logo
ADVERTISEMENT
home / பொழுதுபோக்கு
தமிழ் காதல் படங்கள் ஒரு பார்வை ! (Tamil Romantic Movies In Tamil)

தமிழ் காதல் படங்கள் ஒரு பார்வை ! (Tamil Romantic Movies In Tamil)

சினிமா என்பதே காதலுக்கானதுதான் என்பது போல 90 சதவிகித திரைப்படங்கள் இன்று வரை காதலை விதம் விதமாக சொல்லித் தந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவுதான் காதல் செய்தாலும் போதாத போதையாக திரும்ப திரும்ப வரும் தமிழ்க் காதல் திரைப்படங்கள் நம்மை மேலும் மேலும் காதல் வயப்படுத்துகிறது.

உறைந்து போன பனிப்பாறை மீது விடாமல் பொழியும் சூரிய வெளிச்சம் போல காதல் பலரை மீண்டும் மீண்டும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. தன்னை வாஞ்சையோடு அணுகுபவரை பொத்தி பாதுகாக்கிறது காதல். இப்படியான காதலை தமிழ் சினிமா (romantic movies) எப்படி எல்லாம் கையாண்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

மறக்க முடியாத காதல் திரைப்படங்கள் ( Best Romantic Movies)

தமிழ் திரைப்படங்களில் காதல் என்பது பிரிக்க முடியாதது, அவற்றில் சிறந்தவற்றை பட்டியலிட சில நூறு படங்கள் தாண்டலாம். ஆகவே எல்லோராலும் விரும்பப்பட்ட படங்களை இதில் பார்க்கலாமா.

நெஞ்சம் மறப்பதில்லை (Heart Never Forgets)

பழைய படம் என்றாலும் காதலுக்கு மரியாதை செய்த திரைக்கதைகளில் முக்கியமான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் காதல் காவியங்ககளில் மிக சிறந்த காவியம். முன் ஜென்ம ஞாபகங்கள் பற்றிய உண்மைகளை சொல்லிய திரைப்படம். காதல் ஜென்மங்கள் தாண்டி தொடரும் பந்தம் என்பதை நிரூபித்த திரைப்படம்.

ADVERTISEMENT

 

Wikipedia

வசந்த மாளிகை (Spring House)

சிவாஜி கணேசனின் நடிப்பு திறமையின் எல்லை வரை தரிசிக்க வைத்த திரைப்படம். ஒரு பரம்பரை பணக்கார வாரிசின் வழக்கமான குடி பிளே பாய் குணத்தை ஆனந்தாக அழகாகவே காட்டியிருக்கிறார் சிவாஜி கணேசன். சந்தர்ப்பவசமாக அவர் லதா (வாணி ஸ்ரீ) எனும் பெண்ணை சந்திக்கிறார். அப்பெண்ணிற்கு உதவ அவருக்கே வேலை தந்து பணியில் அமர்த்துகிறார். குடிப்பழக்கத்தால் ஆனந்தின் திருமணம் நிற்கிறது.

ADVERTISEMENT

லதா அவரது குடிப்பழக்கத்தை நிறுத்துகிறார். ஆனந்த் மனதிற்குள் வேறொரு பெண்ணை நேசிக்கிறார். அந்தப் பெண் யார் என்பதை அழகான ஒரு மாளிகை கட்டி அதில் கண்ணாடிகளால் ஆன ஒரு அறைக்கு லதாவை அழைத்து சென்று காட்டும் காட்சி மிக மிக கவிதையானது. குடி போதையில் இருந்து விடுபட்டு காதல் போதையில் விழுந்த ஆனந்தை லதா காதலித்தாரா இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.

Youtube

சொல்லத்தான் நினைக்கிறேன் (Think)

கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படம் காதலின் வேறொரு கோணத்தை காட்டியது. சகோதரிகள் இருவருக்கும் ஒருவர் மேல் ஏற்படும் காதல். தங்கள் வீட்டில் குடியிருக்கும் இளைஞர் சிவகுமார் மீது ஸ்ரீவித்யா மற்றும் சுபா இருவருக்கும் காதல். ஆனால் மூன்றாவது தங்கையான ஜெயசித்ராவை நேசிக்கிறார் சிவகுமார். ஜெயசித்ராவோ தனது தோழியை ஏமாற்றும் கமல்ஹாசனுக்கு பலியாகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

ADVERTISEMENT

Youtube

அலைகள் ஓய்வதில்லை (Waves Never Stop)

மதம் காதலுக்கு தடையில்லை என்பதை சொல்வதற்காகவே நூற்றுக்கணக்கான தமிழ் திரைப்படங்கள் வெளி வந்தன. அதில் முதல் முதலில் பிரபலமாகி பல நாட்கள் ஓடிய திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை. பிராமண குடும்பத்து பையனும் கிறிஸ்துவ குடும்பத்து பெண்ணும் 80களில் காதலித்தால் அவர்கள் முடிவு என்னவாக இருக்கும் என்பதை சொன்ன திரைப்படம். பாரதிராஜா இயக்க கார்த்திக் மற்றும் ராதா அறிமுகம் ஆனார்கள்.

ADVERTISEMENT

viki

நிறம் மாறாத பூக்கள் (Flowers Unchanged)

இதுவும் இன்னொரு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம்தான். உயர்குடியை சேர்ந்த ராதிகா தன்னிடம் வேலை செய்யும் சுதாகரை காதலிக்கிறார். ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்னர் ராதிகாவின் தந்தை ஒப்புக் கொள்கிற சமயம் அவரது வியாபார பங்குதாரர் தன்னுடைய மகனுக்கு ராதிகாவை திருமணம் செய்து வைக்க வாக்கு கொடுத்ததை நினைவூட்டுகிறார்.

இதனிடையில் சுதாகர் 5 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமாகிறார். அந்த துரோகத்தை தாங்க முடியாத ராதிகாவை தன்னுடைய பார்ட்னர் வீட்டிற்கு மனமாறுதலுக்காக அவரது தந்தை அழைத்து செல்கிறார். அங்கே விஜயன் தன்னுடைய இறந்து போன காதலியை மறக்க முடியாமல் தவிக்க ராதிகாவின் காதலும் தோல்வியில் முடிந்ததால் இருவரும் இணைய சம்மதிக்கிறார்கள். சுதாகர் என்ன ஆனார் இறுதியில் என்ன ஆனது என்பது சுவாரஸ்யமான முடிவு. காதலுக்கே காதலை கற்றுக் கொடுத்த முடிவு.

ADVERTISEMENT

Youtube

நெஞ்சத்தை கிள்ளாதே (Don’t Quit)

ஒரு வித்யாசமான காதல் கதைதான். இயக்குனர் மகேந்திரன் அவர்களால் இயக்கப்பட்ட திரைப்படம் நெஞ்சத்தை கிள்ளாதே. ஒரு துறுதுறுப்பான பெண் அண்ணியின் சதியால் காதலித்தவனை கரம் பிடிக்க முடியாமல் அண்ணன் சொல்பவரை மணக்கிறாள். திருமணம் முடிந்தும் கணவனை நேசிக்காமல் காதலை பற்றியே யோசிக்கிறாள். இது புரிந்தும் கணவன் பொறுமையாக காத்திருக்கிறான். அவர்கள் வாழும் அதே அபார்ட்மெண்டிற்கு குடி வருகிறார் அந்த பழைய காதலன்.

காத்திருப்பு காலம் போதும் என முடிவெடுத்த கணவன் மனைவியிடம் சொல்லி விட்டு அவள் வாழ்வை தேர்ந்தெடுக்க சொல்லி விட்டு இடம் மாற இன்னொரு ஊருக்கு செல்கிறான். அந்தக் காதலனோ அவளை வீட்டிற்கு அழைத்து போய் உடல் ஊனமான மனைவியை காட்டுகிறான். என்னை விட உனது கணவன் பல விதங்களில் உயர்ந்தவன் அவனை ஏற்றுக் கொள் என்கிறான். ஏர்போர்ட்டுக்கு ஓடும் மனைவி கணவனை சந்தித்து சேர்ந்தாளா என்பதே கதை. காதல் காத்திருக்கும் என்பதற்கான நிரூபணம்.

ADVERTISEMENT

IMDB

முதல் மரியாதை (Courtesy)

இயக்குனர் பாரதிராஜா அவர்களின் ஒரு வித்யாசமான படைப்பு. மரபுகளை மீறி வயது தாண்டி மலர்கின்ற ஒரு காதலை அத்தனை நேர்த்தியாக கையாண்டிருப்பார். துளி பிசகினாலும் தவறான உறவாக மாறிவிட கூடிய ஒரு உறவை அருவெறுப்பு ஏற்படாமல் அழகாக கொண்டு செல்லும் வித்தை அவருக்கு இருக்கிறது. சதா மனைவியின் கொடுமை பேச்சு வசவுகளை சகித்து வாழும் ஊர் பெரிய மனுஷன் சிவாஜி கணேசன்.. அவருக்கும் அவரது மனைவிக்கும் இருக்கிற மர்மமான உறவு.. நடுவில் நாடோடியாக வந்து சேரும் மீன்கார பெண் ராதா.. அவர் மீது சிவாஜி கணேசனுக்கு எழும் தூய்மையான ஈர்ப்பு… கச்சிதமாக காதலை அதன் தவிப்பை மரபு தாண்டாமல் ஒழுக்கம் மீறாமல் அவர்கள் நடுவே நின்று தவிக்கும் காதலை பாரதி ராஜா செதுக்கியிருப்பார்.

Youtube

ADVERTISEMENT

கடலோர கவிதைகள் (Seaside Poetry)

ஒரு மெத்த படித்த டீச்சருக்கு படிப்பறிவே இல்லாத முரட்டு ஆசாமிக்கும் இடையிலான காதல் என்னவாக முடியும் என்பதை தன்னுடைய கோணத்தில் கவிதையாக காட்டியிருப்பார் இயக்குனர் பாரதி ராஜா. ஜெயிலில் இருந்து வெளியே வரும் சத்யராஜ் ஒரு சந்தர்ப்பத்தில் டீச்சர் ரேகாவை சந்திக்கிறார். எல்லோரும் பயப்படும் தன்னிடம் பயப்படாமல் பேசும் ரேகாவை நேசிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் சொல்லாமல் இருக்கிறார். அடிக்கடி இருவரும் அலையின் சாட்சியோடு சந்திக்கின்றனர். ஒருமுறை டீச்சர் நீங்க என் கடவுள் என்று சத்யராஜ் கத்துவது அழகு.

டீச்சர் மனதிலும் சத்யராஜ் இருக்கிறாரா என்பதை பார்வையாளர்களுக்கு கவிதையாகவே கடத்துகிறார் பாரதிராஜா. வழி தவறிய ஆட்டை மடியில் வைத்திருக்கும் இயேசுவின் படத்தை காட்டி நான் அப்படி ஒரு வழி தவறிய ஆடாக இருந்து நீ மேய்ப்பனாக இருந்தால் என்ன செய்வாய் என்று டீச்சர் கேட்கையில் இருவருக்கும் நடுவே உள்ள காதல் பார்வையாளர்களுக்கு புரிய தொடங்குகிறது. பல திருப்பங்களுக்கு பின்னர் இந்த காதல் இணைந்ததா என்பதே முடிவு.

facebook

ADVERTISEMENT

மௌன ராகம் (Silent Rock)

காதல் பற்றிய அணுகுமுறையை 86களில் கொஞ்சம் மாற்றி கொடுத்த திரைப்படம். யாருமே எதிர்பார்க்காத ஒரு மௌனமான காதலின் குரலை இப்போது வரைக்கும் நமக்குள்ளே ஒலிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். விபத்தாக நடக்கும் திருமணம்.. ஒவ்வாத கணவன்.. மறக்க முடியாத காதலன்.. இதற்கு நடுவே அல்லாடும் சிறு பெண்ணாக ரேவதி. ரேவதியின் உணர்வுகளை புரிந்து கொண்டு விவாகரத்து கொடுக்க காத்திருக்கும் கணவன் மோகன். நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைக்கதையின் ஒரு நீட்சியாக இந்த திரைப்படத்தை நம்மால் காண முடியும். இப்படியாகத்தான் இது எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.

 

quora

ADVERTISEMENT

புன்னகை மன்னன் (King Of Smiles)

கமல்ஹாசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி காதலை கொண்டாட வைத்த ஒரு திரைப்படம். காதலித்தவனை கைப்பிடிப்பதும் இல்லையென்றால் மரணம் என்பதும் என்கிற கருப்புவெள்ளை திரைப்படங்களை வேறு மாதிரி யதார்த்தத்தை நேசிக்க வைத்த திரைப்படம். காதலியோடு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் காதலி மட்டும் இறந்து விட காதலன் கமல் பயங்கர சேதாரங்களோடு பிழைத்துக் கொள்கிறார். அவரை மீட்டெடுக்கும் முயற்சியாக நடனப்பள்ளியை நடத்த வைக்கிறார் ஸ்ரீவித்யா. அங்கே நடனம் கற்றுக் கொள்ள வரும் ரேவதி கமல்ஹாசனை ஒருதலையாக காதலிக்கிறார். பழைய காதலியை விட முடியாமல் தவிக்கும் கமல்ஹாசனுக்கு ரேவதி காதலியாக மாறினாரா என்பதுதான் கதை.

imdb

மூன்றாம் பிறை (Third Birth)

இயக்குனர் பாலுமஹேந்திராவின் கைவண்ணத்தில் உருவான ஓவியம்தான் மூன்றாம் பிறை. சில சமயம் காதல் நம் கைகளில் குழந்தையாய் தவழ்கிற அதே நேரம் திடீரென ஆளாகி நம்மை யார் எனவும் கேட்க வைக்கிறது. இப்படியான கதைக்களம்தான் மூன்றாம்பிறை. ஒரு விபத்தில் ஞாபகங்களை இழந்து ஸ்ரீதேவி ஐந்து வயது பெண்ணாகிறார்.ஸ்ரீதேவையை விபச்சாரத்தில் விற்று விட்டு கடத்தல் கும்பல் தப்பிக்கிறது. அங்கு ஸ்ரீதேவியை சந்திக்கும் கமல்ஹாசன் அவரை காப்பாற்றி தன்னோடு அழைத்து செல்கிறார், தன்னுடைய குழந்தை போல பார்த்துக் கொள்கிறார் ஸ்கூல் வாத்யார் கமல்ஹாசன். அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் நாளன்று போலீஸ் மூலம் ஸ்ரீதேவியின் தந்தை தேடி அங்கு வருகிறார். சிகிச்சை முடிந்து ஸ்ரீதேவிக்கு நினைவு திரும்புகிறது.

ADVERTISEMENT

இந்தக் குறுகிய காலத்தில் நடந்த எதுவும் நினைவில் இல்லாத ஸ்ரீதேவி தந்தையுடன் வீட்டுக்கு பயணமாகிறார். போலீசை பார்த்து ஒளியும் கமல் ஸ்ரீதேவியிடம் தன்னை ஞாபகப்படுத்த செய்யும் செயல்கள் எல்லாம் வீணாகிறது. யாரோ பிச்சைக்காரன் பாவம் என்றபடி ஞாபகங்கள் திரும்பிய தெளிவான ஸ்ரீதேவி வீடு நோக்கி பயணிக்கிறாள். உடைந்த மனதோடும் ஸ்ரீதேவி மீதான அன்போடும் அங்கேயே தவிக்கிறார் கமல்ஹாசன். ஞாபகங்கள் … அவற்றை தொலைத்த ஸ்ரீதேவி தெளிவாக… ஞாபகங்களை மறக்க முடியாத கமல் குழம்புகிறார்… வார்த்தையில் சொல்ல முடியாத கவிதை மூன்றாம் பிறை. ஷோபாவின் நினைவுகள் பற்றி தனக்கு தோன்றியதை படமாக்கிய போது மூன்றாம் பிறை உருவானதாக இயக்குனர் பாலுமஹேந்திரா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

quora

இதயம் (Heart)

ஒரு தலை காதலர்களுக்கெல்லாம் தேசிய கீதமாக மாறிய திரைப்படம். இயக்குனர் கதிரின் இயக்கத்தில் முரளி மற்றும் ஹீராவின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் காதல்படங்களில் மறக்க முடியாத இடத்தை பெற்ற படம். அடுத்தடுத்து வந்த காதல் படங்கள் மற்றும் ஏன் 10 வருடங்கள் கழித்து வந்த படமாக இருந்தாலும் அதிலும் இதயம் முரளி கதாபாத்திரத்தை நினைவு கூறும் காட்சியை வைத்திருப்பார்கள்.

ADVERTISEMENT

தனது காதலை வெளியே சொல்ல முடியாத ஒரு காதல் இதயம் இறுதியில் என்னாகும் என்பதை அற்புதமாக காட்டியிருப்பார்கள். மென்மையான வசனங்கள், ஹைக்கூ கவிதைகள், அழகான ஒளிப்பதிவு இளையராஜாவின் இசை என இதயம் படம் முழுக்க காதலால் மட்டுமே நிரம்பி வழிந்திருக்கும் ஒரு படம்.

smule

குணா (Guna)

இது கமல்ஹாசனின் அடுத்த அற்புத படைப்பு. சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான குணா திரைப்படம் உண்மையான காதலில் இருந்து பிறழ்ந்து கிடக்கும் இதயங்களை சற்றே அழுத்தி மிதித்து நகர்ந்து சென்ற திரைப்படம். மனப்பிறழ்வில் இருக்கும் ஒருவனே தெளிவானவன் சரியானவன் உண்மையானவன் என்பதை மீண்டும் சொன்ன திரைப்படம். அவனுக்கு ஒரு காதல் உருவானால் அதனை எப்படி அவன் அணுகுவான் எப்படி நேசிப்பான் சூது வாதுகள் பொய்கள் துரோகங்கள் நடிப்புகள் போலி முகமூடிக்கு பின்னால் இருக்கும் வன்ம சிரிப்புகள் இல்லாமல் மிக மிக தூய்மையாக ஒரு காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதன் சாட்சியாகும் இந்த திரைப்படம்.

ADVERTISEMENT

imdb

சேது (Sethu)

ஒரு இயல்பான கல்லூரி மாணவனின் வாழ்க்கை ஒருவனின் வன்மத்தால் என்னவாக மாறுகிறது என்பதுதான் கதை. யார் பேச்சும் கேட்காத படிக்காத கல்லூரி தலைவனாக வரும் விக்ரமின் கண்களுக்குள் நாயகி அபிதா தென்படுகிறாள். அதன் பின்னர் அவன் உளவியல் மாறுகிறது. அவளிடம் தன்னுடைய காதலை சொல்ல முயற்சிக்கும்போதெல்லாம் தடுமாறும் விக்ரம் ஒருமுறை அவளை கடத்தி சென்று சொல்கிறான். அப்படி யாரும் சொல்ல முடியாத விதத்தில் சொல்கிறான். சொல்லி முடித்து வெளியே வரும் அவனை வில்லனாக மாறிய எதிரி ஆள் வைத்து அடிக்க.. உயிர் மட்டுமே இருக்க மூளை பாதிப்பில் முடங்குகிறார் விக்ரம். பின்னர் என்ன ஆனது அபிதா உடன் இணைந்தாரா என்பது மீதி கதை.

ADVERTISEMENT

youtube

பாம்பே (Bombay)

இயக்குனர் மணிரத்னத்தின் இன்னுமொரு படைப்பு. மத ரீதியான எதிர்ப்புகள் காதலுக்கு எப்போதுமே இருந்தபடி இருக்கிறது. அதனை மாற்றிக் காட்டும் விதமாகவும் இந்தியாவில் நடைபெற்ற மதரீதியான மிகப்பெரிய வன்முறையை சுட்டிக் காட்டவும் இந்தப் படத்தை பயன்படுத்திக் கொண்டார் இயக்குனர் மணிரத்னம். இஸ்லாமிய பெண்ணான மனிஷா இந்துவான அரவிந்த்சாமியை காதலித்து இருவரும் பாம்பே சென்று வாழ்வை தொடங்குகின்றனர். இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தந்த பெற்றோர்கள் இவர்களை சந்திக்க பாம்பே வருகையில் அந்த மதக் கலவரம் நடக்கிறது. தத்தம் மதம் மீது தீவிரமாக இருந்த பெற்றோர்கள் இறுதியில் என்ன ஆனார்கள் மனிஷா அரவிந்த் சாமியின் இரட்டைக்குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பதுதான் கதை.

Youtube

ADVERTISEMENT

காதலுக்கு மரியாதை (Respect For Love)

97ல் வெளி வந்தாலும் இன்னமும் காதல் என்றாலே இந்த திரைப்படம் எல்லார் மனதிலும் நிழலாடுகிறது. இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் விஜய் மற்றும் ஷாலினி நடித்த திரைப்படம். ஏதோ ஒரு ஜென்மத்தில் உன்ன பார்த்த ஞாபகம் எனும் விஜய்யின் வரிகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. காதலிக்கும் இருவரும் தங்களை நேசிக்கும் குடும்பத்திற்காக தங்களுடைய காதலை தியாகம் செய்கின்றனர். இப்படியான ஒரு காதலை தமிழ் சினிமா பார்த்ததே இல்லை என்பதால் இந்த படம் வெகுவாக பேசப்பட்டது.

 

 

மின்னலே (Minalle)

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் முதல் படம். ஒரு மழைக்கால இரவில் மின்னல் வெளிச்சத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படும் ஆணும் அதன் பின் அவளுக்காக அவன் செய்யும் செயல்களும்தான் கதை. மாதவன், ரீமா சென், மற்றும் அப்பாஸ் நடித்திருக்கும் இப்படத்தில் காதலர்களுக்கு வேண்டிய ரொமான்ஸ் இருக்கும். காதலியை அசத்த மாதவன் செய்யும் முயற்சிகள் இறுதியில் மாதவனை புறக்கணிக்கும் ரீமா அதன் பின்னர் நடக்கும் திருப்பம் என ஒரு கலவையாக இந்த படம் இருக்கும்.

ADVERTISEMENT

ஐந்து நாட்கள் மட்டுமே பழகிய ஒரு ஆணை நம்பி திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதை இந்த படம் வேறொரு பாணியில் சொல்கிறது.

 

7ஜி ரெயின்போ காலனி (7G Rainbow Colony)

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் காதலின் அடுத்த பரிணாமம் பற்றி பேசுகிறது. வழக்கமான குடும்ப பொறுப்பற்ற இந்திய இளைஞன் திடீரென காதல்வயப்படும்போது அது அவனை என்ன செய்கிறது என்பதுதான் கதை. இதில் நாயகன் நாயகிக்கு இடையில் காதலும் ஒரு கதாபாத்திரமாகவே தோன்றியிருக்கும். பொறுப்பற்ற ஒருவனை திருத்தி வேலைக்கு செல்ல வைக்கும் நாயகி ஆனாலும் குடும்பத்தின் மேலிருந்த நேசம் காரணமாக கொஞ்சம் தயங்கும் நாயகியாக சோனியா அகர்வால் படம் முழுக்க நடிப்பில் பின்னியிருப்பார்.

அந்த தயக்கம் அதனை உடைக்க பாடுபடும் இளைஞனாக ரவிகிருஷ்ணா அற்புதமாக நடித்திருப்பார். இறுதியில் நடக்கும் அந்த விபத்து அது அந்தக் காதலிக்கு மட்டுமானதல்ல அவர்கள் காதலுக்கும் ஏற்பட்ட விபத்துதான். ஆனாலும் அவள் நினைவாகவே அவளது இருப்பை வாழ்ந்தபடி இருக்கும் ஒரு காதலன் என நமக்கு காதலின் அற்புதத்தை காட்டும் ஒரு படம்தான் 7 ஜி ரெயின்போ காலனி.

ADVERTISEMENT

 

உன்னாலே உன்னாலே (Because Of You)

மறைந்த இயக்குனர் மற்றும் ஒளி ஓவியர் ஜீவாவின் இயக்கத்தில் வெளியான படம்தான் உன்னாலே உன்னாலே. சொட்ட சொட்ட காதல் மழையில் நனைவது மட்டுமே காதலர்கள் வேலையா என்ன என்பதை பற்றி பேசும்படம். காரணமே இல்லாமல் முடிந்து போகும் சில காதல்கள் மற்றும் அதன் காரணங்களை விரிவாக விவாதிக்கும் படம்.

ஒரு ஆணுக்கு பெண் மேல் ஏன் ஈர்ப்பு உண்டாகிறது என்பதில் இருந்து பெண் ஏன் விலகுகிறாள் என்பது வரை ஆண் பெண்ணின் உளவியல் காரணங்களை அற்புதமாக படம் பிடித்திருக்கிறது உன்னாலே உன்னாலே. வினய் சதா மற்றும் தனிஷாவின் நடிப்பில் வெளியான இந்த படம் வித்யாசமான காதல்கதை என அனைவராலும் இன்று வரை விரும்பப்படுகிறது.

 

ADVERTISEMENT

விண்ணைத் தாண்டி வருவாயா (Beyond The Sky)

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அடுத்த சிறந்த காதல் படம். ஒரு தலை காதல் நபர்களுக்கான திருவிழாவாகவே பார்க்கப்பட்ட படம். தன்னை விட ஒரு வயது அதிகம் உள்ள மேல் வீட்டு பெண் மேல் காதல் வயப்படும் சினிமா இயக்குனர், மதம் மற்றும் மற்ற காரணங்களால் அதனை மறுக்கும் நாயகி பற்றி நான் லீனியர் முறையில் சொல்லப்பட்ட இன்னொரு படம்.

ஒரு கட்டத்தில் நாயகன் மீதான காதலை வெளிப்படுத்தும் த்ரிஷா தமிழகத்தின் தேவதையானார். ஜெஸ்ஸியானார். ஜெஸ்ஸி மீதான ஒருதலை காதலால் தவிக்கும் கதாபாத்திரத்தில் தெளிவாக நடித்திருப்பார் சிம்பு. அவரது இயல்பான உணர்வுகள் படத்திற்கு பலம். மென்மையான ஒளிப்பதிவும் இசையும் சேர்ந்த விண்ணைத் தாண்டி வருவாயா எப்போதும் காதலர்களின் பேவரைட் ஐஸ்க்ரீம் !

 

அமர்க்களம் (Assembled)

இந்த திரைப்படம் தமிழ் சினிமா உலகிற்கே புதிய சந்தோஷத்தை கொடுத்த படம். காரணம் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது காதலில் விழுந்தார்கள். உடனடியாக திருமணமும் செய்து கொண்டார்கள். ஒரு ரவுடிக்கும் அவனால் கடத்தப்படும் ஒரு பெண்ணிற்கும் இடையே ஏற்படும் காதல் தனித்து விடப்பட்ட ரவுடியின் மனதிற்குள் இன்னமும் இருக்கும் குழந்தை ஏக்கங்களை அவள் ஒரு தாயக அணுகுகிறாள். அதுதான் அவனுக்குள் காதல் ஏற்பட காரணம் ஆகிறது. இது போன்ற கதையில் அஜித் ஷாலினி இருவரும் உண்மையாகவே காதலை பிழிந்து தந்திருப்பார்கள்.

ADVERTISEMENT

twitter

3 (Three)

ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். முன்னதாக இவர் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார் என்பது முக்கியமானது. ஸ்ப்ளிட் பர்ஸனாலிட்டி எனும் உளவியல் நோய்க்கு ஆளாகும் தனுஷ் தன்னுடைய காதலியை தன்னிடம் இருந்து காப்பாற்ற என்ன செய்கிறார் என்பது கதை. தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனின் நெருக்கமான நடிப்பிற்காகவே படம் நீண்ட நாட்கள் ஓடியது

 

ADVERTISEMENT

சில்லுனு ஒரு காதல் கதை (Chillunu Is A Love Story)

இயக்குனர் கிருஷ்ணா வின் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படம் சில்லுனு ஒரு காதல். உருகி உருகி காதலிக்கும் ஒருத்தியை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிகிறான் காதலன். அதே சூழ்நிலைகளின் கட்டாயத்தால் வேறொரு பெண்ணை மனைவியாக்கி ஆவலுடன் வாழ ஆரம்பிக்கிறான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நேரத்தில் இவனது பழைய காதலி இவனை சந்திக்க நேர்கிறது. அந்த சந்திப்பை ஏற்படுத்தி கொடுப்பவளே அவனது மனைவிதான். உதடுகள் துடிக்க கணவன் விட்டு விட்டு போய் விடுவானோ என்று கதறிய வேளையில் அந்தக் காதலி இவளிடம் சொல்லி போகும் செய்தி நேர்மையான கணவன்கள் வாய்க்கப் பெற்றவர்களுக்கானது.

 

நீதானே என் பொன் வசந்தம் (You Are My Golden Spring)

காதல் திரைப்படங்கள் பற்றி பேசும்போது இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்களை குறிப்பிடாமல் போனால் தமிழ் சினிமா என்னை மன்னிக்காது. இவர் எடுத்த எல்லா திரைப்படங்களிலும் காதலுக்கென தனி இடம் இருக்கிறது. ஆனாலும் முழுக்க முழுக்க காதலுக்காகவே ஆன திரைப்படம் நீதானே என் பொன் வசந்தம். இந்த திரைப்படத்திற்கு பின்னர் சமந்தாவிற்கு தனியாக ரசிகர்கள் உருவானார்கள். ஒரு காதல் மூன்று பருவங்களில் எப்படி பயணிக்கிறது எப்படி முடிகிறது என்பதுதான் கதை.

 

ADVERTISEMENT

குஷி (Khushi)

இயக்குனர் எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்திற்காக இன்னமும் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ நடிகராக மாறியது நம் விதி. படம் ஆரம்பிக்கும்போதே முடிவை சொல்லும் துணிச்சல் இவருக்கு மட்டுமே இருந்தது. ஈகோவால் துண்டாடப்படும் ஒரு காதல் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை. அடம் பிடித்த பெண்ணாக ஜோதிகாவும் வீட்டுக் கொடுக்காத காதலனாக விஜய்யும் நம்மை நடிப்பால் கட்டி போடுவார்கள்.

 

காதல் (Love)

எந்த வித ஆர்ப்பாட்டங்கள் ஆடம்பரங்கள் எதுவும் இல்லாமல் காதலை காதலாகவே காட்டிய திரைப்படம் இது. இயக்குனர் பபாலாஜி சக்திவேல் இயக்க பரத் மற்றும் சந்தியா இதில் வாழ்ந்திருந்தனர். பணக்கார பெண்ணுக்கு மெக்கானிக் மீது காதல் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை திடுக்கிடும் விதத்தில் படமாக்கியத்தில் வெற்றி பெற்றவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

 

ADVERTISEMENT

அங்காடி தெரு (Store Street)

இயக்குனர் வசந்த பாலனின் கைவண்ணத்தில் வெளியான இன்னுமொரு யதார்த்த காதல் திரைப்படம். தி நகர் ரங்கநாதன் வீதிகளில் இயக்கம் பெரும் வணிக கடைகளில் ஊர் விட்டு ஊர் வந்து குடும்பத்தை காப்பாற்ற வேலை செய்யும் ஒரு பெண்ணும் ஆணும் காதல் செய்ய நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதையும் அவர்கள் எடுக்கும் முடிவையும் நெஞ்சம் அதிரும் வகையில் கதையாக்கி இருப்பார் இயக்குனர். அவருக்கு இணையாக நடிப்பில் பலம் சேர்த்திருப்பார் அஞ்சலி.

 

சமீபத்திய காதல் திரைப்படங்கள் (Latest Romantic Movies)

சமீபத்திய காதல் திரைப்படங்களில் மறக்க முடியாத திரைப்படங்கள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். 

ராஜா ராணி (King Queen)

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளியான முதல் படம் ராஜா ராணி. ஏற்கனவே ஏற்பட்ட காதலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இருவர் குடும்பத்தாரின் விருப்பத்துக்காக திருமணம் செய்வதும் அதன்பின்னர் ஒன்றாக வாழும் சூழலில் ஒருவருக்கொருவர் நேசிக்கத் தொடங்குவதும் என இந்த திரைப்படம் கொஞ்சம் மௌனராகத்தை நினைவு படுத்தினாலும் இதில் காதலை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அற்புதமாக இருக்கும்.

ADVERTISEMENT

ஆர்யா நஸ்ரியா காதலுக்கான காட்சிகள் அத்தனை அழகாக இருக்கும். ஜெய் நயன்தாராவுடனான காதல் இயல்போடு கலந்த பக்குவதால் நிறைந்திருக்கும். இறுதியாய் ஏற்படும் ஆர்யா நயன்தாரா உறவு தெளிவாக முடியும். இந்த திரைப்படம் எப்போதும் காதலர்களுக்கு முக்கியமான படம்தான்.

 

ஓகே கண்மணி (Okay Eyeliner)

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் லிவிங் டுகெதர் வாழ்க்கையையும் 60 வயதுக்கு மேலான பக்குவமான திருமண காதலையும் கலந்து சொல்கிறது. ஒரு பக்கம் துறுதுறுப்பு நிறைந்த துல்கர் சல்மானின் காதல் காட்சிகள் நம் விழிகளை நிறைக்கிறது மறுபக்கம் அல்சைமர் மனைவியை அப்போதிருந்தது போலவே எப்போதும் நேசிக்கும் பிரகாஷ்ராஜின் காதல் நம் கண்களை நனைக்கிறது.

இரண்டு வேறுபட்ட காதல்களில் எது சரியாக இருக்கும் என்பதை நமக்கு கூறும் திரைப்படமே ஓகே கண்மணி. பிசி ஸ்ரீராமின் கேமரா மற்றும் ஏ ஆர் ரஹ்மானின் இசை அதன் பங்கிற்கு பல காதல் மாயங்களை செய்திருக்கும். அவசியம் பார்க்க வேண்டிய காதல் படம்.

ADVERTISEMENT

 

96 (Ninety Six)

இயக்குனர் பிரேம்குமாரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 96. கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படத்தின் தாக்கம் இன்னமும் மறையவில்லை. கடந்து போன காதல் எனும் ஒற்றை வரியைக் கையில் எடுத்துக் கொண்ட படம் அந்தக் காதலை எப்படி கையாள்கிறது என்பதுதான் கதை. பள்ளி பருவம் முதல் காதலிக்கும் ஜானு ராம் சூழ்நிலை காரணமாக பிரிகிறார்கள். ஜானு யதார்த்தத்தை கையில் எடுத்து திருமணம் செய்து கொள்ள ராமோ காதலுக்கு முக்கியம் காதலி இல்லை காதல் மட்டுமே போதுமானது என்று காதல் நினைவுகளோடு வாழ்கிறார். மீண்டும் சந்திக்கும் ஜானும் ராமும் காதலை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்களா இல்லை நகர்கிறார்களா என்பதை விவரமாக நம் கைகளில் முடிவெடுக்க விட்டிருக்கிறது திரைக்கதை.

இதனாலேயே இந்த திரைப்படம் இன்னும் பேசப்படுகிறது. இரண்டே பேர் கொண்ட ஒரு நீளமான இரவும் அவர்களுக்கிடையேயென உரையாடல்களும் தவற விட்ட வாழ்க்கைக்கான வலிகளும் அதனை தொடர்ந்த உணர்ச்சிகளுமாக கதை முழுக்க காதலோடு பயணிக்கிறது. இதற்கு கோவிந்த் வசந்தாவின் இசையும் மஹேந்திரன் ஜெயராஜ்-ஷண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும் மேலும் அழுத்தம் சேர்க்கிறது. நிச்சயமாக காதல் என்பதை அனுபவித்த அனுபவிக்காத அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் 96.

 

ADVERTISEMENT

மெஹந்தி சர்க்கஸ் (Mehendi Circus)

அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரனின் திரைப்படம் காதலர்களுக்கான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. 90களில் கேசட் கடை வைத்திருக்கும் ஜீவா இளையராஜாவின் பாடல்கள் அப்போதைய இளைஞர்களின் காதலை எப்படியெல்லாம் வாழ வைத்தது என்பதற்கு சாட்சியாக இருக்கிறார்.மற்றவர்கள் காதலை வாழவைக்க உதவிய ஜீவாவிற்கு அந்த ஊருக்கு வரும் சர்க்கஸ் பணியாள் மெஹந்தி மீது காதல் வருகிறது. ஜாதி மற்றும் தகுதியின் அடிப்படையில் ஜீவாவின் தந்தை இந்த காதலுக்கு தடையாக இருக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

பியார் பிரேமா காதல் (Pyar Prema Love)

அறிமுக இயக்குனரின் சாயலே இல்லாமல் ஸ்டைலிஷான ஒரு காதல் கதையை நமக்கு பேக் செய்து கொடுத்திருக்கிறார் இலன். எல்லாவற்றிலும் முரண்கள் நிறைந்த ஒரு காதல் ஜோடி ஒன்றாக லிவிங் டு கெதர் வாழ்க்கைக்கு தயார் ஆகிறது. அதன்பின்பான கசப்புகளால் தங்கள் காதலை முடித்துக் கொள்கிற காதலர்கள் பின்னர் மீண்டும் சந்திக்கும்போது என்ன ஆகும் என்பதுதான் கதை. காலம் சொல்லித் தரும் காதல் எப்போதும் நிரந்தரமானது என்பது ஒன் லைனர். இந்தப் படம் இளசுகளின் மனசை கொள்ளை கொண்ட திரைப்படம்.

பரியேறும் பெருமாள் (Periyarum Perumal)

இந்த திரைப்படம் காதலர்களுக்கான திரைப்படம் அல்ல என்றாலும் ஒரு காதல் ஈர்ப்பு ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து போகின்ற வலியை பதிவு செய்கிற திரைப்படம். தாழ்ந்த சாதியை சேர்ந்த பரியேறும் பெருமாளுக்கும் உயர்ந்த ஜாதியை சேர்ந்த ஜோதி என்கிற பெண்ணுக்கும் ஏற்படுகிற நட்பு அதன் பயணத்தை அதன் போக்கில் தொடர முடியாமல் போகிறதுதான் கதை. சாதியின் பெயரால் ஏற்படுத்தப்படும் ரணங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ். பல அவார்டுகள் இந்த திரைப்படத்திற்காக காத்திருக்கிறது.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் (King Of Ispat And Queen Of Heart)

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியான முக்கியமான உளவியல் திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். தலைப்புதான் காதலுக்கு சம்பந்தம் இல்லையே தவிர தலைப்பில் இருப்பது போலவே இஸ்பேட் போன்ற கூர்மையான கோபக்கார வாலிபனுக்கு வாழ்வை அதன் போக்கில் வாழ நினைக்கும் பெண்ணிற்கும் ஏற்படுகிற காதல்தான் கதை. கிட்டத்தட்ட பியார் பிரேமா காதலின் பிளாட்டை நினைவுறுத்தினாலும் சிறுவயதில் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளால் கதாநாயகன் நடவடிக்கை இருப்பதும் நாயகியும் நாயகனும் தங்களை அறியாமலே நேசிப்பதும் பின்னர் நீண்ட முயற்சிக்கு பின்னர் தங்கள் சண்டைகளை முடிவுக்கு கொண்டு வர பிரிய நினைப்பதும் கதை. பிரிந்தார்களா சேர்ந்தார்களா என்பது முடிவு. இன்றைய காதலர்களுக்கு ஏற்ற திரைப்படம் .

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

25 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT