறது. அவர்கள் எத்தனை அறிவாளியாக ஒரு நிறுவன எம்டி ஆக ஐஐடி வல்லுநர் ஆக இருந்தாலும் அது இப்படித்தான் நடக்கிறது. கண்கள் மூலம் ஆண்கள் ஆரம்பிக்கிறார்கள். அந்த வகையில் லாஸ்லியாவை (losliya) சாய்த்தது கவினின் தொடர்ந்த பேச்சுக்கள்தான்.

Hotstar

கவின் (kavin) விடாமல் பேச பேச லாஸ்லியா தன்னுடைய பலத்தை இழந்து கொண்டே வந்தவர் இறுதியாக கவின் வெளியேறுகையில் கதறினார். காதல் உள்ளே நுழைந்ததன் அடையாளத்தை அங்கே வெளிக்காட்டினார். இது கவினுக்கும் கவின் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்தது.

ஆனால் லாஸ்லியாவின் தந்தை மற்றும் தாய் 75வது நாளில் குடும்பத்துடன் வந்த போது 10 வருடம் பார்க்காத மகளை பார்க்கும்போது வந்த கண்ணீரையும் லாஸ்லியாவின் தந்தையான மரியநேசன் (mariyanesan) மறைத்து லாஸ்லியாவால் குடும்பத்திற்கு நேர்ந்த வேதனைகளை வெளிக்காட்டினார். சற்று கோபமாகவே இருந்தாலும் ஒரு தந்தையின் கடமையை அவர் சரியாகவே செய்தார்.

Hotstar

அதே சமயம் லாஸ்லியா அப்பாவின் மெல்லிய கோபத்தை பார்த்து பயந்து கதறி அழுத கவினையும் அவர் கட்டியணைக்க தவறவில்லை. ஒரு தந்தையாகவும் ஒரு ஆணாகவும் அவர் ஜென்டிலாக நடந்து கொண்ட விதத்தில் மரியநேசன் எல்லோரை விடவும் உயர்ந்தவராக தெரிந்தார்.

மூன்று மாதங்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி மற்ற போட்டியாளர்கள் பெற்ற பெயரை விட மூன்று மணிநேரம் மட்டுமே மகளை பார்க்க அனுமதிக்கப்பட்ட மரியநேசன் அதிகமாகவே பெயரும் புகழும் பெற்றார். இன்னமும் மரியநேசன் பல குடும்பஸ்தர்கள் மனதில் ஹீரோ தான்.

Hotstar

கவின் லாஸ்லியா காதல் என்னதான் ஆகும் என்கிற எதிர்பார்ப்பு கவின் ரசிகர்களுக்கு இருந்தது. அதனாலேயே அவர்கள் வெளியே வந்த பின்னரும் அவர்கள் ரசிகர்களோ அல்லது கவின் பணம் தந்ததாக சொல்லப்படும் கார்ப்பரேட் கம்பெனியோ அவர்கள் இருவர் பெயரையும் ட்ரெண்டிங் செய்தபடியே இருந்தனர்.

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்நது அடுத்தடுத்த பிக் பாஸ் கொண்டாட்டம் மற்றும் சில பேட்டிகளில் கூட கவினும் லாஸ்லியாவும் தனித்தனியாகவே இருந்தனர். கவின் ஒரு கடைசியில் நின்றார் என்றால் லாஸ்லியா இந்தக் கடைசியில் நின்றார்.

 

Hotstar

இதனால் இவர்கள் காதல் ப்ரேக்கப்பில் முடிந்தது என செய்திகள் வெளியாகின. வெளியிடங்களில் இருவரும் ஒருவார்த்தை கூட பேசிக்கொள்ளாத போது ரசிகர்களும் அதையே உண்மை என நம்பினார். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் மௌனமாக இருப்பதற்கான காரணத்தை வெளியிட்டிருக்கிறார்.

லாஸ்லியா மற்றும் கவின் காதலை அப்பா மரியநேசன் ஏற்று கொண்டதாகவும் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை விதித்திருப்பதாகவும் அதனாலேயே இருவரும் பேசிக்கொள்வதில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கிறது.

 

Hotstar

ஒரு வருடத்திற்கு இருவரும் பேசவே கூடாது என்பது தான் அந்த நிபந்தனை. பேசாமல் பழகாமல் ஒரு ஆண்டு வரை இருவரும் இருந்தார்கள் என்றால் காதலை தான் ஏற்பதாக அப்பா மரியநேசன் கூறி இருக்கிறாராம், அதனாலேயே இருவரும் வெளி நிகழ்ச்சிகளில் ஸம்ப்ரதாய ஹாய் கூட பரிமாறிக்கொள்ளாமல் இருக்கிறார்களாம்.

என் இரண்டாவது பத்தியை மீண்டும் படித்து பாருங்கள். பெண்களின் காதல் செவி வழி நுழைகிறது. இதனை நன்கு அறிந்த தகப்பனாக மரியநேசன் தனது மகளுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். இதனால் மீண்டும் மீண்டும் பேசுவதால் தன்னுடைய மனதை பறிகொடுக்கும் சூழலுக்கு லாஸ்லியா எனும் அந்த அறிவான பெண் தள்ளப்பட மாட்டார். யோசிக்க கால அவகாசம் தேவையான அளவிற்கு கிடைக்கும்.

ஆகவே இந்த ஒரு வருடம் கழித்தும் இருவரிடம் உள்ள காதலும் வலிமையாக இருந்தால் அப்போது அவர்கள் காதல் உண்மையானதுதான். வெறும் ஈர்ப்பு அல்ல என்பது உறுதியாகும். அப்போது இருவர்க்கும் திருமணம் செய்வது பொருத்தமாக இருக்கும். ஆகவே இப்போதும் மரியநேசன் மீதான மரியாதையும் அன்பும் பல மடங்கு கூடுகிறது.

மிஸ் யூ அப்பா.

Hotstar

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!