தி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ( The Avengers end game) திரைப்படம் உலகம் முழுதும் உள்ள மார்வெல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம்.
மார்வெல் காமிக்ஸ் மற்றும் டிசி காமிக்ஸ் ரசிகர்கள் அஜித் விஜய் ரசிகர்கள் போன்றவர்கள். எப்போதும் அவர்களுக்கிடையே போட்டிகள் இருந்தபடிதான் இருக்கும். மார்வெல் காமிக்ஸ் முழுக்க முழுக்க பிக்க்ஷனை அடிப்படையாக வைத்தே கதைத்தளம் பின்னப்பட்டிருக்கும். டிசி காமிக்ஸ் நிஜவாழ்வில் உள்ள யதார்த்தங்களோடு சூப்பர் ஹீரோ இணைவது போன்ற கதைத்தளம் கொண்டிருக்கும்.
சமீபத்தில் வெளியான மார்வெல் படமான கேப்டன் மார்வெல் இந்தியாவில் கணிசமான வெற்றியை பெற்றுள்ள நிலையில் தி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வரும் 26ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்கு விளம்பரம் செய்ய இந்தியாவில் உள்ள மும்பைக்கு வருகை தந்த இந்தப் படத்தின் இயக்குனர் ஜோ ரஸ்ஸோ இந்த திரைப்படம் பற்றிய ஆச்சர்யமான தகவலை கூறியிருக்கிறார்.
கேப்டன் மார்வெல் – திரைப்பார்வை
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ரோபோ படத்தை பார்த்துதான் அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்ஸ் படத்தில் பல்வேறு அல்ட்ரான்கள் சேர்ந்து ஒரு பெரிய அல்ட்ரானாக மாறி சண்டையிடும் காட்சி ஒன்றை வைத்தாராம் இயக்குனர் ஜோ ரஸ்ஸோ .
எந்திரன் படத்தில் பல ரோபோக்கள் சேர்ந்து ஒரு பிரம்மாண்ட ரோபோவாக உருவெடுக்கும். அதனை போன்றுதான் காட்சியமைத்தாராம். எடிட்டிங் சமயத்தில் படத்தின் நீளம் கருதி அந்த காட்சியை நீக்கி விட்டதாக இயக்குனர் தெரிவித்தார்.
Here’s something special for all you amazing Marvel India fans! Presenting the #MarvelAnthem created by the maestro @arrahman.@Russo_Brothers https://t.co/cu6Z5I4LyE
— Marvel India (@Marvel_India) April 1, 2019
மார்வெல் ரசிகர்களுக்கான மார்வெல் ஆன்தம் ஒன்றை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாக்கியது மார்வெல் குழு. தற்போது ரஜினியின் படத்தை பார்த்து அதனை தங்கள் படத்தில் இணைப்பது என்பது சினிமா என்னும் துறையில் இந்திய சினிமா வேகமாக வளர்ந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி மார்வெல் ரசிகர்களுக்கான இந்தி வெர்ஷனை வெளியிட்டார் ஏ ஆர் ரஹ்மான். வெகு விரைவில் தமிழ் மற்றும் பிற மொழிகளில் இதனை வெளியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
Hindi version is here ..Tamil and Telugu coming soon ….. https://t.co/m9nUtOCkc6
— A.R.Rahman (@arrahman) April 1, 2019
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
பாகுபலி பாகம் மூன்றில் அவெஞ்சர்ஸ் ஸ்டார் இணைகிறாரா!
“It’s not about how much we lost, it’s about how much we have left.”#AvengeTheFallen #WhateverItTakes#AvengersEndgame
In cinemas April 26 pic.twitter.com/V6GnjkwShK— Marvel India (@Marvel_India) April 2, 2019
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo