பைக்கில் பறந்த விஜய்.. அனுஷ்காவை விட்டு அமெரிக்கப் பெண்ணை மணக்கும் பிரபாஸ்!

பைக்கில் பறந்த விஜய்.. அனுஷ்காவை விட்டு அமெரிக்கப் பெண்ணை மணக்கும் பிரபாஸ்!

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய்(vijay) நடிக்கும் மூன்றாவது திரைப்படம் 'பிகில்' . இந்த திரைப்படம் படப்பிடிப்பு நாள் தொடங்கியதில் இருந்தே பல பரபரப்பான விடியோக்கள் வெளியானது. படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு விபத்தில் நடிகர் விஜய் ஓடி சென்று தனது ரசிகர்களைக் காப்பாற்றிய வீடியோ மிகவும் வைரலானது.

அதனைத் தொடர்ந்து பல விடியோக்கள் வெளியான நிலையில் தற்போது 'பிகில் ' திரைப்படத்திற்காக விஜய் நடுரோட்டில் பைக்கில் பறக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

வருகின்ற தீபாவளிக்கு வெளியாக இருக்கும் 'பிகில்' திரைப்படத்தால் விஜய் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கின்றனர். வெளியான முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் 10 மில்லியன் பார்வைகளை பெற்றிருப்பதே இதற்கு சாட்சி.

தற்போது விஜய் பைக் காட்சி வைரலானதால் அதன் அடிப்படையில் ரசிகர் ஒருவர் ஒரு போஸ்டர் உருவாக்கி இருக்கிறார். இப்போது அந்த போஸ்டரும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஆக மொத்தம் இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

twitter

நீண்ட நாள்களாக திருமணம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்திற்குப் பிறகு இவரது க்ராஃப் யாரும் எதிர்பார்க்காத உயரத்தில் இருக்கிறது. இதனை அடுத்து பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் சாஹோ. ஹாலிவுட் படங்களுக்குப் போட்டியிடும் விதத்தில் இந்தப் படம் படமாக்கப்பட்டிருப்பதாக ட்ரைலர்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்காவிற்கும் பிரபாஸிற்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. பிரபாஸ் அனுஷ்கா எனது தோழி மட்டுமே என்று மறுத்து வந்தார். அனுஷ்காவோ இதனைப் பற்றி எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தார்.

ஆனால் பிரபாஸின் ரசிகர்கள் தொடர்ந்து உங்களுக்கு ஏற்ற ஜோடியாக அனுஷ்கா இருக்கிறார், அவரையே திருமணம் செய்யுங்கள் என்று பிரபாஸிடம் கோரி வருகிறார்கள். இந்நிலையில் பிரபாஸ் அமெரிக்க தொழிலதிபர் பெண்ணை மணக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் பிரபாஸ் - அனுஷ்கா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பிரபாஸின் சகோதரி பிரகதி பேசுகையில் "பிரபாஸ் எப்போதும் எங்களோடு நெருக்கமாக இருப்பார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்களுடன்தான் நேரம் செலவழிப்பார். அவரது ரசிகர்களை போலவே நாங்களும் அவரது திருமணத்திற்காக காத்திருக்கிறோம். அவர் பிசியாக இருப்பதால் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அவரது திருமணத்தை எங்கள் குடும்பத்தார் அனைவரும் பெரிய அளவில் கொண்டாடுவோம் என்று பொதுவாகக் கூறி இருக்கிறார்.

இதனால் பிரபாஸ் திருமணம் பற்றி வெளியான தகவல் உண்மையா இல்லையா என்பது பற்றிய குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த வருட இறுதிக்குள் இந்த தகவல்கள் பற்றிய உண்மைத்தன்மை வெளியாகும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                             

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.