எதற்கடி வலி தந்தாய்..துருவ்வின் மென்குரலில் 50 லட்சம் வியூக்களை கடந்து சாதனை படைத்த பாடல்!

எதற்கடி வலி தந்தாய்..துருவ்வின் மென்குரலில் 50 லட்சம் வியூக்களை கடந்து சாதனை படைத்த பாடல்!

துருவ் விக்ரம்.. பார்ப்பதற்கு துறுதுறுப்பான முகம் கூடவே கொஞ்சம் மழலை கண்கள் என பார்த்த உடனே நம் மனதில் நுழையும் முகமாக இருக்கிறார். அப்பாவின் பின்புலம் இல்லாமல் சினிமாத்துறைக்குள் வந்திருந்தாலும் துருவ் இளைஞர் இளைஞிகள் கொண்டாடும் நாயகனாகவே இருந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

அர்ஜுன் ரெட்டி என்று தெலுங்கில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்ட திரைப்படம் இந்தியில் கபீர் சிங்காகி அங்கும் கோடிக்கணக்கில் வசூல் மழையை பொழிந்தது. இதன் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில்தான் (Adithya varma) துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

பாலாவின் இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் எடுத்து முடிக்கப்பட்ட இந்தப்படம் சொல்லப்படாத காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் க்ரீ சாயா என்பவர் மூலம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இவர்தான் ஒரிஜினல் அர்ஜுன் ரெட்டியில் துணை இயக்குனராகவும் பணியாற்றியவர்.

ஓ பேபி சமந்தாவிற்கு பிறக்கப் போகுது நிஜ பேபி ! கர்ப்பமாக இருக்கிறார் சமந்தா!

Youtube

இப்படத்தின் டீசர் முதல் பார்வை போன்ற எல்லாமே ஹிட்டான நிலையில் தற்போது இதன் இன்னொரு வெற்றியா துருவ் விக்ரம் எழுதி பாடிய எதற்கடி வலி தந்தாய் பாடல் வெளியாகி 50 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது.

தனது அழகால் மட்டும் இல்லாமல் திறமையாலும் அப்பாவை மிஞ்சும் துருவ் விக்ரமின் காதல் ததும்பும் வரிகள் கேட்பவர் மனதை உலுக்குகின்றன. தனது மென்மையான குரலால் துருவ் பாடி அசத்தி இருக்கிறார். முதல் படத்திலேயே பாடகராகவும் கவிஞராகவும் அறிமுகம் ஆகும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

அது துருவ்விற்க்கு கிடைத்திருக்கிறது. இந்தப் பாடலின் ராப் வெர்ஷனை துருவ் எழுதியிருக்கிறார். பாடல் படமாக்கப் பட்ட விதமும் எடிட்டிங் வேலைகளும் சிறப்பாகப் பொருந்தவே பாடல் வெற்றிகரமாக பல லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி சென்றிருக்கிறது. துருவ் விக்ரமிற்கு இளைய தலைமுறையின் வரவேற்பு பலமாகவே இருக்கும் என்பதை இந்த பாடல் நமக்கு தெரியப்படுத்துகிறது.

கையை அறுத்துக் கொள்ளும் அளவிற்கு மதுமிதாவுக்கு அப்படி என்ன நடந்தது? முகநூலில் விளக்கம்..!

உங்களுக்காக அதன் பாடல் வரிகளை இங்கே தருகிறோம்.

எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே
இதற்கு மேல் வலி ஒன்றும் உலகில் இல்லையே

நீதானடி நினைவின் தேனீயே
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே

என்னைக் கொன்று சாய்க்கவே
கொஞ்சம் வந்து போய் விடு
உன்னைப் பார்க்கணும் ம்ம்.. ம்ம்.. 

என் சுவாசம் நீயே என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே எண்ணத்தின் தீயே

ஒரு நொடி நீ கண் மறைத்தாய்
கொஞ்சல் என்று நடக்கிறேன்
மறு நொடி கண் திறந்து பார்க்கையில்
தனிமையில் கிடக்கிறேன்

உன்னைத் தவிர எதுவுமே இஷ்டம் இல்லையே
விட்டுப் போன வேதனை வட்டம் போட்டு என்னை நெருக்கும்

காதல் தீயிலே உந்தன் கண்கள் தேடினேன்
உன்னைப் பார்க்கணும் ம்ம் ம்ம்

என் சுவாசம் நீயே என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே எண்ணத்தின் தீயே

Did distance make it distant
Cause existence got me thinking
Now for instance If I insisted
And answer to these questions..
What were you on a leash?
Which made me a stray
Fromt he street?
Is this what they call defeat?
Cause baby then this time
I’ll bring a fu**ing fleet

என் சுவாசம் நீயே என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே எண்ணத்தின் தீயே

                                                                               

பைக்கில் பறந்த விஜய்..அனுஷ்காவை விட்டு அமெரிக்கப்பெண்ணை மணக்கும் பிரபாஸ்? - சினிபிட்ஸ்!  

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.