ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்? வெளியான புகைப்படங்கள்

ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்? வெளியான புகைப்படங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராய் மறுபடியும் கர்ப்பமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


பாலிவுட்டில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமே இருப்பதில்லை . இப்போது ஹோலி அன்று வெளியான சில புகைப்படங்கள் ஐஸ்வர்யா (aishwarya rai)கர்ப்பமாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை உருவாக்கி இருக்கின்றன.


ஹோலி பண்டிகையை பாலிவுட் பிரபலங்கள் மும்பையில் கொண்டாடிக் கொண்டிருக்கையில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் கோவா சென்றுள்ளனர்.வெளியான புகைப்படம்


அப்போது எடுக்கப்பட்ட பீச் போட்டோக்களில் ஐஸ்வர்யாவின் வயிறு கொஞ்சம் உப்பலாகத் தெரிகிறது. இதனை வைத்துத்தான் ஐஸ்வர்யா மீண்டும் கர்ப்பமாகி இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.


இந்த புகைப்படங்களை பார்த்த வேறு சிலரோ ஐஸ்வர்யா இதுவரை டிசைனர் உடைகளால் தனது தொப்பையை மறைத்து வந்தார் எனவும் இப்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் கூறியுள்ளனர்.எப்போதும் விமர்சிக்கப்படும் ஐஸ்வர்யா


ஐஸ்வர்யா ராய் எப்போதும் தனது உடல் எடை காரணமாக மற்றவரின் விமர்சனத்திற்கு ஆளாகி வருபவர். உலக அழகிதான் என்றாலும் அவரும் சக மனுஷி என்பதை புரிந்து கொள்ளாத பலர் இப்படி தகவல்களை பரப்பி வருகின்றனர்.


நடிகை ஐஸ்வர்யா இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்க இருக்கிறார். இவருடன் இவரது மாமனார் அமிதாப் பச்சனும் சேர்ந்து நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் சிலர்.ரசிகர்கள்


கேன்ஸ் திரைப்பட விழா வேறு வர இருப்பதால் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் இந்த தகவலால் கவலைப்படுவதாக கூறி வருகின்றனர்.


ஐஸ்வர்யா ராய் என்ன செய்தாலும் அது ட்ரெண்டாகிறது. சமீபத்தில் அம்பானி திருமண விழாவில் கூட தனது கணவர் மற்றும் மகளுடன் இவர் வந்திருந்த போது ஆராத்யாவின் சேஷ்டைகள் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.