logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் மிகச் சிறந்த நல்ல விஷயங்கள்!

பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் மிகச் சிறந்த நல்ல விஷயங்கள்!

தாங்கள் மணந்துகொள்ளும் ஆண்மகன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று பெண்கள்(women) எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் அது. `கல்யாணப் பரிசு, அந்த ஏழு நாட்கள்` என்ற இரண்டு திரைப்படங்களிலும் வரும் கணவர் மிக நல்லவர். மனைவியை மனமார நேசிப்பவர். காதலனைத் தங்கள் மனைவி மறுமணம் செய்வதற்குக் கூட ஒப்புக்கொள்ளுமளவு பெருந்தன்மையானவர். கணவர் நல்லவர் என்பதால் காதலைத் துறக்க அந்தப் பெண்கள் முடிவு செய்கிறார்கள்.

`சித்திரப்பாவை` நாவலில் வரும் கணவன் நல்லவனல்ல. மனைவியைக் கொடுமைப்படுத்தும் அவனோடு வாழ அந்த நாவலின் கதாநாயகி தயாராக இல்லை. இயன்றவரை பொறுத்துப் பார்த்த அவள் இனிமேல் பொறுக்க இயலாது என்ற முடிவுக்கு வருகிறாள். ஒரு சண்டையில் கணவனாலேயே அவள் தாலி பிடுங்கப் படுகிறது. கணவன் கட்டிய தாலிக்குக் கணவனிடமே மதிப்பில்லாதபோது, தான் அதை மதிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்கிறாள் அவள். தன்னைக் கொடுமைப்படுத்திய கணவனைத் துறந்துவிட்டு, காதலனோடு மீண்டும் தன் வாழ்க்கையை இணைத்துக் கொள்கிறாள் எனத் தம் நாவலை முடிக்கிறார் எழுத்தாளர் அகிலன்.


ஆக நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். பெண்கள் விரும்புவது நல்ல ஆண்மகனைத்தான். குடிகாரர்களையோ அயோக்கியர்களையோ பெண்கள்(women) ஒருபோதும் விரும்புவதில்லை. சந்தர்ப்ப வசத்தால் அப்படிப்பட்டவரோடு வாழ நேர்ந்தாலும் அந்த வாழ்விலிருந்து விடுபடவே அவர்கள் மனம் விழைகிறது.

இன்றைய பெண்கள்(women) கணவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதோடு இன்னொன்றையும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு மிக நியாயமானது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

ADVERTISEMENT

 தங்களின் பணிவாழ்க்கைக்குக் கணவன் தடங்கலாக இருக்கலாகாது என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. இயன்றால் தங்களின் துறைசார்ந்த முன்னேற்றங்களுக்கு அவன் ஊக்க சக்தியாக இருக்க வேண்டும் என்பதும் கூட அவர்களின் எதிர்பார்ப்பு.

 `ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்!` என்ற சிந்தனைப் போக்கு இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. `ஏன் ஒவ்வொரு பெண்ணின்(women) வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கக் கூடாது?` என்ற கேள்வி பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.

 காரணம் ஆண்களைப் போலவே எல்லாத் துறைகளிலும் பெண்களும் வெற்றியடைய விரும்புகிறார்கள். தாங்கள் பெண் என்பது எந்த வெற்றிக்கும் தடையல்ல என்பதை அவர்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்பது கடந்த காலச் சிந்தனைப் போக்கு. படித்திருந்தும் பெண்கள் அடுப்பூத வேண்டியதுதானா என்று பெண்குலம் கேள்வி கேட்கிறது இப்போது. இந்தக் கேள்வியின் பின்னணியில் உள்ள நியாயத்தைப் புறந்தள்ளுவதற்கில்லை.

 இன்றைய நவீன உலகில் பெண்களும்(women) ஆண்களும் தனித்தனியே முன்னேறுவதை விட இணைந்து முன்னேறுவதே சரியாக இருக்கும். பெண்களை ஆண்களோ ஆண்களைப் பெண்களோ நிராகரித்து முன்னேற இயலாது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாகக் கைகோத்து முன்னேறும் காலம் இது. கணவனின் வெற்றிக்கு மனைவியும் மனைவியின் வெற்றிக்குக் கணவனும் ஒருவருக்கொருவர் பின்னணியில் இருக்கும் சூழல் இன்று அத்தியாவசியமாகி விட்டது.

ADVERTISEMENT

இன்றைய உலகின் இயல்பைப் புரிந்துகொண்டால்தான் வாழ்வில் முன்னேற்றத்தையும் நிம்மதியையும் அடைய முடியும். மனைவியின் ஆற்றல்களை நசுக்கிவிட்டு ஒரு கணவன் வாழும் அநியாயம் இனி நடக்காது. நடக்கவும் கூடாது.

