கையை அறுத்துக் கொள்ளும் அளவிற்கு மதுமிதாவுக்கு அப்படி என்ன நடந்தது? முகநூலில் விளக்கம்..!

கையை அறுத்துக் கொள்ளும் அளவிற்கு மதுமிதாவுக்கு அப்படி என்ன நடந்தது? முகநூலில் விளக்கம்..!

நன்றாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் வனிதாவின் என்ட்ரிக்குப் பின்னர் மீண்டும் கலவரபூமி ஆகியிருக்கிறது. விடிந்தால் இன்று யார் வனிதாவின் டார்கெட் என்று கவனத்துடன் பார்க்கும் அளவிற்கு வனிதாவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

காதல் சீசனை கவினுக்காக கன்னத்தில் ஹார்டின் போட்டு துவக்கி வைத்த அபிராமி அங்கு தனது விஷயம் போணியாகவில்லை என்ற உடனே முகேன் பக்கம் போய்விட்டார். முகேனும் படித்து படித்து சொல்லியும் நான் ஒருதலைக் காதலி என்று காதல் டார்ச்சர் செய்தவர் அபிராமி. இதே வேலையை ஒரு பையன் பெண்ணிடம் செய்திருந்தால் அவனை ஈவ் டீஸிங்கில் உள்ளே தள்ளி இருப்போம். ஆனால் ஆடம் டீஸிங் பற்றியெல்லாம் யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை போலும்.

அந்த அபிராமிதான் வனிதாவின் பார்வையில் அப்பாவி அபிராமி ஆனார். மதுமிதாவுக்கு (madhumitha) முகேன் மீது சகோதர பாசம் ஏற்படவே அவர் முகேனை அப்போதில் இருந்தே எச்சரித்திருக்கிறார். எச்சரிப்பவர்களை காட்டிலும் நச்சரிப்பவர்களே மேல் என முகேன் முடிவு செய்து விடவே மதுமிதாவால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

ரீல் ஜோடி ரியலாகும் சமயம்.. சின்னத்திரை ரக்ஷிதா - தினேஷ் காதல் சுவாரஸ்யங்கள்

Youtube

கவின் நான்கு பெண்களை காதலித்தது காமெடி ஆனாலும் சாக்ஷி மீது காதல் வந்தது உண்மைதான். தனக்கு பொஸசிவ்னெஸ் வந்ததுமே உஷாரான கவின் மென்மையாக சொல்லி விலகப் பார்த்தார். ஆனால் சாக்ஷி மிக ஆழமாக கவினை நம்பிவிட இனி இங்கிருந்தால் நமக்கு ஆபத்து என லாஸ்லியா பக்கம் சாய்ந்து கொண்டார். எல்லாம் தெரிந்தும் லாஸ்லியா கவினின் ரசிகை என்பதால் அவர் சாய்ந்து கொள்ள வாகாக தோள் கொடுத்தார். இதனால் சாக்ஷி மனம் நோக வெளியேறினார்.

நடந்த எல்லாம் மதுமிதாவின் மனதில் புகைந்து கொண்டே இருந்தது. ஒரு ஆணின் தவறுக்காக பெண் பாதிக்கப்படுவதை அவர் மனம் ஏற்கவில்லை. ஆகவே விஷயத்தில் அவர் சம்பந்தம் இல்லை என்றாலும் தான் சொல்ல வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு சொன்னார். ஆனால் அதுவே அவருக்கு அந்த இளைய கோஷ்டிகளின் வெறுப்பை பெற்றுக் கொடுத்தது.

இளைஞர்கள் ஒரு குழுவானார்கள். சொந்தமாக யோசிக்கும் தர்ஷனும் கூட குழுவில் ஒரு அங்கமானார். சேரனை கிண்டல் செய்த சமயம் தர்சனோ அவரை சேரப்பா என்று வாய்நிறைய அழைத்த லாஸ்லியாவோ கூட கைவினை எதுவும் சொல்லவில்லை. வாய் சொல்லில் வீரனான கவினுக்கு இது வசதியாக போய்விட சேரனை நேரம் கிடைக்கும்போதெல்லாம் மட்டமானவராக மற்றவர்களுக்கு காட்டி வந்தார்.

கிண்டல் என்கிற பெயரில் கவின் மற்றும் சாண்டி பாடும் பாடல்கள் சர்வ நிச்சயமாக உள்ளர்த்தம் வாய்ந்தவைதான். சாக்ஷிக்கு அவர்கள் பாடிய பாடலில் இருந்த உள்ளர்த்தமும் லாஸ்லியாவிற்கான பாடலில் அவர்கள் சொல்லியிருந்த அர்த்தமும் நேரேதிர் ரகம். மொழி தெரியாத சாக்ஷிக்கு இது பொருட்டல்ல ஆனால் நடப்பதை அறிந்த சேரன் மதுமிதாவிற்கு இது உள்ளூர வேதனையை அளித்தது.

பிக் பாஸில் பெண்களை, ஆண்கள் பயன்படுத்துகிறார்கள் : மதுமிதா கிளப்பிய புதிய பிரச்சனை!

Youtube
Youtube

எல்லாவற்றையும் மனதில் வைத்த மதுமிதா இந்த வாரம் கவின் மீது மீண்டும் பழைய குற்றசாட்டை வைக்க அது லாஸ்லியாவை கோபப்படுத்தியது. கவினுக்கு ஒன்று என்றால் லாஸ்லியாவுக்கு தாங்க முடிவதில்லை. இத்தனைக்கும் காரணமான கவினை அனுப்பாமல் பிக் பாஸ் யார் யாரையோ வெளியே அனுப்பிக் கொண்டிருப்பதால் காரணம் புரியவில்லை.

ஹலோ ஆப் டாஸ்கில் மதுமிதா சொன்ன விஷயங்கள் கத்தரிக்கப்பட்டிருந்தன. அவர் காவிரி விஷயத்தை கையில் எடுத்து தண்ணீரை நீயாவது தா மழையே நீயும் என்ன கர்நாடகக்காரனா என்கிற தொனியில் ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார்.

உடனே பெங்களூரு பெண்ணான ஷெரின் இதற்கு மறுப்பு தெரிவிக்க மது தான் சொன்னது சரிதான் என்று வாதிட்டிருக்கிறார். பிக் பாஸ் குறுக்கிட்டு இந்த விஷயத்தை நாங்கள் ஒளிபரப்ப முடியாது ஹலோ ஆப்பிலும் போட முடியாது வேறு கருத்தை சொல்லுங்கள் என்று கேட்க மதுமிதா தான் சொன்னதில் நின்றிருக்கிறார். பழைய பகையை மனதில் வைத்து சக போட்டியாளர்கள் மதுவின் மீது சரமாரியாக குற்றம் சொல்லி நீங்க கேப்டனாக இருக்க தகுதி இல்லாதவர் என்று கூறி இருக்கின்றனர். ஓட்டு வாங்குவதற்காகவே மதுமிதா இதை பேசுவதாக சேரன் கஸ்தூரி தவிர மற்ற எல்லோரும் மதுமிதா மீது பாய்ந்திருக்கிறார்கள்.

உச்சகட்டமாக கவின் அப்படி தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் பற்று இருந்தால் அதனை உயிரை விட்டாவது நிரூபிப்பீர்களா என்று கூறவே அருகில் இருந்த கத்தியை மதுமிதா பயன்படுத்தி ரத்தம் சிந்தி தனது தமிழ்ப்பற்றை நிரூபித்திருக்கிறார். இதுதான் நடந்தது. பிக் பாஸ் சொல்லியும் வேறு கருத்தை சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக மதுமிதா இருந்ததும் தனது கையை தானே கீறி கொண்டதும்தான் மதுமிதாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப காரணமாக அமைந்தது.

ஓ பேபி சமந்தாவிற்கு பிறக்கப் போகுது நிஜ பேபி ! கர்ப்பமாக இருக்கிறார் சமந்தா!

Youtube

சேரனும் கஸ்தூரியும் தவிர வேறு யார் முகத்திலும் தனக்கு விழிக்க பிடிக்கவில்லை என்பதை மேடையிலேயே பதிவு செய்த மதுமிதா இந்த வாரம் கதவை திறந்து வைத்தால் முதல் ஆளாக வெளியேற போகிறேன் என்று சொன்னதை வேறுவிதமாக செய்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது.

மதுமிதா கையை அறுத்துக் கொண்டதற்கான காரணம் இதுதான் என்றாலும் அதற்கு பின்னால் அந்த வாரம் முழுக்க கவின் குழுவினரால் (லாஸ்லியா உள்பட )தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்ட ரணமும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.

இந்த விஷயங்களை முகநூல் பதிவு ஒன்று விளக்கமாக கூறியதால் அந்த முக நூல் பதிவு தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.