வில்வ இலையை (vilvam leaf) பற்றி அனைவரும் அறிந்திருப்பார். இதனை பிரபலமாக சிவனுக்கு பூஜை செய்ய பயன்படுத்துவார்கள். எனினும், இந்த வில்வ இலைகள் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த இலைகளை உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். இந்த வில்வ இலை கோவில்களில் எளிதாக கிடைக்கும். எனினும், வில்வ பொடி நாடு மருந்து கடைகளிலும் எளிதாக கிடைக்கும். இந்த வில்வ இலைகள் எப்படி உங்களுக்கு பயன்படும் (benefits) என்பதை இங்கே பார்க்கலாம்!
வில்வ இலைகளின் நன்மைகள்
Pexels
- இந்த இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
- இது இருமல், சளி மற்றும் சுரம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்
- குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றை போக்க இந்த வில்வ இலைகளை பயன்படுத்தலாம்
- குளிர் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளை போக்க இந்த இலைகள் பெரிதும் பயன்படுகின்றது
- இதில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது
- இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்
- இது உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும்
- இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்
- இது உடலுக்கு அமைதியான உணர்வை தரும்
- தலைவலிக்கு இது ஒரு ஏற்ற மருந்தாக இருக்கும்
- இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால், மல சிக்கல், வயிற்று போக்கு மற்றும் அஜீரணம் போன்ற உபாதைகள் குணமடைய இது உதவும்
- இதில் தைராய்டு சுரபி சீராக சுரக்க உதவும் பண்புகள் நிறைந்துள்ளது அதனால் தைராய்டு சீராக செயல்படுகின்றது
- நீரழிவு நோய் இருப்பவர்கள் வில்வ இலைகளை பயன்படுத்துவதால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக இருக்க உதவும்
வில்வ இலைகளின் பயன்பாடுகள்
இந்த அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட வில்வ இலைகளை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.
1. தலை வலியை போக்க
Pexels
- சிறிதளவு வில்வ இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
- பின்னர் இந்த பசியை நெற்றியில் தேய்த்து அப்படியே சிறிது நேரம் விட்டு விட வேண்டும்
- சிறிது நேரத்தில் தலைவலி குறைந்து விடும்
- இது தலைவலிக்கு ஒரு நல்ல நிவாரணியாக செயல்படுகின்றது
- தலைவலிக்கு மட்டுமல்லாது, உடலில் ஏற்படும் வலிகளுக்கும் இந்த முறையை செய்யலாம்
2. உணவால் ஏற்படும் ஒவ்வாமையை போக்க
- சில உடலுக்கு சேராத உணவால் உண்டாகும் ஒவ்வாமையை போக்க, வில்வ இலையை பயன்படுத்தலாம்
- சிறிது வில்வ இலைகளுடன் கல் உப்பை சேர்த்து நன்கு அரைத்து, சாறு போல் செய்து அருந்த வேண்டும்.
- இப்படி செய்தால், உணவால் உண்டாகும் அஜீரணம் மற்றும் வயிற்று போக்கு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை போக்கி விடலாம்
3. சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் ஒவ்வாமை
Pexels
- முன்பு கூறியது போல சிறிது வில்வ இலையை எடுத்து அதனுடன் கல் உப்பை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
- இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பசை போல செய்து கொள்ள வேண்டும்
- இந்த பசியை சருமத்தில் அரிப்பு அல்லது ஒவ்வாமை இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்
- இப்படி செய்து வந்தால், ஓரிரு நாட்களிலேயே நல்ல பலனைக் காணலாம்
4. தினமும் அருந்த வில்வ தேநீர்
- வில்வ இலையை (vilva leaf) நன்கு காய வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்
- அல்லது, நாட்டு மருந்து கடையில் வில்வ இலை பொடியை வாங்கிக் கொள்ளவும்
- தினமும் காலையில் ஒரு கப் தண்ணீரில் சிறிது வில்வ இலை பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு சூடாக இதனை வடிகட்டி அருந்தலாம்
- இப்படி தினமும் அருந்தி வந்தால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புத்துணர்ச்சியைத் தரும்
5. முக அழகிற்கு
Pexels
- தேவைப்படும் அளவு வில்வ இலைகளை எடுத்துக் கொள்ளவும்
- இதனை நன்கு பசை போல அரைத்துக் கொள்ளவும்
- இதனுடன் சிறிது எலுமிச்சைபழச்சாறு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து கொள்ளவும்
- பின்னர் இந்த கலவையை முகத்தில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்ய வேண்டும்
- சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
- இது முகத்தில் இருக்கும் பருக்கள், தழும்பு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்.
மேலும் படிக்க – சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!