அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அமலா பால். முதல்படத்திலேயே சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் மைனா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தெய்வத் திருமகள் திரைப்பட மூலம் இயக்குனர் ஏ எல் விஜயின் அறிமுகம் கிடைத்து அது காதலாகவும் மலர்ந்தது. அதன் பின்னர் தலைவா திரைப்படத்தில் நடித்தார்.

ஏ எல் விஜயை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். ஆனால் அதன் பின்பான நடிப்பு தொழில் என்பது அவருக்கு சரிவர அமையாமல் இருந்தது. அதே சமயம் ஏ எல் விஜய் மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்துக்குப் பின்பான வாழ்க்கை.. முன்னாள் கணவர் பற்றி மனம் திறந்த அமலா பால் !

Youtube

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஆடை' திரைப்படம் வித்யாசமான கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த நடிகையும் முயற்சி செய்யாத ஒரு துணிச்சலான காரியத்தை அமலா பால்  (amala paul) இந்தப் படத்திற்காக செய்திருக்கிறார். நிர்வாணமாக நடித்திருக்கிறார்.

இந்தக் கதையை அவர் துணிச்சலாக தேர்ந்தெடுத்தற்காக பல பாராட்டுக்களைப் பெற்று வருகிறார் அமலா பால். இந்த சூழ்நிலையில் வெளியான பேட்டி ஒன்றில் தனது புகழுக்குப் பின்னால் இருக்கும் நபர் பற்றிக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் அமலா பால்.

தான் ஒருவரை காதலிப்பதாகக் கூறி இருக்கும் அமலா பால் தனது காதலர்தான் தனது கதைகளை முடிவு செய்து ஊக்குவிக்கிறார் எனும் உண்மையைக் கூறி இருக்கிறார். தனது காதலர் யார் என்பதை தற்போது கூற இயலாது என்று கூறியிருக்கும் அமலா பால் அவரைக் கலந்து ஆலோசித்த பின்புதான் கதைகளைத் தேர்வு செய்வதாகக் கூறி இருக்கிறார்.

40 வயதான நடிகை ஸ்ருதி இன்னும் திருமணம் செய்யாதது ஏன் ? அவருக்கு இப்படி ஒரு துயரமா?

Youtube

அமலா பாலின் காதலர் தனது வேலையைத் தியாகம் செய்து அமலா பால் உடன் வாழ்வதாகக் கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் தற்போது பாண்டிச்சேரியில் ஒன்றாக வாழ்வதாக தகவல்கள் கசிகின்றன. இதில் அந்த காதலர் யார் என்பதை அமலா பால் கூறவில்லை என்றாலும் அமலா பால் உடன் நெருக்கமாக ஒரு நபர் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

அமலா பால் கூறிய அந்தக் காதலர் இவராக இருக்குமோ என யூகிக்கப்படுகிறது. ஆனால் சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                       

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.