பிக்பாஸ் அபிராமி எடுத்த புதிய அவதாரம்.... முக்கிய பிரபலத்துடன் வெப் சீரிஸில் கூட்டணி!

பிக்பாஸ் அபிராமி எடுத்த புதிய அவதாரம்.... முக்கிய பிரபலத்துடன் வெப் சீரிஸில் கூட்டணி!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. பிக் பாஸ் நிகழ்ச்சி நடிகை மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. 

அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமடைந்தவர் தான் அபிராமி. 

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதற்கு முன்னர் பரதநாட்டியம், மாடலிங் என பல துறைகளிலும் முன்னணியில் இருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை அதிகமாக மக்களிடையே கொண்டு சேர்த்தது.

twitter

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகேன் மீது ஒருதலைக்காதல் கொண்டிருந்த அபிராமி, பிக் பாஸ் இல் இருந்து வெளியே வந்த பின்பு ஊடகங்களில் அதிகளவில் ட்ரெண்டாகி வருகிறார். 

இவருடைய அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்த நடிகை அபிராமி, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் இந்த மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம். 

மேலும் படிக்க - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!

ஆனால் அந்த நேரத்தில் அபிராமியின் படம் ஒன்று வெளியான நிலையில் அவர் அனைவராலும் பாராட்டப்பெற்றார். இவர் அஜித்துடன் நேர் கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது. 

படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. மேலும் அபிராமி மிஸ்.தமிழ்நாடு பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்படத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் நேர்கொண்ட பார்வை  படத்தில் கிடைத்த வரவேற்ப்பை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்தார். 

twitter

இதனை தொடர்ந்து  கஜன் என தலைப்பிடபட்டுள்ள படத்தில் பிக்பாஸ் புகழ் அபிராமி நடிக்கவுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மலேசியா நாட்டுப் படமான இதனை எஸ்.மதன் இயக்குகிறார் என கூறப்பட்டது. 

பின்னர் பட வாய்ப்புகள் சரியாக இல்லாததால் ஹாட்டான போட்ஷூட் படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் அவ்வப்போது வைரலானது. புகைப்படங்கள் மட்டுமின்று பாடல் பாடி வீடியோ வெளியிடுவது என எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தார்.  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச உடையணிவதாக ரசிகர்களினாலும், பின்னர்சக போட்டியாளரான மதுமிதாவினாலும் அபிராமி குற்றம் சாட்டப்பட்டவர். எனினும் இதையெல்லாம் அபிராமி ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.  

 
 
 
View this post on Instagram
 
 

Happy birthday thalaivaaaaa....🙏🏼 #happybirthday #thalaivar

A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

இந்நிலையில் எஸ்.பி.பி.சரண் இயக்கும் வெப் சீரிஸில் பிக்பாஸ் பிரபலம் அபிராமி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பாடகரும் நடிகருமான எஸ்.பி.பி.சரண் வெப் சீரிஸ் ஒன்றின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். 

மேலும் படிக்க - செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !

twitter

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனான இவர் தனது கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக சில திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஏற்கனவே மழை, ஆரண்ய காண்டம், நாணயம், சென்னை 28 மற்றும் சென்னை 28-II என தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த சில திரைப்படங்கள் அவரது தயாரிப்பில் வெளிவந்தது. 

இந்த நிலையில் கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றை எஸ்.பி.பி.சரண் இயக்கவுள்ளார். அதிகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தவெப் சீரிஸின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது. பரபரப்பான இந்த இணையத் தொடரில் அபிராமி வெங்கடாச்சலம் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.  

 
 
 
View this post on Instagram
 
 

Adigaram - next web series (work on progress 😉) poojai clicks 🙏🏼... cya soon with my next new name💋

A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

இது தொடர்பான அறிவிப்பை அபிராமியே அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெள்ளித் திரைக்காகக் காத்திருக்காமல் வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் அபிராமி களமிறங்கவுள்ளார். 

இந்தத்தொடரில் வெள்ளைப்பூக்கள் தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். 

கேபிள் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த வெப் சீரிஸிற்கு தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். தேசிய அளவில் முதல் முறையாக சமகால அரசியலையும், அதன் போக்கையும் மிகத் தீவிரமாய் பேசும் தொடராக அதிகாரம் இருக்கும்’ என்று கூறப்படும் நிலையில் இந்த தொடர் அபிராமிக்கு நல்ல வரவேற்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க - சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு தலைவர் ரஜினிகாந்த்... தர்பார் திரை விமர்சனம்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!