பொன்னியின் செல்வனில் வில்லியாகும் ஐஸ்வர்யா ராய் !

பொன்னியின் செல்வனில் வில்லியாகும் ஐஸ்வர்யா ராய் !

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். அது மிக முன்பே படம் எடுக்க வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்த உடனே வெளியான செய்திதான்.


ஒருவகையில் இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான நாயகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் ( Aishwarya Rai) மிக பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் முதல் முறையாக தமிழில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.


பிக் பாஸ் 3ல் ஆல்யா மான்ஸா? மேலும் சில பிரபலங்கள்.. வெளியான பட்டியல் !10வது நூற்றாண்டில் வாழ்ந்த சோழ வம்சத்தை பற்றிய முக்கிய கதையான பொன்னியின் செல்வன் அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட ஒரு அரும்பெரும் காவியம்.


இந்த கதையை திரைப்படமாக எடுக்க எம்ஜிஆர் முதல் கொண்டு பலரும் முயன்ற நிலையில் யாராலும் எடுக்க முடியாமல் போனது. காரணம் சரித்திர கதை மற்றும் அதற்கான நடிகர்கள் அவர்களின் சம்பளம் என பல விஷயங்கள் இதில் பிரம்மாண்டமாக இருக்கவே இந்த கதை திரைப்படம் ஆகாமலே இருந்தது.


அழகால் அனைவரையும் கட்டி இழுத்த தீபிகா படுகோன் - ஸ்பெஷல் வீடியோஇந்நிலையில் இந்த திரைப்படத்தை எடுக்கும் நீண்ட கனவில் இயக்குனர் மணிரத்னம் இருந்தார். பாகுபலி வெற்றிக்கு பிறகு நம்பிக்கையாக இந்த படத்தை எடுத்து விடலாம் என்று இறங்கியிருக்கிறார் மணிரத்னம்.


அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்குமான திரைப்பட பந்தம் எப்போதும் வெற்றியடைந்திருக்கிறது. இதில் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாநாயகி ஆக வர இருக்கிறார் என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.


இயக்குனர் ஆகிறார் ஐஸ்வர்யா ராய் .. அடுத்த படம் பற்றிய ஸ்பெஷல் தகவல்கள் உள்ளே !என்றாலும் மிக வலிமையான அதிகாரம் படைத்த ஒரு கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ஏற்கிறார் என்பது புதிய செய்தி. பெரிய பழுவேட்டரையரின் மனைவியாக வரும் நந்தினி கதாபாத்திரத்தை ஐஸ்வர்யாவிற்கு தந்திருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம்.


கணவனை தூண்டி விட்டு சோழ வம்சத்தை அழிக்க நினைக்கும் ஒரு கதாபாத்திரமான நந்தினி வேடம் மிக மென்மையான ஐஸ்வர்யா ராய்க்கு நிச்சயம் ஒரு பெரிய சவால்தான்.


வாவ் ! பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாகும் கார்த்தி !இந்த பிரம்மாண்ட தமிழர்களின் வரலாறை திரையில் பார்க்கும் கனத்திற்காக மணிரத்னம் ரசிகர்கள் மட்டுமல்ல மொத்த தமிழ்நாடும் காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்     


ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்                       


---                                                                                             


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.