கடந்த காலத்தில் திருமணம் என்பது ஒரு பெண்ணின் அத்தனை ஆற்றல்களையும் மூட்டை கட்டி வைக்கும் சம்பவமாகத்தான் இருந்தது. பாடத் தெரிந்த பெண்கள் திருமணத்திற்குப் பின் மேடைகளில் பாடுவதற்கு கணவனால் அனுமதி மறுக்கப்பட்டார்கள். ஆடத் தெரிந்த பெண்களுக்கோ திருமணத்திற்குப் பின்னால் ஆடும் வாய்ப்பு என்பது அறவே இல்லாமலிருந்தது. இப்படிப் பெண்ணின் ஆற்றல்களை ஒடுக்குவது மிக இயல்பானதாக இருந்த காலச் சூழல் காரணமாக அதுபற்றிய குற்ற உணர்வு கூட அந்தக் கணவரிடம் எழுந்ததில்லை என்பதே ஆச்சரியம்.

விதிவிலக்குகள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. நூற்றுப் பதினேழு நாவல்கள் எழுதிய எழுத்தாளர் வை.மு. கோதைநாயகியை அந்தக் காலத்திலேயே மனமுவந்து முன்னிலைப்படுத்தினார் கணவர் பார்த்தசாரதி. நாம் அறிந்து எம்.எஸ். என்ற உயர்தரப் பாடகியின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் உறுதுணையாக இருந்தார் அவர் கணவர் சதாசிவம்.


ஆனால் கடந்த காலக் கண்ணோட்டத்தில் இவர்களெல்லாம் விதிவிலக்குகள். பொதுவான சமுதாயக் கண்ணோட்டத்தில் பரவலாக மனைவி சமையலறையைத் தாண்டி வெற்றி பெறுவதைப் பொறாமையில்லாமல் எந்தக் கணவரும் ஏற்றுக் கொண்டதில்லை. நிர்பந்தத்தால் ஏற்றுக் கொண்டிருந்தாலும் இல்லற வாழ்வில் அந்தக் கணவர் இனிய கணவராக இருந்ததில்லை.

ADVERTISEMENT

இன்று நிலைமை மாறிவருகிறது. முன்னேற்றம் என்பது கணவன் மனைவி என இருவருக்கும் தேவை என்ற எண்ணப் போக்கு பரவலாகி வருகிறது. இல்லறக் கடமைகளைக் கணவனும் மனைவியும் இணைந்து ஏற்கிறபோது இருவருக்குமான இணைந்த முன்னேற்றம் எளிதாகும். சமையல் வேலையைப் பெண்ணுக்கு மட்டும் என வகுக்கும்போதுதான் சம்பாதிக்கும் வேலை ஆணுக்கு மட்டும் என்ற விதி தோன்றுகிறது. பொருளீட்டுவதில் மகளிரும் இயல்பாகப் பங்கு கொள்ள முன்வரும்போது இல்லறக் கடமைகளில் கணவனும் இயல்பாகவே பங்கேற்க முன்வர வேண்டும். இதைப் பலர் இன்று உணரத் தொடங்கிவிட்டார்கள். அப்படி உணர்ந்தவர்கள் இல்லறம் இனிக்கிறது.

பெண் மகிழ்ச்சியடையும் விஷயம்

தான் விரும்பும் ஒரு விஷயத்தை செய்து தன்னை சந்தோஷப்படுத்தும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சியடைகிறாள். 

எந்த செயலாக இருந்தாலும், மற்றவர் உதவியை எதிர்பாராமல் தனிச்சையாக செயல்பட கூடிய ஆண்களை மிகவும் புடிக்கும்.

ADVERTISEMENT

எதற்கெடுத்தாலும், எதிர்மறையாக பேசாமல், விரும்பாத ஒரு காரியத்தை காதலன் செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக வந்து சாரி கேட்கும் அந்தத் தருணம். 

எதிர்பார்க்கும் தருணத்தில் ஏங்கச்செய்து, எதிர்பாராமல் முத்தமிடும் ஆண்களின் விளையாட்டு தணத்தில் பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

என்ன சூழ்நிலையாக இருந்தாலும் தங்களோடு, தங்களுக்கு உறுதுணையாகவும், வாழ்க்கை துணையாகவும் இருக்கும் ஆண்களை விருப்பப்படுகிறார்கள்.

சண்டை வந்து பிரிந்த பின் சில நிமிடங்கள் கழித்து காதலன் போன் செய்து பேசும் போது பெண் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த மாதிரி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.

ADVERTISEMENT

மகிழ்ச்சியான தருணத்தில் தலைகோதும் விரலும், சோக தருணத்தில் தலை சாய மடியும் தரும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சி அடைகிறாள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

29 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT